Sat Sep 12, 2026 | 01:26 AM IST

Water after fruits: பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது நல்லதா? டாக்டர் கூறுவது இங்கே!

Is it safe to drink water after having fruits: பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவில் உள்ளது. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமாக இருக்க தங்கள் உணவில் பழங்களை கட்டாயம் சேர்க்க அறிவுறுத்துகின்றனர். தினமும் பழங்களை உண்பவர் மற்றவர்களை விட ஆரோக்கியமாக இருப்பதை நீங்களே பார்க்கலாம். பழங்கள் சாப்பிடுவதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். இது தவிர, பழங்களில் உள்ள பண்புகள் சிறந்த செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது.

இருப்பினும், பழங்களிலிருந்து ஊட்டச்சத்துகளைப் பெற, அவற்றை சரியான முறையில் சாப்பிட வேண்டியது அவசியம். பலர் பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பார்கள் அல்லது வேறு சில உணவுப் பொருட்களை சாப்பிடுவார்கள். பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று என்பது உங்களுக்கு தெரியுமா? பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா வேண்டாமா என்பதை பற்றி ஆரோக்கிய டயட் மற்றும் நியூட்ரிஷன் கிளினிக்கின் டயட்டீஷியன் டாக்டர் சுகீதா முத்ரேஜா கூறியது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Fruits for diabetics: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழங்கள் என்னென்ன?

பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா?

இது குறித்து டாக்டர் சுகீதா முத்ரேஜா கூறுகையில், பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால், பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால், பழங்களில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் கிரகிக்க முடிவதில்லை.

பழங்கள் சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது?

பழ வகைகளை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால் அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இதன் காரணமாக, பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடலால் முழுமையாக உறிஞ்ச முடியாது. பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது செரிமானத்தை கெடுக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Low Cholesterol Fruits: உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா?

பழங்களை சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்?

டாக்டர் சுகீதா முத்ரேஜாவின் கூற்றுப்படி, பழங்களை சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால், செரிமானம் சிறப்பாக இருக்கும். கூடுதலாக, உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடும். பழங்களை சாப்பிட்ட உடனேயே மற்ற உணவுகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

இருப்பினும், தாகம் எடுத்தால், சிறிது தண்ணீர் குடிக்கலாம். ஆனால், பழங்களை சாப்பிட்ட பிறகு குறைந்தது 45 நிமிடங்களாவது காத்திருந்து தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் காரணமாக, பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படுகின்றன.

Pic Courtesy: Freepik

Read Next

Drink Water: தண்ணீரை எப்போது? எப்படி குடிக்கணும் தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content