Peeling Skin On Hands: கைகளில் தோல் உரிதல் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Peeling Skin On Hands: கைகளில் தோல் உரிதல் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?

லேசான அல்லது சில நேரங்களில் நாள்பட்ட தோல் நிலை, கைகள் மற்றும் விரல் நுனியில் உள்ள தோல் பல காரணங்களால் உரிக்கப்படுகிறது. கைகளை சுத்தம் செய்வது வழக்கமான ஒன்றாக இருப்பினும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது தோலை கடுமையாக ஸ்க்ரப் செய்வது கைகளில் தோல் உரிக்கப்படுவதற்கான காரணமாக அமைகிறது. இந்த சந்தர்ப்பங்களில் இது அரிக்கும் தோலழற்சியாக அல்லது தடிப்புத் தோலழற்சியாக இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Protein Deficiency Symptoms: இந்த அறிகுறிகள் எல்லா இருந்தா புரோட்டீன் குறைபாடு இருக்குனு அர்த்தமாம்

கைகளில் தோல் உரித்தலுக்கான காரணங்கள்

கைகளில் தோல் உரித்தல் பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைமைகளுடன் தொடர்புடையதாகும். சில காரணங்களால் கைகளில் தோல் உரித்தல் ஏற்படலாம். அதில் முக்கியமான சிலவற்றைக் குறித்துக் காணலாம்.

வெயிலின் தாக்கம்

கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தால் சருமம் எரிச்சலடைந்து கடுமையாக இருக்கும் போது கைகள் உரிக்கத் தொடங்கலாம்.

சுற்றுச்சூழல் வெளிப்பாடு

பல்வேறு சுற்றுச்சூழல் வெளிப்பாடு காரணமாக கைகளில் சருமம் வறண்டு உரிக்கப்படலாம். கடுமையான வெப்பம், குளிர், வறட்சி மற்றும் ஈரப்பதம் ஆகியவை சருமத்தில் விளைவுகளிய ஏற்படுத்தும். இதனால் கைகளில் உள்ள தோல் வறண்டு போவதுடன் உரிக்கப்படுவதற்கு வழிவகுக்கலாம்.

அக்ரல் பீலிங் ஸ்கின் சிண்ட்ரோம்

இது ஒரு வகையான மரபியல் கோளாறாகும். இது இரண்டு கைகள் மற்றும் கால்களில் வலியற்ற தோல் உரிப்பை ஏற்படுத்தலாம்.

சொரியாசிஸ்

பாமோபிளான்டார் சொரியாசிஸ் கைகளின் தோலில் உரிதல்களை ஏற்படுத்தலாம்.

இரசாயனங்கள்

சில இரசாயனங்களைப் பயன்படுத்துவது கைகள் மற்றும் விரல் நுனிகளில் தோல் உரிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Analgesics: அடிக்கடி பெயின் கில்லர் எடுப்பவரா நீங்க? அப்போ இதை கண்டிப்பா படியுங்க!

கைகளில் தோல் உரிச்சல் பிரச்சனைக்கு உதவும் வீட்டு வைத்தியம்

வெதுவெதுப்பான நீரில் ஊறவைப்பது

பெரிய கிண்ணம் ஒன்றை எடுத்து, அதில் கைகளை தினமும் 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இது கைகளில் உள்ள சருமத்தை மென்மையாக வைக்கிறது. விரும்பியவர்கள், தண்ணீரில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். கைகளை 10 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் ஊறவைக்க வேண்டும். கைகள் உலர்ந்த பிறகு நல்ல மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.

வைட்டமின் ஈ ஆயில் மசாஜ்

முதலில் கைகளை வெதுப்பான நீரில் 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் உலர வைக்க வேண்டும். கைகளை மென்மையான துணியைப் பயன்படுத்தி உலர வைக்கலாம். கைகளை மசாஜ் செய்ய வைட்டமின் ஈ சத்துக்களைக் கொண்ட ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதன் ஊட்டச்சத்துக்கள் கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

கற்றாழை

தினமும் தூங்கும் முன்னதாக, கற்றாழை சாற்றைக் கொண்டு தினமும் மசாஜ் செய்யலாம். பின்னர் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளைக் கழுவ வேண்டும். கூடுதல் நன்மைக்கு சில நல்ல மாய்ஸ்சரைசைப் பயன்படுத்தலாம்.

தோல் உரித்தல் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து அதைத் தடுக்க முயற்சிக்க வேண்டும். தோல் உரித்தல் பிரச்சனைகளைக் குறைக்க சில வீட்டு வைத்தியங்களை உபயோகிக்கலாம். எனினும், சாத்தியமான பக்கவிளைவுகளைத் தவிர்க்க பேட்ச் டெஸ்ட் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Anti Aging Habits: முதுமை ஏற்படாமல் தடுக்க உதவும் ஆரோக்கியமான எளிய வழிகள்!

Image Source: Freepik

Read Next

இனிப்பு சாப்பிட்டால் தாகம் எடுக்குமா? இப்படி செய்தால் எல்லாம் செட் ஆகும்…

Disclaimer