Doctor Verified

2000 ஆண்டுகள் பழமையான குடல் நல பானம்.. தயாரிப்பதும் சுலபம்.. கொம்புசா டீ குறித்து விவரிக்கும் டாக்டர் பால்..

“Tea of Immortality” என்று அழைக்கப்படும் “Kombucha Tea”, ப்ரொபயாட்டிக்ஸ், ஆன்டிஆக்சிடன்ட்ஸ், B வைட்டமின்கள் போன்றவற்றால் நிறைந்துள்ளது. குடல் நலன், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இங்கு அதன் நன்மைகள் மற்றும் வீட்டிலேயே செய்வது எப்படி என்பதைப் அறிந்துக் கொள்வோம். 
  • SHARE
  • FOLLOW
2000 ஆண்டுகள் பழமையான குடல் நல பானம்.. தயாரிப்பதும் சுலபம்.. கொம்புசா டீ குறித்து விவரிக்கும் டாக்டர் பால்..


கஃபே, ஸ்டோர் ஆகியவற்றில் காணப்படும் “கொம்புசா (Kombucha)” டீ, உண்மையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் “Immortality Tea” எனப் பிரபலமாக இருந்தது உங்களுக்குத் தெரியுமா?

சீனாவில் தொடங்கிய இந்த பானம், ஜப்பான், ரஷ்யா, ஐரோப்பா ஆகியவற்றிலும் மருத்துவ பானமாகப் பரவியது. இப்போது உலகம் முழுவதும் குடல் நலத்திற்கு முக்கியமான ப்ரொபயாட்டிக்ஸ் பானம் என பிரபலமாகி வருகிறது என்று டாக்டர் பால் குறிப்பிட்டுள்ளார்.

கொம்புசா டீ செய்வதற்கு என்ன தேவை?

கொம்புசா தயாரிக்க மூன்று பொருட்கள் மட்டுமே போதும்:

* கிரீன் டீ அல்லது பிளாக் டீ

* சர்க்கரை

* SCOBY (Symbiotic Colony of Bacteria & Yeast)

இந்த SCOBY எனப்படும் நுண்ணுயிர்கள் கலவை, இனிப்பான தேநீரை புளிப்பு, நுரையுடன் கூடிய, ப்ரொபயாட்டிக்ஸ் நிறைந்த பானமாக மாற்றுகிறது.

artical  (22)

 

கொம்புசா டீ வழங்கும் நன்மைகள்

* குடல் நலத்தை மேம்படுத்தும்

* செரிமானத்தை எளிதாக்கும்

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

* அலர்ஜி குறைக்க உதவும்

* இதயம், கல்லீரல் ஆரோக்கியத்துக்கும் ஆதரவு தரக்கூடும்

* சோர்வை குறைத்து சக்தி தரும்

ஆனால் இதற்கு இன்னும் பல ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன என்று பால் கூறுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: Green Tea vs Lemon Water – உங்கள் சருமத்தை காப்பாற்றும் சாம்பியன் யார்.?

கொம்புசா குடிக்கும் போது கவனிக்க வேண்டியவை

* சர்க்கரை குறைவாக (5g க்கு குறைவாக) உள்ள பாட்டில்களைத் தேர்வு செய்யவும்

* ஃப்ரிட்ஜில் வைத்திருப்பதே நல்லது (உயிருள்ள ப்ரொபயாட்டிக்ஸ் காக்க)

* Raw & Unpasteurized பானமே சிறந்த பலன் தரும்

* கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியுள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

View this post on Instagram

A post shared by Dr. Pal's NewME (@dr.pals_newme)

Kombucha Tea செய்முறை

தேவையான பொருட்கள்

* கிரீன் டீ அல்லது பிளாக் டீ – 1/4 கப் (அல்லது 4-8 Tea Bags)

* தண்ணீர் – சுமார் 3.7 லிட்டர்

* கருப்பட்டி/சர்க்கரை – 1 கப்

Kombucha Starter Liquid – 1-2 கப்

SCOBY – 1

செய்முறை:

* தண்ணீரை காய்ச்சி தேயிலை & சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

* குளிர்ந்ததும் கண்ணாடி ஜார் அல்லது ஸ்டீல் ஜாரில் வடிகட்டி வைக்கவும்.

* அதில் SCOBY & Starter liquid சேர்க்கவும்.

* பருத்தி துணி அல்லது காபி ஃபில்டரை மூடி ரப்பர் பேண்ட் போட்டு வைக்கவும்.

* அறை வெப்பத்தில் 7-14 நாட்கள் புளிக்க விடவும்.

* அவ்வளவு தான் Kombucha Tea ரெடி

Read Next

சுகர் இல்லாத ட்ரை ஃபுரூட் ரெசிபி.. இப்படி செஞ்சி சாப்பிடுங்க! நிபுணர் சொன்னது

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்