Doctor Verified

பிளாக் காபி குடிப்பதன் நன்மைகள்.. மருத்துவர் விளக்கம்..

பிளாக் காபி குடிப்பதால் கல்லீரல், மூளை, இதயம், நீரிழிவு உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 8 முக்கிய நன்மைகளை இங்கே காண்போம்.
  • SHARE
  • FOLLOW
பிளாக் காபி குடிப்பதன் நன்மைகள்.. மருத்துவர் விளக்கம்..


பலருக்கு தினசரி காலை நேரத்தில் பிளாக் காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. சிலர் இதை எடை குறைப்புக்காகப் பயன்படுத்துகிறார்கள், சிலர் தூக்கத்தை விரட்டவும், கவனத்தை அதிகரிக்கவும் குடிக்கிறார்கள். ஆனால் சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் பிளாக் காபி குடிப்பதனால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருப்பதை உறுதி செய்கின்றன. அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற Gastroenterologist டாக்டர் சௌரப் சேதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் காபியின் 8 அறிவியல் ஆதார நன்மைகள் குறித்து பகிர்ந்துள்ளார்.

பிளாக் காபியின் 8 அறிவியல் ஆதார நன்மைகள்

கல்லீரல் பாதுகாப்பு

பிளாக் காபி குடிப்பதால் Fatty Liver, Fibrosis, Cirrhosis போன்ற கல்லீரல் நோய்களின் அபாயம் குறைகிறது. தினசரி 2–3 கப் வரை குடிப்பவர்கள், குடிக்காதவர்களைவிட சிறந்த கல்லீரல் ஆரோக்கியம் கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கல்லீரல் புற்றுநோய் அபாயம் குறையும்

உலகளவில் நடந்த பெரிய அளவிலான ஆய்வுகள், பிளாக் காபி குடிப்பவர்களில் Liver Cancer (Hepatocellular carcinoma) அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவதாக கூறுகின்றன.

மூளை பாதுகாப்பு

தினசரி பிளாக் காபி குடிப்பது, Alzheimer’s மற்றும் Parkinson’s Disease போன்ற மூளை சம்பந்தமான நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. பிளாக் காபியில் உள்ள நரம்பியல் பாதுகாப்பு கூறுகள் (Neuroprotective compounds) மூளை சிதைவுகளைத் தடுக்கும் சக்தி கொண்டவை.

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு

பிளாக் காபி, உடலின் Insulin Sensitivity-ஐ மேம்படுத்துகிறது. இதன் மூலம் Type 2 Diabetes ஏற்படும் அபாயம் குறைகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு அளவோடு குடிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இந்த பதிவும் உதவலாம்: குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள் Black Coffee குடிப்பது நல்லதா.? மருத்துவரின் கருத்து இங்கே..

ஆன்டி-ஆக்ஸிடண்ட் & அலர்ஜி எதிர்ப்பு சக்தி

பிளாக் காபியில் உள்ள Polyphenols போன்ற இயற்கை வேதிப்பொருள்கள், உடலில் உருவாகும் Oxidative Stress-ஐ குறைத்து, அலர்ஜியை (Inflammation) கட்டுப்படுத்துகின்றன. இதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

மிதமான அளவில் பிளாக் காபி குடிப்பவர்கள், குடிக்காதவர்களைவிட இதய நோய், Heart Failure, Stroke போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனநிலை, கவனம் & ஆற்றலை அதிகரிக்கும்

பிளாக் காபி குடிப்பதன் உடனடி விளைவு Alertness, Focus, Concentration ஆகியவற்றை அதிகரிப்பதாகும். அலுவலகப் பணிகள் அல்லது படிப்பில் கவனம் தேவைப்படும் நேரங்களில் பிளாக் காபி பெரிதும் உதவுகிறது.

ஆயுள் நீடிப்பு

பல ஆய்வுகள், தினசரி 2–4 கப் பிளாக் காபி குடிப்பவர்கள், நீண்ட ஆயுள் வாழ்வதாகவும் கூறுகின்றன.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

இறுதியாக..

கருப்பு காபி குடிப்பதால் கல்லீரல், மூளை, இதயம் போன்றவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பது ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மிதமான அளவில் மட்டுமே குடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக குடிப்பது தூக்கக் குறைவு, மனஅழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

Disclaimer: இந்த கட்டுரை பொதுவான ஆய்வுகள் மற்றும் மருத்துவ நிபுணர் பகிர்ந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. ஒவ்வொருவரின் உடல்நிலை வேறுபடும்; எனவே கருப்பு காபி அல்லது உணவு மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

கலோரி கணக்கு தெரியாமல் Diet பண்ணுகிறீர்களா.? உணவுகள் & கலோரி விவரம் இங்கே.!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 27, 2025 14:38 IST

    Published By : Ishvarya Gurumurthy