கை, கால்களில் எல்லாம் சிவப்பு புள்ளிகள் இருக்கா? அதற்கான காரணங்கள் இதோ.. எப்படி சரி செய்யலாம்?

What can cause red spots on hands and feet: கால்களில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுவதைபலரும் சாதாரணமாகக் கருதுகின்றனர். ஆனால், இதற்குப் பின்னால் சில காரணங்கள் இருக்கலாம். இதில் கால்கள், கைகளில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுவதற்கான காரணங்களையும், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
கை, கால்களில் எல்லாம் சிவப்பு புள்ளிகள் இருக்கா? அதற்கான காரணங்கள் இதோ.. எப்படி சரி செய்யலாம்?


Why am I getting red dots on my hands and feet: பல்வேறு காரணங்களால், நாம் பலரும் தங்கள் உடல் உறுப்புகளில் சில மாற்றங்களைக் காண்கிறோம். அதில் ஒன்றாக, கால், கைகளில் சிவப்பு புள்ளிகள் காணப்படலாம். இந்த புள்ளிகளை சிலர் சாதாரணமாக எண்ணுகின்றனர். சிறு வயதிலேயே இது போன்ற சிவப்பு புள்ளிகளைக் காணலாம். ஆனால், இந்த சிவப்பு புள்ளிகள் சில தொற்றுக்களின் அறிகுறியாக இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இவ்வாறு கால்கள், கைகளில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுவது ஒரு பொதுவான நோய்த்தொற்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான காரணம் என்னவென்று இருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா?

பொதுவாக நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சில பழக்க வழக்கங்கள் உட்பட, நாம் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட இது போன்ற பிரச்சனைகள் உருவாகலாம் என்பது அதிர்ச்சிக்குரிய விஷயமாக உள்ளது. நீண்ட காலமாக சில உடல்நலப் பிரச்சனைகளுக்கு மருந்துகளை எடுத்து வருவது, சருமத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தி, சிவப்பு புள்ளிகள் உருவாக வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது. காலைத் தவிர, முதுகிலும், பாதங்களிலும் சிவப்பு அடையாளங்கள் தோன்றலாம். இதற்கு மருந்துகளின் பக்க விளைவுகளைத் தவிர, வேறு பல காரணங்களும் இருக்கலாம். இது பற்றிய தகவல்களுக்கு லக்னோவில் உள்ள ஓம் ஸ்கின் கிளினிக்கின் மூத்த ஆலோசகர் தோல் மருத்துவரான டாக்டர் தேவேஷ் மிஸ்ரா சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Prickly Heat: அதிகரிக்கும் வேர்க்குரு பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடுவது எப்படி?

காலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுவதற்கான காரணங்கள் 

கால்களில் சிவப்பு புள்ளிகள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ள சில விஷயங்களைக் காண்போம்.

  • அரிக்கும் தோலழற்சி காரணமாக, பாதங்களில் சிவப்பு புள்ளிகள் தோன்றக்கூடும். இது மரபணு காரணங்களாலும் பலருக்கும் ஏற்படுகிறது.
  • பூச்சி கடித்தால் கால்களில் சிவப்பு புள்ளிகள் தோன்றலாம். ஏனெனில், பூச்சி தோலுடன் தொடர்பு கொண்டவுடன், தோலில் வெளிர் சிவப்பு நிற புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். இது ஒவ்வாமை காரணமாக ஏற்படலாம்.

  • சொரியாசிஸ் ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். இந்த நோயின் காரணமாக சருமம் வறண்டு போகலாம். இதனால் சருமத்தில் சிவப்புத் திட்டுகள் மற்றும் அடையாளங்கள் தோன்றக்கூடும்.
  • பாதங்களில் அழுக்கு படிவதன் காரணமாக தொற்று ஏற்படலாம். இந்த தொற்று காரணமாக சிவப்பு புள்ளிகள் போல தோற்றமளிக்கக்கூடிய முகப்பரு ஏற்படுகிறது.
  • கோடையில், வியர்வை காரணமாக பாதங்களின் தோலில் வெப்பத்தடிப்பு ஏற்படலாம். இதனால், சிவப்பு நிற தடிப்புகள் உருவாவதுடன், அரிப்புக்கு வழிவகுக்கலாம்.
  • தோலில் சிவப்பு நிற அடையாளங்களுக்கு படை நோய் ஒரு காரணமாக இருக்கலாம். இது ஒரு அசாதாரண தோல் நிலையாகும். இது மருந்து எதிர்வினை அல்லது ஈஸ்ட் மற்றும் பூஞ்சை ஒவ்வாமை காரணமாக ஏற்படக்கூடியதாகும்.

