நட்ஸ் நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், எப்போது சாப்பிடினால் அதிக நன்மை கிடைக்கும் தெரியுமா? எந்த Nut-ஐ எப்போது சாப்பிட வேண்டும் என்பதை Harvard-trained Gastroenterologist டாக்டர் சௌரப் சேதி விளக்கியுள்ளார்.
நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம்
ஒரு கைப்பிடி நட்ஸ் தினமும் போதும். சரியான நேரத்தில் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் உடலுக்குச் சிறப்பாகச் செயல்படும் என்கிறார் மருத்துவர்.
காலை – பாதாம் (Almonds)
காலை எழுந்தவுடன் 2–4 பாதாம் சாப்பிடுவது சிறந்தது. இதில் உள்ள Vitamin E & Magnesium → இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் மூளைச் செயல்பாடு மேம்படும். காலை நேரத்தில் பாதாம் சாப்பிடுவது நாளாந்திர எரிசக்தியை தரும்.
மாலை – வால்நட்ஸ் (Walnuts)
மாலை அல்லது இரவு உணவுக்குப் பிறகு 2 வால்நட் சாப்பிடுங்கள். இதில் உள்ள Omega-3 & Melatonin, மூளை ஆரோக்கியம் மேம்படும். உறக்கத்திற்கும் உதவும். Insomnia உள்ளவர்கள் சாப்பிடலாம்.
மதியம் – முந்திரி (Cashews)
மதிய உணவின் போது முந்திரி சாப்பிடலாம். Zinc & Iron நிறைந்ததால் உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் எனர்ஜி metabolism மேம்படும்.
பிற்பகல் – பிஸ்தா (Pistachios)
மதியத்திற்குப் பிறகு, 4–5 பிஸ்தா சாப்பிடலாம். புரதம்+ நார்ச்சத்து = ஆற்றல் நிலைப்படுத்தியாக செயல்படும். பிற்பகலில் ஏற்படும் பசி மற்றும் சோர்வு குறையும்.
இனிப்பு நேரம் – பீகன் (Pecans)
Dessert-இன் போது பீகன் சாப்பிடலாம். Polyphenols நிறைந்ததால் LDL cholesterol குறையும். மேலும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் குறைக்கும்.
Mid-Morning – பைன் நட்ஸ் (Pine Nuts)
முற்பகல் (10–11 மணி) நேரத்தில் சிறிதளவு பைன் நட்ஸ் சாப்பிடலாம். இதில் உள்ள Pinolenic acid → Appetite Suppressant ஆக செயல்படும். மேலும் கொழுப்பு metabolism மேம்படும்.
எப்போது வேண்டுமானாலும் – வேர்க்கடலை (Peanuts)
வேர்க்கடலை எந்த நேரத்திலும் சாப்பிடலாம். Resveratrol & Niacin → இதயம் + மூளை ஆரோக்கியம். செலவு குறைந்த, அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் நட்ஸ் கிங்.
View this post on Instagram
இறுதியாக..
“நட்ஸ் சாப்பிட நேரம் முக்கியம். அதற்கேற்ப சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்” என்கிறார் ஹார்வர்ட் பயிற்சி பெற்ற டாக்டர் சௌரப் சேதி. தினமும் ஒரு கைப்பிடி கலவையான நட்ஸ் சாப்பிடுவது போதும். எடை கட்டுப்பாடு, இதய ஆரோக்கியம், மூளைச் செயல்பாடு, நல்ல தூக்கம் அனைத்திற்கும் நட்ஸ் உதவுகின்றன.
{Disclaimer: இந்தக் கட்டுரை Dr Saurabh Sethi (Harvard-trained Gastroenterologist) அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் உள்ள தகவல்கள் health awareness நோக்கத்திற்காக மட்டுமே. தனிப்பட்ட உடல்நிலை பிரச்சனைகள் (Diabetes, Cholesterol, Allergy) உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி நட்ஸ் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.}
Read Next
தொப்பையைக் குறைத்து ஹார்மோன்களை சமநிலையில் வைக்க இந்த மூன்று விதைகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Sep 17, 2025 15:01 IST
Published By : ஐஸ்வர்யா குருமூர்த்தி