Fri Sep 11, 2026 | 11:45 PM IST

Doctor Verified

பிரைன் முதல்.. லிவர் வரை.. பிளாக் காபி குடிப்பதன் நன்மைகள் இங்கே.. மருத்துவர் விளக்கம்..

பிளாக் காபி குடிப்பது கல்லீரல், மூளை, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று டாக்டர் சௌரப் சேதி கூறியுள்ளார். இந்த பானத்தின் 8 அறிவியல் ஆதார நன்மைகள் இங்கே.

நீங்கள் தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கப் பிளாக் காபி குடிப்பவரா? அப்படியானால், உங்கள் பழக்கம் வெறும் ஒரு சுவை விருப்பம் அல்ல — அறிவியல் ஆதாரத்துடன் கூடிய ஆரோக்கிய பழக்கம் என்று கூறுகிறார் பிரபல Gastroenterologist டாக்டர் சௌரப் சேதி. அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “பிளாக் காபி குடிப்பதால் மூளை முதல் லிவர் வரை பல முக்கியமான நன்மைகள் கிடைக்கின்றன” என கூறி, அதற்கான 8 முக்கிய ஆரோக்கிய நன்மைகளை பகிர்ந்துள்ளார்.

பிளாக் காபி குடிப்பதன் நன்மைகள்

கல்லீரலை பாதுகாக்கும் சக்தி

பிளாக் காபி குடிப்பது கொழுப்பு கல்லீரல் (Fatty Liver), Fibrosis மற்றும் Cirrhosis போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் லிவர் செல்லுகளை பாதுகாக்கும் திறன் உடையவை.

கல்லீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்

உலகளாவிய ஆய்வுகளின்படி, தினமும் 2–3 கப் பிளாக் காபி குடிப்பவர்கள், லிவர் கேன்சர் ( Hepatocellular carcinoma) ஏற்படும் அபாயத்தை குறைத்துக்கொள்ளலாம்.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

தொடர்ச்சியாக பிளாக் காபி குடிப்பது Alzheimer’s மற்றும் Parkinson’s போன்ற நரம்பியல் நோய்களின் அபாயத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. காபியில் உள்ள கஃபீன் (Caffeine) மூளையின் நரம்பு செயற்பாட்டை தூண்டி விழிப்புணர்வை அதிகரிக்கிறது.

இரத்த சர்க்கரை கட்டுப்பாடு

பிளாக் காபி இன்சுலின் சென்சிட்டிவிட்டியை (Insulin Sensitivity) மேம்படுத்துகிறது. இதனால் டைப் 2 சர்க்கரை நோயின் அபாயம் (Type 2 Diabetes Risk) குறைகிறது.

ஆன்டி-ஆக்ஸிடென்ட் மற்றும் அழற்சி தடுப்பு சக்தி

காபியில் உள்ள பாலிஃபினால்கள் (Polyphenols) உடலில் ஏற்படும் Oxidative Stress மற்றும் Inflammation-ஐ தணிக்க உதவுகின்றன. இதனால் செல்களின் சேதம் குறைந்து, உடல் இயல்பாக ஆரோக்கியமாக செயல்படும்.

இந்த பதிவும் உதவலாம்: காபி குடிக்கும்போது நீங்கள் செய்யும் இந்த தவறுகள் வயிற்றையும் கல்லீரலையும் சேதப்படுத்தும்..

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

மிதமான அளவில் பிளாக் காபி குடிப்பது, இதய செயலிழப்பு (Heart Failure) மற்றும் Stroke அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு நாளில் 2 முதல் 3 கப் வரை எடுத்துக்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.

மனநிலையும் கவன சக்தியும் மேம்படும்

கஃபீன் மூளையில் டோபமின் (Dopamine) அளவை அதிகரிக்கிறது. இதனால் மனநிலை புத்துணர்ச்சி அடைந்து, சக்தி, கவனம், செறிவு ஆகியவை மேம்படும். இதுவே “Morning coffee = Motivation booster” என்ற பழமொழிக்கு காரணம்!

நீண்ட ஆயுள் தரும் பானம்

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாவது — ஒரு நாளில் 2 முதல் 4 கப் பிளாக் காபி குடிப்பவர்கள், பிறரைவிட நீண்ட ஆயுள் பெறுகிறார்கள். அதாவது, பிளாக் காபி ஒரு Longevity drink எனலாம்.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

டாக்டர் சௌரப் சேதி கூறும் முக்கிய ஆலோசனைகள்

* காபியில் சர்க்கரை, பால் சேர்க்காமல் பிளாக் காபி குடிப்பது தான் ஆரோக்கியம் தரும்.

* தினசரி அதிகபட்சம் 3 கப் வரை மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.

* இரவில் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் – அது தூக்கத்தை பாதிக்கலாம்.

இறுதியாக..

பிளாக் காபி வெறும் எழுச்சி தரும் பானம் அல்ல — அது லிவர், மூளை, இதயம், இரத்த சர்க்கரை என பல உறுப்புகளைப் பாதுகாக்கும் இயற்கை மருந்து போன்றது. ஆனால், அளவுக்கு மீறாமல், தினசரி 2–3 கப் வரை மட்டுமே குடிப்பது பாதுகாப்பானது.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தகவலுக்காக மட்டுமே. இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மருத்துவ ஆலோசனை அல்ல. பிளாக் காபி உடல்நலத்திற்கு பொருந்துமா என்பதை தெரிந்துகொள்ள, உங்கள் மருத்துவரை அணுகவும்.

Read Next

எலும்பு வலுவாக இருக்க.. இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 13, 2025 10:46 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content