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

நாம் பெரும்பாலும் சருமப் பிரச்சினைகளை பொதுவானது எனக் கருதி புறக்கணித்து விடுகிறோம். ஆனால், இந்த நிலை மேலும் தீவிரமாகலாம். எனவே சருமத்தில் தோன்றக்கூடிய சிவப்பு புள்ளிகள் திடீரென அதிகரிக்கத் தொடங்கினால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். சிவப்புப் புள்ளிகளைத் தவிர, சருமத்திலிருந்து இருந்து இரத்தப்போக்கு, காய்ச்சல், வீக்கம், சொறியில் சீழ் சேருதல் போன்ற அறிகுறிகளும் இயல்பானவை அல்ல. இந்த அறிகுறிகளும் தென்பட்டால், மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த உணவுகளை சாப்பிட்டால்  முகத்தில் கரும்புள்ளிகள் வருவது உறுதி; இவற்றை கட்டாயம் தவிருங்கள்...!

கால்களில் உள்ள சிவப்பு புள்ளிகளை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியம்

  • சிவப்பு சொறி பிரச்சனையை கற்றாழை ஜெல் உதவியுடன் தீர்க்கலாம். புதிய கற்றாழை ஜெல்லானது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்டதாகும். இது சிவப்பு புள்ளிகளைக் குணப்படுத்த உதவுகிறது.
  • சிவப்பு புள்ளிகள் இருந்தால், ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்தலாம். இதற்கு அரை டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை இரண்டு தேக்கரண்டி தண்ணீரில் கலந்து, சருமத்தில் தடவலாம். இது சிவப்பு புள்ளிகள் அல்லது தடிப்புகளிலிருந்து விரைவில் நிவாரணம் அளிக்கும்.

  • சிவப்பு புள்ளிகளை நீக்குவதற்கு மஞ்சளில் சில துளிகள் பாதாம் எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய் கலந்து தடவலாம். இந்தக் கலவையை சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கலாம். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை முயற்சிப்பதன் மூலம், தொற்று நீங்கத் தொடங்குகிறது.
  • சிவப்பு புள்ளிகள் இருப்பின், அது ஒவ்வாமையின் அறிகுறியாக இருக்கலாம். இதை நீக்குவதற்கு தேங்காய் எண்ணெயைத் தடவலாம். ஏனெனில், தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியூட்டும் விளைவைக் கொண்டுள்ளது. மேலும் இது சருமத்திற்கு ஈரப்பதத்தையும் வழங்குகிறது. தினமும் தூங்கும் முன், பாதங்களைத் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் தொற்று விரைவில் குணமாகும்.
  • சிவப்பு தடிப்புகள் அல்லது புள்ளிகளை குணப்படுத்த வேப்பிலையைப் பயன்படுத்தலாம். ஏனெனில், வேம்பில் கிருமி நாசினிகள் பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் காணப்படுகிறது. வேப்பம்பூவை பாதங்களில் தடவுவதன் மூலம் தொற்று சிறிது நேரத்தில் குணமடையத் தொடங்கும்.

குறிப்பு

சிவப்பு புள்ளிகளுக்கான காரணம் தெரிந்தால் மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்த வேண்டும். சிவப்பு புள்ளிகளுக்கான சரியான காரணம் தெரியாவிடில், முதலில் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Red Spot Causes: அரிப்பு இல்லாமல் சிவப்பு தடிப்புகள் தெரிகிறதா? இது தான் காரணம்!

Image Source: Freepik

Read Next

யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் குடிக்கலாமா.? நிபுணர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version