Weight Loss Mistakes: இரவு உணவுக்குப் பிறகு மறந்தும் இந்த தவறை செய்யாதீர்கள் எடை இன்ச் கூட குறையாது!

  • SHARE
  • FOLLOW
Weight Loss Mistakes: இரவு உணவுக்குப் பிறகு மறந்தும் இந்த தவறை செய்யாதீர்கள் எடை இன்ச் கூட குறையாது!

நாம் அறியாமல் செய்யும் சில சிறிய தவறுகள் நமது உடல் எடை குறைப்பை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? குறிப்பாக, இரவு உணவிற்குப் பிறகு இந்த தவறுகளை நீங்கள் செய்தால், எடை குறைப்பதில் நீங்கள் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். அந்தவகையில், இரவு உணவிற்குப் பிறகு எந்தெந்த தவறுகளைச் செய்யக்கூடாது என்பதை பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

இந்த பதிவும் உதவலாம் : முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடல் எடை விரைவாகக் குறையும்

உடல் எடையை குறைக்க இரவு உணவிற்கு பிறகு செய்யக்கூடாதவை

டின்னர் சாப்பிட்ட உடனேயே தூங்க செல்வது

அலுவலகம் அல்லது வேறு வேலை செய்யும் மக்கள் இரவு வீட்டிற்கு வந்தவுடன், சற்று ஓய்வெடுக்க நினைப்பது இயல்பு. வேலைப்பளு காரணமாக சோர்வாக உணர்வதால், இரவு உணவு உண்டவுடன் சற்று படுத்து ஓய்வெடுக்க விரும்புகிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

உடல் எடையை நீங்கள் குறைக்க விரும்பினால், டின்னர் சாப்பிட்ட உடனேயே தூங்க செல்வதை தவிர்ப்பது நல்லது. இதனால், நெஞ்செரிச்சல், வாயு தொல்லை, வயிறு உப்புசம் போன்றவை ஏற்படும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், சாப்பிட்ட பிறகு 10-15 நிமிடங்கள் நடக்கவும். இது கண்டிப்பாக உடல் எடையை குறைக்க உதவும்.

இந்த பதிவும் உதவலாம் : உடல் எடையை குறைக்க டீ உதவுமா? வாங்க பாக்கலாம்…

காஃபின் உட்கொள்ள வேண்டாம்

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இரவு உணவிற்கு பிறகு டீ, காஃபி போன்ற காஃபின் கலந்த பானங்களை உட்கொள்ள வேண்டாம். இரவில் காஃபின் உட்கொள்வது செரிமான சக்தியை பலவீனப்படுத்தும். இதன் காரணமாக செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டு, வளர்சிதை மாற்றமும் குறையத் தொடங்குகிறது.

எனவே, காஃபின் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இரவு உணவிற்குப் பிறகு காஃபின் உட்கொண்டால், உடல் எடையைக் குறைப்பதில் சிரமம் ஏற்படலாம். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இரவு உணவிற்குப் பிறகு காஃபின் உட்கொள்ள வேண்டாம்.

சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது

உணவு உண்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில், சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். இது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும் மற்றும் எடை அதிகரிக்க வழிவகுக்கும். உணவு உண்ட பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால், உடல் எடையை குறைப்பதில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.

இந்த பதிவும் உதவலாம் : வார இறுதியில் எடை அதிகரிப்பு? இதை தவிர்க்க 7 குறிப்புகள் இங்கே

இனிப்புகளை உட்கொள்ள வேண்டாம்

பெரும்பாலானோருக்கு உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஆனால், நீங்கள் எடையை குறைக்க விரும்பினால், இனிப்பு உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இவற்றில் அதிக கலோரிகள் உள்ளன. இரவு உணவிற்குப் பிறகு இனிப்புகளை உட்கொண்டால், அது உங்கள் எடையை அதிகரிக்கக்கூடும்.

மது அருந்த வேண்டாம்

பலர் இரவு உணவுக்குப் பிறகு மது அருந்தத் தொடங்குகிறார்கள். ஆனால், மது அருந்துவது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இரவு உணவுக்குப் பிறகு மது அருந்தினால், அது உங்கள் எடையை அதிகரிக்கக்கூடும். உங்கள் உடல் எடையை இழக்க விரும்பினால், இரவு உணவிற்குப் பிறகு மது அருந்த வேண்டாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Weight Loss Tips: சட்டுனு உடல் எடையை குறைக்க பசு நெய்யை இப்படி சாப்பிடுங்க!!

Disclaimer