Thu Oct 29, 2026 | 10:47 AM IST

Coffee for Skin: காபி குடிப்பதால் சரும ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? உண்மை என்ன?

அதிகமாக காபி குடிப்பதால் முகத்தின் பொலிவு குறையுமா? காபி சருமத்தை கருமையாக்குமா? இந்தக் கேள்விகளுக்கான சரியான பதில்களை நிபுணர்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
Coffee for Skin: காபி குடிப்பதால் சரும ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? உண்மை என்ன?Coffee for Skin: காபி குடிப்பதால் சரும ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? உண்மை என்ன?

Drinking coffee really affect your skin health: நம்மில் பலருக்கு காபி வெறும் பானம் அல்ல; அது ஒரு உணவாக உள்ளது. காலையில் ஒரு கப் காபி குடிக்கவில்லை என்றால், அன்றைய நாள் நகலாது. இன்னும் சிலர் காபி குடிப்பதை மிகவும் விரும்புகிறார்கள், அவர்கள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை காபி குடிப்பார்கள். இருப்பினும், சுகாதாரக் கண்ணோட்டத்தில் இது பாதுகாப்பானது அல்ல.

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 2 கப் தண்ணீர் குடிப்பது பாதுகாப்பானது. ஆனால், இதை விட அதிகமாக காபி உட்கொள்வது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். நீண்ட காலமாக காபி அதிகமாக குடிக்கும் பழக்கம் இருந்தால், நீங்கள் பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.

இந்த பதிவும் உதவலாம்: Beetroot Leaves For Weight loss: உடல் எடையை குறைக்க பீட்ரூட் இலை உதவுமா?

அதிகப்படியான காபி குடிப்பது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். நீங்கள் அதிகமாக காபி குடித்தால், உங்கள் சருமத்தின் பொலிவை குறைக்கலாம். ஆனால், இது உண்மையில் நடக்கிறதா அல்லது இது வெறும் கட்டுக்கதையா? இதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

காபி குடித்தால் சரும பொலிவு குறையுமா?

நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் தினமும் அதிகமாக காபி குடித்தால், அது உங்கள் சருமத்தின் பளபளப்பைக் குறைக்கும். இதன் காரணமாக, சருமத்தின் மெலனின் வித்தியாசம் ஏற்பட்டு, சருமத்தில் மந்தமான தன்மை ஏற்படும். ஆனால், வரம்பிற்குட்பட்ட காபி குடிப்பதன் மூலமும், உணவோடு சருமப் பராமரிப்பையும் கடைப்பிடிப்பதன் மூலமும் காபியின் தீங்கைக் கட்டுப்படுத்தலாம்.

காபி குடிப்பதால் சருமத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

Benefits Of Coffee: रोज पीएं एक कप कॉफी, कम हो जाएगा इन बीमारियों का खतरा -  Health 5 Benefits Of Drinking Coffee Daily know hereBenefits Of Coffee: रोज पीएं एक कप कॉफी, कम हो जाएगा इन बीमारियों का खतरा - Health 5 Benefits Of Drinking Coffee Daily know here

நீரிழப்பு ஏற்படலாம்

நீங்கள் அதிகமாக காபி குடித்தால், உங்கள் சருமம் வறட்சியடையும். நீரிழப்பு காரணமாக, தோல் மந்தமாகத் தோன்றும். இதன் காரணமாக உங்கள் இயற்கையான பளபளப்பு குறையலாம். இதைத் தவிர்க்க, காபி உட்கொள்ளலுடன் தண்ணீர் உட்கொள்ளலைப் பராமரிக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: Badam Pisin Benefits: மழைக்காலத்தில் பாதாம் பிசின் சாப்பிடலாமா? நன்மை தீமைகள் இங்கே!

மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிக்கும்

அதிகமாக காபி குடிப்பது கார்டிசோல் ஹார்மோனை அதாவது ஸ்ட்ரெஸ் ஹார்மோனை அதிகரிக்கும். இதன் காரணமாக எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கலாம். எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பதால் தோல் வெடிப்பு மற்றும் மந்தமான தன்மை அதிகரிக்கும். இதைத் தவிர்க்க, உங்கள் காஃபின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தவும். அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது காபி குடிக்க வேண்டாம்.

தூக்க சுழற்சி இடையூறு

சிலர் இரவில் அல்லது மாலையில் காபி குடிக்க விரும்புகிறார்கள். ஆனால் இந்த பழக்கம் தூக்க சுழற்சியை தொந்தரவு செய்யலாம். மாலையிலோ அல்லது இரவிலோ காபி குடிப்பது தூக்க முறையைக் கெடுக்கும். இது இரவில் சருமம் குணமடைவதை கடினமாக்குகிறது. இது நிறத்தில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இதைத் தவிர்க்க, மாலைக்குப் பிறகு காபி குடிக்க வேண்டாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cardamom Coffee: காபியில் ஒரு ஏலக்காயை தட்டிப்போட்டு குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரிக்கலாம்

அதிகமாக காபி குடிப்பதால் ஆரம்பகால வயதான பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், தோலில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றும். காபியில் பாலிஃபீனால்கள் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் அதிகரிப்பு காரணமாக, தோல் திசுக்கள் சுருங்க ஆரம்பிக்கின்றன மற்றும் ஆரம்ப வயதான பிரச்சனை ஏற்படலாம். இதைத் தவிர்க்க, காபியில் சர்க்கரை மற்றும் கிரீம் தவிர்க்கலாம். மேலும், நீங்கள் கருப்பு காபி குடிக்கலாம்.

இந்த வழியில், காபி அதிகப்படியான நுகர்வு தோல் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, காபி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்துங்கள்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Cardamom Coffee: காபியில் ஒரு ஏலக்காயை தட்டிப்போட்டு குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.