Falsa Fruit Benefits: இந்திய செர்பெட் பெர்ரி பழமா? இதோட நன்மைகளைக் கேட்டா சுவைக்காம விட மாட்டீங்க

  • SHARE
  • FOLLOW
Falsa Fruit Benefits: இந்திய செர்பெட் பெர்ரி பழமா? இதோட நன்மைகளைக் கேட்டா சுவைக்காம விட மாட்டீங்க

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த பழம் குறித்து தெரிந்தவர்கள் குறைவாகவே உள்ளனர். பால்சாவின் குளிர்ச்சித் தன்மையானது கோடைக்காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்றதாக அமைகிறது. இதை பழமாக அப்படியே சாப்பிடலாம் அல்லது சாறு வடிவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற வழிகளில் நன்மை தருகிறது.

இந்திய செர்பெட் பெர்ரி

க்ரீவியா ஏசியாட்டிகா என்றும் அழைக்கப்படும் ஃபால்சா சிவப்பு-ஊதா நிறத்துடன் மற்றும் அவுரிநெல்லிகளைப் போலவே சிறிய, வட்ட வடிவத்தைக் கொண்ட பழமாகும். இந்திய செர்பெட் பெர்ரி அல்லது பால்சா பழமானது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட பழமாகும். இது உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதுடன், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Jamun Benefits: நீரிழிவு முதல் எடை மேலாண்மை வரை… நாவல் பழத்தின் நன்மைகள் இங்கே…

பால்சா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வயிற்று நன்மைக்கு

அடிக்கடி வயிற்றுப் பிரச்சினைகளைச் சந்திக்கும் நபர்களுக்கு, பால்சா பழம் ஒரு சிறந்த தேர்வாகும். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமான அமைப்பின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது. குறிப்பாக, அடிக்கடி நெஞ்செரிச்சல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பால்சா பழம் மிகுந்த நன்மை பயக்கும்.

இரத்த சோகை பிரச்சனைக்கு

இரத்த சோகை ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக அமைவது இரும்புச்சத்து குறைபாடே ஆகும். அதே சமயம், பால்சா பழம் இரும்புச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். எனவே, இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் பால்சா பழத்தை சாப்பிடலாம். பொதுவாக, கர்ப்பிணி பெண்கள் பலரும் இரத்த சோகையால் பாதிக்கப்படுவர். எனவே கர்ப்பிணி பெண்கள் இரத்த சோகை பிரச்சனையிலிருந்து விடுபட பால்சா பழத்தை சாப்பிட வேண்டும். எனினும், கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் பால்சா பழத்தின் அளவை மருத்துவரின் பரிந்துரையில் எடுத்துக் கொள்ளலாம்.

குளிரூட்டும் தன்மை

பால்சா பழத்தின் குளிர்ச்சியான தன்மை காரணமாக, கோடை வெப்பத்தில் பால்சா பழத்தை சாப்பிடலாம். எனவே கோடைக்காலத்தில் தினமும் பால்சா சாறு அருந்துவது உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது.

எலும்புகளை வலுப்படுத்த

பால்சா பழத்தில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை எலும்புகளை பலப்படுத்தி, எலும்பு அடர்த்தியை ஊக்குவிக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் கீல்வாதம் போன்ற கடுமையான பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Cucumber Water Benefits: வெள்ளரி தண்ணீர் குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

நீரிழிவு நோய்க்கு

நீரிழிவு நோயாளிகளுக்கு பால்சா பழம் மிகுந்த நன்மை பயக்கும். இதற்கு பால்சா பழத்தில் குறைந்தளவு கிளைசெமிக் குறியூடு நிறைந்திருப்பதே காரணமாகும். இதன் நுகர்வு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தருகிறது.

சுவாச ஆரோக்கியத்திற்கு

பால்சா பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம், இரும்பு, கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சுவாச மண்டலத்தை மேம்படுத்துவதுடன் சளி, காய்ச்சல், தொண்டைப் புண் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் பால்சா பழத்தை சாப்பிடலாம்.

புற்றுநோயைத் தடுக்க

பால்சா பழம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழமாகும். இவை உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களா ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. இதன் மூலம் புற்றுநோயைத் தடுக்கலாம். மேலும் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.

பால்சா பழத்தை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Papaya in Summer: கோடைக்காலத்தில் பப்பாளி சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன மாற்றங்கள் நடக்கும்?

Image Source: Freepik

Read Next

Jamun Benefits: நீரிழிவு முதல் எடை மேலாண்மை வரை… நாவல் பழத்தின் நன்மைகள் இங்கே…

Disclaimer