Is cranberry juice good for your gut health: நல்ல குடல் ஆரோக்கியம் பல்வேறு உடல் உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது அவசியமாகும். குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கையாள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. அவ்வாறு குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க சில உணவுகளுடன், பானங்களை அருந்துவது அவசியமாகிறது. அதன் படி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பானங்களில் ஒரு புளிப்பு, இனிப்பு பானமாக குருதிநெல்லி சாறு அமைகிறது.
இது குறித்து, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் கரண் ராஜன் அவர்கள் சமீபத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதில் சிறந்த குடல் ஆரோக்கியத்திற்காக குருதிநெல்லி சாறு எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியுள்ளார். மேலும், குடல் நுண்ணுயிரிக்கு குருதிநெல்லி சாறு தரும் ஆரோக்கியமான மற்றும் ஆச்சரியமான நன்மைகள் குறித்தும் விளக்கியுள்ளதைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Cranberry Benefits: UTI பிரச்னை முதல்… புற்றுநோய் வரை… குருதிநெல்லி நன்மைகள் இங்கே…
கிரான்பெர்ரி சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்
டாக்டர் கரண் ராஜன் அவர்களின் கூற்றுப்படி, குருதிநெல்லியில் காணப்படக்கூடிய பாலிபினால்கள் எனப்படும் சக்திவாய்ந்த சேர்மத்தின் குடலை அதிகரிக்கும் பண்புகளை விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது, குருதிநெல்லி சாற்றில் இருந்து குடல் நுண்ணுயிரி மிகவும் பயனடைகிறது. ஏனெனில் இவை நன்மை பயக்கும் பாக்டீரியா விகாரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
மேலும் அவர், “குருதிநெல்லி சாறு குடிக்கும்போது, எந்தவொரு உணவிலிருந்தும் பெறக்கூடிய மிகவும் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களில் ஒன்றான பாலிஃபீனால்களைப் பெறலாம். இதன் இயற்கையான தாவர ஆக்ஸிஜனேற்றிகள், இவை வீக்கத்தைக் குறைக்கவும், மேலும் சில குடல் ஆரோக்கிய நன்மைகளை வழங்கவும் உதவுகிறது” என்று கூறியுள்ளார்.
கிரான்பெர்ரியில் காணப்படக்கூடிய பாலிஃபீனால்களின் வகை, அதன் துடிப்பான நிறத்தைத் தருகிறது. இவை புரோந்தோசயனிடின்கள் என்றழைக்கப்படுகிறது. இந்த பாலிஃபீனால்கள் உடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது. இவை சிறந்த குடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. உண்மையில், கிரான்பெர்ரிகளின் பாலிஃபீனால்கள் ப்ரீபயாடிக்குகளாக செயல்பட முடியும் என்பதற்கான வளர்ந்து வரும் சான்றுகள் உள்ளது. அடிப்படையில், இவை நல்ல பாக்டீரியாக்களுக்கான உணவாகும். எனவே இவை பிஃபிடோபாக்டீரியம், அக்கர்மேன்சியா மற்றும் லாக்டோபாகிலஸ் போன்ற நன்மை பயக்கும் விகாரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது” என்று கூறியுள்ளார்.
குருதிநெல்லி சாப்பிடுவதற்கான சிறந்த வழி
ஒட்டுமொத்த செயல்திறன், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல் போன்றவை பழத்தை று உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. கூடுதலாக, பல்வேறு வகையான பாலிஃபீனால்களைக் கொண்ட உணவுடன் குடல் ஆரோக்கியம் செழித்து வளர்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Cranberries Benefits: குருதிநெல்லியை சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்!
மேலும் மருத்துவர் ரஞ்சன் அவர்களின் கூற்றுப்படி, “கிரான்பெர்ரியை நேரடியாக சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது இதை பழங்களை ஸ்மூத்தியில் கலப்பதிலிருந்தோ கிடைக்கக்கூடிய நன்மைகள், கிரான்பெர்ரி சாற்றில் நார்ச்சத்து இல்லாததால் அதை விட மிக அதிகமாகும். ஆனால், எப்போதாவது, தாவர நிறமிகளை அதிகரிக்க இது ஒரு வசதியான வழியாக அமைகிறது. மேலும், பாலிபினால்களின் அதிக செறிவுள்ள உணவை சாப்பிட விரும்பினால், அடர் சிவப்பு, ஊதா அல்லது நீல நிற தாவரங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
பரந்த அளவிலான வண்ணமயமான தாவரங்களை சாப்பிட்டால், பல்வேறு வகையான தாவர நிறமிகள் மற்றும் பாலிபினால்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். வெவ்வேறு பாலிபினால்கள் ஒவ்வொன்றும் குடல் நுண்ணுயிரியலில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, ஒவ்வொன்றும் வெவ்வேறு நுண்ணுயிரிகளை ஆதரிக்க உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு ஆரோக்கியமான வழிகளில், கிரான்பெர்ரி சாறுகள் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் 1 கிளாஸ் கிரான்பெர்ரி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
Image Source: Freepik