Strawberry For Kidney Patients: சிறுநீரக நோயாளிகள் ஸ்ட்ராபெர்ரி சாப்பிடலாமா? என்னனு தெரிஞ்சிக்கோங்க

  • SHARE
  • FOLLOW
Strawberry For Kidney Patients: சிறுநீரக நோயாளிகள் ஸ்ட்ராபெர்ரி சாப்பிடலாமா? என்னனு தெரிஞ்சிக்கோங்க


Are Strawberries Good For Kidneys: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் இன்றைய நவீன காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் உணவுகளின் மீதே அதிகம் நாட்டம் கொள்கின்றனர். இது உடல் உறுப்புகளைப் பாதிப்பதாக அமைகிறது.

அதன் படி, உடலில் உள்ள உறுப்புகளில் முக்கிய உறுப்பாக செயல்படுவதில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் சிறுநீரக நோய்களைத் தடுக்க ஸ்ட்ராபெர்ரிகள் உதவுகின்றன. சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஸ்ட்ராபெர்ரிகள் தரும் நன்மைகளையும், ஸ்ட்ராபெர்ரிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் காணலாம்.

சிறுநீரக நோய்

சிறுநீரகங்கள் உடலில் இருந்து அசுத்தங்கள் மற்றும் நச்சுக்களை வடிகட்டுவதற்கு உதவுகிறது. உடலில் உப்பு, பொட்டாசியம், pH அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பது அவசியமாகும். ஏனெனில் இதன் தாக்கம் சிறுநீரகத்தைப் பாதிக்கலாம். இதில் சிறுநீரகங்கள் அவற்றின் செயல்பாட்டைச் செய்ய முடியாமல் போனால், சிறுநீரக நோய் ஏற்படலாம். நாள்பட்ட சிறுநீரக நோயால் மக்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். சிறுநீரக செயலிழப்பு முன்னேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Garlic and Honey: ஹை கொலஸ்ட்ராலை குறைக்க இந்த 2 பொருளை காலையில் சாப்பிடுங்க!!

சிறுநீரகத்தைப் பாதுகாக்க உதவும் உணவு

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதன் ஆரோக்கியத்திற்குத் தேவையான போதுமான வைட்டமின்கள், புரதங்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பை உட்கொள்ளலாம். அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் ஸ்ட்ராபெர்ரி சிறந்த உணவாகும்.

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஸ்ட்ராபெர்ரி தரும் நன்மைகள்

சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைக்க ஸ்ட்ராபெர்ரிகள் ஆரோக்கியமானதாகும். இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் அந்தோசயினின்கள், ஃபிளவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைத்து சிறுநீரக நோய் அபாயத்தைக் குறைக்கிறது

நார்ச்சத்துக்கள் நிறைந்த

பொதுவாக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தருகிறது. இது தவிர, நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான முக்கிய ஆபத்து காரணியாக போதுமான நார்ச்சத்து இல்லாதது குறிப்பிடப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது சிறுநீரக நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Raw Onion For BP: வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துமா?

குறைந்த பாஸ்பரஸ் மற்றும் சோடியம்

சிறுநீரக நோயாளிகள் குறைந்த அளவிலான பாஸ்பரஸ், சோடியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் இயற்கையாகவே குறைந்த அளவில் பாஸ்பரஸ் மற்றும் சோடியம் உள்ளது. இவை இரண்டுமே சிறுநீரக நோயாளிகள் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டிய தாதுக்கள் ஆகும்.

குறைந்த பொட்டாசியம்

பல்வேறு வகையான உணவுகளில் பொட்டாசியம் சிறந்த கனிமமாகும். இது உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரக நோயாளிகள் பொட்டாசியம் உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும். குறைந்த பொட்டாசியம் உள்ள உணவுகள் நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் குறைந்தளவு பொட்டாசியம் உள்ளதால் இது சிறுநீரக நோய்க்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு, இதய ஆரோக்கியம் முக்கியமானதாகும். ஏனெனில் இதயத்தின் வேலையான உடலுக்கு அனுப்பக் கூடிய ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை சிறுநீரகம் வடிகட்டுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இது உடலில் உள்ள நீர் மற்றும் உப்பின் அளவை ஒழுங்குபடுத்துகிறது. எனவே இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது சிறுநீரக ஆரோக்கியத்தில் பங்களிக்கிறது.

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஸ்ட்ராபெர்ரிகளை பயன்படுத்தும் முறை

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஸ்ட்ராபெர்ரிகளை பல்வேறு வழிகளில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

  • இலை கீரைகள், நட்ஸ் உள்ள சாலட்டில் ஸ்ட்ராபெர்ரிகளை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
  • ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் இன்னும் பிற குறைந்த பொட்டாசியம் கொண்ட பழங்களைக் கொண்டு சாறு தயாரித்து அருந்தலாம்.
  • ஆப்பிள், பேரிக்காய் போன்ற குறைந்த பொட்டாசியம் கொண்ட பல்வேறு பழங்களுடன் ஸ்ட்ராபெர்ரிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு பல வழிகளில் ஸ்ட்ராபெர்ரிகளை உணவில் சேர்ப்பதன் மூலம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Peeling Skin On Hands: கைகளில் தோல் உரிதல் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Fatty Liver Problem: கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் இருந்து விடுபட இதை குடியுங்கள்!

Disclaimer