
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த உணவுப் பொருட்களில் விதைகள் (Seeds) மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றன. “விதைகள் toppings மட்டுமல்ல.. ஆரோக்கிய சக்தி மிக்க சிறிய உணவுக் களஞ்சியம்” என்று டாக்டர் பால் வலியுறுத்துகிறார்.
முக்கியமான குறிப்புகள்:-
விதைகள் சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், உடல் சக்தி, செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கும். இப்போது, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 விதைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
பூசணி விதைகள் (Pumpkin Seeds)
ஏன் உதவுகிறது?
* Magnesium: ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 37% தினசரி தேவையான மக்னீசியம் உள்ளது. இது நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.
* Tryptophan: தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனாக மாறும் அமினோ அமிலம்.
* Zinc: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
எப்படி சாப்பிடலாம்?
* சாலட் அல்லது தயிரில் தூவி சாப்பிடலாம்.
* லேசாக வறுத்து ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.
* அரைத்து சட்னியாக சாப்பிடலாம்.
சியா விதைகள் (Chia Seeds)
ஏன் உதவுகிறது?
* Omega-3: இதய ஆரோக்கியத்திற்கும், அழற்சியை குறைப்பதற்கும் உதவும்.
* Fiber: செரிமானத்தை மேம்படுத்தி, வயிறு நிறைந்த உணர்வை தருகிறது.
எப்படி சாப்பிடலாம்?
* தண்ணீர் அல்லது பாலில் குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைத்து சாப்பிட வேண்டும்.
* ஸ்மூத்தி, ஓட்ஸ், தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.
* சியா புட்டிங், எனர்ஜி பார்களில் பயன்படுத்தலாம்.

ஆளி விதைகள் (Flax Seeds)
ஏன் உதவுகிறது?
* ALA (Alpha-Linolenic Acid): தாவர அடிப்படையிலான ஓமேகா-3 கொழுப்பு அமிலம்; இதயத்திற்கு நல்லது.
* Lignans: ஆன்டி-ஆக்ஸிடென்ட் பண்புகள்.
* Fiber: செரிமானத்தை மேம்படுத்தி, கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.
எப்படி சாப்பிடலாம்?
* எப்போதும் அரைத்து சாப்பிட வேண்டும் (முழு விதைகள் செரிக்காது).
* ஸ்மூத்தி, தயிர், பேக் செய்யப்பட்ட உணவுகளில் சேர்க்கலாம்.
* சப்பாத்தி/பராத்தா மாவில் கலந்து சமைக்கலாம்.
சூரியகாந்தி விதைகள் (Sunflower Seeds)
ஏன் உதவுகிறது?
* Vitamin E: செல்களை சேதத்திலிருந்து காக்கும் சக்தி.
* Selenium: நோய் எதிர்ப்பு மற்றும் தைராய்டு சுரப்பிக்கு உதவும்.
எப்படி சாப்பிடலாம்?
* பச்சையாகவோ அல்லது லேசாக வறுத்தவாறு சாப்பிடலாம்.
* சாலட், கிரெயின் பவுல், மிக்ஸ்-ல் சேர்க்கலாம்.
* சிம்பிள் டிப் அல்லது ஸ்பிரெடாக அரைத்து சாப்பிடலாம்.
எள் விதைகள் (Sesame Seeds)
ஏன் உதவுகிறது?
* Calcium: எலும்புகளை வலுப்படுத்துகிறது.
* Healthy Fats: அழற்சியை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எப்படி சாப்பிடலாம்?
* கறிகள், சாலட், ஸ்டிர்-ஃப்ரை மீது தூவலாம்.
* சட்னி செய்யலாம்.
* ரொட்டி-ல் சேர்க்கலாம்.
View this post on Instagram
இறுதியாக..
பூசணி விதை முதல் எள் விதை வரை இந்த 5 விதைகளும் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் சக்தி, தூக்கத் தரம், செரிமானம், இதய ஆரோக்கியம் ஆகியவை மேம்படும். விதைகள் toppings மட்டுமல்ல.. ஆரோக்கிய சக்தி மிக்க சிறிய உணவுக் களஞ்சியம் என்று டாக்டர் பால் கூறுகிறார்.
{Disclaimer: இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஆரோக்கிய அறிவுக்காக மட்டுமே. எந்த விதையானாலும் அதிகமாக எடுத்துக்கொள்வதற்கு முன், குறிப்பாக உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.}
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version