உடல் எடையை குறைக்க விரும்புவோர் பலரும் “Diet” என்று சொல்லிக்கொண்டு பல உணவுகளை தவிர்த்துவிடுகிறார்கள். ஆனால் உண்மையில் எவ்வளவு கலோரி எடுத்துக்கொள்கிறோம், எவ்வளவு எரிக்கிறோம் என்பதே உடல் எடை குறைய முக்கிய காரணம் என்கிறார் Wellness Coach ராகனியா. சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நம் அன்றாட உணவுகளின் கலோரி விவரங்களை பகிர்ந்துள்ளார்.
உணவு & கலோரி விவரங்கள்
* சப்பாத்தி (1 piece) – 100 முதல் 150 கலோரி
* இட்லி (1 piece) – 150 கலோரி
* 1 கப் வெள்ளை அரிசி – 200 கலோரி
* 1 கப் சிக்கன் கிரேவி – 250 முதல் 300 கலோரி
* பஜ்ஜி (4 pieces) – 400 முதல் 500 கலோரி
* 1 ப்ளேட் பானி பூரி – 350 கலோரி
* 1 ப்ளேட் சிக்கன் பிரியாணி – 500 முதல் 600 கலோரி
* சமோசா (2 pieces) – 400 கலோரி
* 1 ப்ளேட் ஃப்ரைட் ரைஸ் – 400 கலோரி
கலோரி கணக்கின் அவசியம் என்ன.?
பெரும்பாலானோர் “இது குறைவான சாப்பாடு தான்” என்று நினைத்து உண்ணும் உணவுகளில், அதிக கலோரி மறைந்திருக்கும். உதாரணத்திற்கு, 2 சமோசா சாப்பிட்டாலே சுமார் 400 கலோரி உடலில் சேர்கிறது. அதே சமயம் 2 சப்பாத்தி மற்றும் ஒரு காய்கறி குருமாவை சாப்பிட்டால் அதே அளவு பசியை அடக்கியும், குறைவான கலோரி மட்டுமே சேரும்.
நிபுணர் பரிந்துரை
* தினமும் எவ்வளவு கலோரி தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். (BMR கணக்கீடு மூலம் தெரிந்து கொள்ளலாம்)
* உண்ணும் உணவின் போஷண மதிப்பு மற்றும் கலோரி இரண்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* எண்ணெய், பொரித்த உணவுகளை குறைக்க வேண்டும்.
* அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறி, பழங்கள், கீரைகள் போன்றவை குறைந்த கலோரியுடன் அதிக நன்மை தரும்..
View this post on Instagram
இறுதியாக..
உடல் எடையை குறைக்க முயற்சி செய்வது சிரமமான விஷயமாக இருந்தாலும், கலோரி கணக்கு வைத்துக் கொண்டால் அது மிகவும் எளிதாகிவிடும். எந்த உணவு எத்தனை கலோரி என்பதைக் கணக்கில் கொண்டு, சீரான உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால், தேவையற்ற கொழுப்பைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ முடியும்.
Disclaimer: இந்த கட்டுரையில் பகிரப்பட்டுள்ள கலோரி விவரங்கள் பொதுவான தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டவை. ஒவ்வொருவரின் உடல் நிலை, வயது, பாலினம், உடற்பயிற்சி நிலை போன்றவற்றின் அடிப்படையில் கலோரி தேவைகள் மாறுபடும். எனவே, தனிப்பட்ட உணவுக் கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைக்கு நிபுணர் மருத்துவர் அல்லது டைட்டீஷியனை அணுகவும்.
Read Next
கால் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்.. வலிமையான கால்களுக்கு இந்த 6 உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Sep 26, 2025 17:52 IST
Published By : Ishvarya Gurumurthy