உடல்நலத்தை பாதுகாக்க சப்பிளிமென்ட்களை (Supplements) எடுத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதே அதிக பயன் தரும் என்று AIIMS மருத்துவ நிபுணரும், ஹார்வர்டு–ஸ்டான்ஃபோர்டு பயிற்சி பெற்ற கேஸ்ட்ரோஎன்டரோலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி அறிவுறுத்தியுள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், பொதுவாகப் பயன்படுத்தப்படும் அஸ்வகந்தா, கிரியேட்டின், மெலட்டோனின், சில்லியம் ஹஸ்க் போன்ற சப்பிளிமென்ட்களை எப்போது எடுத்துக்கொள்வது சிறந்தது என்பதை விளக்கியுள்ளார்.
அஸ்வகந்தா எப்போது சாப்பிட வேண்டும்?
டாக்டர் சேதி கூறியதாவது, “அஸ்வகந்தா எடுத்துக்கொள்ள சிறந்த நேரம் மாலை. இது உடலின் கார்டிசால் (stress hormone) அளவைக் குறைத்து, மனஅழுத்தம் தணிந்து அமைதியாக இருக்க உதவும்” என்கிறார்.
கிரியேட்டின் எப்போது எடுக்கலாம்?
கிரியேட்டின் சப்பிளிமென்டை உடற்பயிற்சி (post-workout) பிறகு எடுத்துக்கொள்வது சிறந்தது. மேலும் எந்த நேரத்தில் எடுத்தாலும் பரவாயில்லை. முக்கியமானது என்னவென்றால் தினமும் ஒழுங்காக எடுத்துக்கொள்வதே எனறு கூறினார் மருத்துவர். என்று மருத்துவர் கூறுகிறார்.
மெலட்டோனின் எப்போது சிறந்தது?
மெலட்டோனின் என்பது தூக்கத்திற்கான ஹார்மோன். தூங்குவதற்கு முன் 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன் எடுத்துக்கொள்வது நல்லது. இது நல்ல தூக்கத்திற்கு உதவும் என்று சேதி கூறுகிறார்.
சில்லியம் ஹஸ்க் எப்போது சாப்பிட வேண்டும்?
சில்லியம் ஹஸ்க் காலை உணவுக்கு முன், வெறும் வயிற்றில் தண்ணீருடன் எடுத்துக்கொள்வது சிறந்தது. இது குடல் இயக்கத்தை சீராக்கி, பசியைக் கட்டுப்படுத்த உதவும் என்று மருத்துவர் சேதி தெரிவித்தார்.
View this post on Instagram
Disclaimer: இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் கல்வி மற்றும் பொது விழிப்புணர்வுக்காக மட்டுமே. இது எந்தவொரு மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கான மாற்றாக கருதப்படக்கூடாது. உடல்நல பிரச்சனைகள் இருப்பின் தகுந்த மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறவும்.