ஜிம்மிற்கு செல்வோர் மத்தியில் அதிகம் பேசப்படும் சப்ளிமெண்ட்களில் ஒன்றாக கிரியேட்டின் (Creatine Supplements) உள்ளது. பலர் இது உடற்பயிற்சி செய்பவர்களுக்கே என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மையில், இதனை பொதுவாக உடல்நலம் காக்கவும் பயன்படுத்தலாம்.
உணவியல் நிபுணர் மற்றும் ஏஞ்சல்கேர் – ஏ நியூட்ரிஷன் அண்ட் வெல்னஸ் சென்டரின் இயக்குநரான அர்ச்சனா ஜெயின், கிரியேட்டின் சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்வதால் கிடைக்கும் பல நன்மைகள் குறித்து விளக்குகிறார்.
எடையைக் குறைக்க உதவும்
கிரியேட்டின் உட்கொள்வது உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்கிறது. இதனால், கலோரி எரிப்பு வேகமாக நடக்கிறது. தொடர்ந்து உடற்பயிற்சியுடன் சேர்ந்து எடுத்தால், எடை குறைப்பு வேகமாகக் காணப்படும்.
Brain Fog நீக்கும்
நவீன வாழ்க்கை முறையில் பலருக்கும் மூளை சோர்வு, மன அழுத்தம், நினைவாற்றல் குறைபாடு ஏற்படுகிறது. கிரியேட்டின் சப்ளிமெண்ட் - நினைவாற்றலை கூர்மைப்படுத்துகிறது, பணிகளில் கவனத்தை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது, Brain Fog- ல் இருந்து விடுபட உதவுகிறது
உடலுக்கு சக்தி & சகிப்புத்தன்மை
கிரியேட்டின் உட்கொள்வதால் - தசைகள் வலுவாகும், சோர்வு, பலவீனம் குறையும், உடலுக்கு எனர்ஜி புஷ் கிடைக்கும், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யும் சக்தி அதிகரிக்கும். இதனால், ஜிம்மிற்குச் செல்லும் இளைஞர்களுக்கு மட்டும் அல்லாமல், சோர்வு அடிக்கடி வரும் அனைவருக்கும் இது பயன் தரும்.
ஹார்மோன் சமநிலையை பேணும்
கிரியேட்டின், உடலின் ஹார்மோன்கள் சீராக இயங்க உதவுகிறது. ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகள் குறையும். குறிப்பாக, தசைகள் ஆரோக்கியமாகவும், உடல் சமநிலையாகவும் இருக்கும்.
எலும்புகளை வலுப்படுத்தும்
அதிகம் பேசப்படாத இன்னொரு நன்மை என்னவென்றால், கிரியேட்டின் எலும்புகளையும் வலுப்படுத்துகிறது. வயது முதிர்வின் போது வரும் எலும்பு பலவீனத்தைத் தடுக்க உதவுகிறது.
கிரியேட்டினை எப்படி உட்கொள்வது?
* தினமும் 3 கிராம் வரை கிரியேட்டின் எடுத்துக்கொள்ளலாம்.
* தொடர்ந்து அதிக காலம் உட்கொள்ளக் கூடாது.
* உணவியல் நிபுணர் / பயிற்சியாளர் ஆலோசனை பெற்ற பிறகே தொடங்க வேண்டும்.
* தண்ணீர் உட்கொள்ளுதல் அதிகமாக இருக்க வேண்டும்.
இறுதியாக..
கிரியேட்டின் சப்ளிமெண்ட்ஸ், உடலுக்கு ஆற்றல், எடை குறைப்பு, ஹார்மோன் சமநிலை, எலும்பு வலிமை மற்றும் மூளை ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது. ஆனால், எந்த சப்ளிமெண்டையும் போல இதையும் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் மட்டுமே தொடங்க வேண்டும்.