முடி உதிர்வுக்குக் காரணமாகும் வைட்டமின் குறைபாடுகள் என்னென்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
முடி உதிர்வுக்குக் காரணமாகும் வைட்டமின் குறைபாடுகள் என்னென்ன தெரியுமா?


Vitamin Deficiency & Hair Loss: இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் மக்கள் பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். போதிய ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக முடி உதிர்வு, முடி வறட்சி, பிளவு முனை உள்ளிட்ட பல்வேறு முடி பிரச்சனைகள் எழுகின்றன. இந்த முடி சார்ந்த பிரச்சனைகள் உடலில் சில குறிப்பிடப்பட்ட வைட்டமின்கள் இல்லாமையால் எழுகின்றன.

அவ்வாறே, முடி உதிர்வு பிரச்சனையானது வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது. பொதுவாக முடியை உருவாக்க உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. வைட்டமின் டி, வைட்டமின் பி12, பி வைட்டமின்களில் ஒன்றான பயோட்டின், வைட்டமின் சி, ஃபோலேட் என்ற ஃபோலிக் அமிலம் இரும்பு, துத்தநாகம் போன்ற அனைத்து முடி ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பாளராக செயல்படுகிறது. இந்த பங்களிப்பு குறைவாக இருக்கும் போது உச்சந்தலையில் சில விளைவுகள் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Rose Water For Hair: காடு மாறி முடி வளர ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க!

முடி உதிர்தலுக்கான காரணங்கள்

ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தவிர, முடி உதிர்தலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முடி உதிர்தலின் மிகவும் பொதுவான வகை ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா ஆகும். இந்த வகை பாதிப்பானது 80 சதவீத ஆண்களையும் 50 சதவீத பெண்களையும் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் வயது தொடர்பான மாற்றங்களையும் கண்டறிய முடியும். இந்த காரணங்களைத் தவிர ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, மன அழுத்தம், பிரசவ காலம், நோயெதிர்ப்பு நிலைகள் போன்ற காரணங்களும் முடி உதிர்வுக்குக் காரணமாகிறது. பெரும்பாலும் முடி உதிர்தல் என்பது உடலில் வேறு ஏதோ நடக்கிறது என்பதற்கான அறிகுறியைக் குறிக்கிறது. எனவே உடலின் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அளவை அளவிட இரத்தப் பரிசோதனையை பரிந்துரை செய்யலாம்.

முடி உதிர்தலை ஊக்குவிக்கும் வைட்டமின் குறைபாடுகள்

வைட்டமின் டி குறைபாடு

உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பாக, வைட்டமின் டி உள்ளது. இது உடலில் நாள்பட்ட அளவில் குறைந்து வரும் போது, முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. மேலும், ஆரோக்கியமான மயிர்க்கால்களின் ஆதரவு பெறவும், முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும் வைட்டமின் டி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் குறைபாடு முடி உதிர்தலுக்கு வழிவகுப்பதுடன் மெல்லிய முடி வளர்ச்சிக்கும் காரணமாகிறது.

வைட்டமின் டி குறைபாட்டை அறிவது எப்படி?

சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவது, குறைந்த சூரிய ஒளி வெளிச்சம் உள்ள பகுதியில் வசிப்பது போன்றவை வைட்டமின் D-ன் குறைபாடாக கருதப்படுகிறது. மேலும், உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் அது எலும்பு வலி, மூட்டு வலி, சோர்வு, தசை பலவீனம் அல்லது பிடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.

வைட்டமின் டி குறைபாட்டிற்கு என்ன சாப்பிடலாம்?

உடலில் வைட்டமின் டி குறைபாட்டைச் சரி செய்வதற்கு சூரிய ஒளியில் குறைந்த நேரம் நிற்கலாம். சால்மன், ட்ரவுட், மத்தி போன்ற  கொழுப்பு நிறைந்த மீன்கள் உணவில் இருந்து வைட்டமின் டி ஊட்டச்சத்துகளைப் பெறலாம். மேலும் வலுவூட்டப்பட்ட பால் மற்றும் தாவர அடிப்படையிலான பால் மற்றும் முட்டைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Clips: முடிக்கு கிளிப் யூஸ் பண்ணுவது நல்லதா? எந்த கிளிப் யூஸ் பண்ணலாம்?

வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமிலம் குறைபாடு

வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமிலம் இரண்டுமே பி வைட்டமின்கள் ஆகும். இவை மயிர்க்கால் ஆரோக்கியத்தை ஆதரிக்க ஒன்றாக வேலை செய்கிறது. இது நியூக்ளிக் அமிலங்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. முடி வளர்ச்சிக்குத் தேவையான புரதங்களை உருவாக்க இது உதவுகிறது. எனினும், இது குறித்து கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகிறது.

வைட்டமின் பி 12, ஃபோலிக் அமிலம் குறைபாட்டை அறிவது எப்படி?

இந்த இரண்டு ஊட்டச்சத்து குறைபாடுகளும் வெவ்வேறு வகையான அறிகுறிகளைக் காண்பிக்கும். ஃபோலேட் குறைபாடு இருப்பின், சோர்வு, பலவீனம், முடி உதிர்தல் மற்றும் வெளிர் சரும பிரச்சனை போன்றவை ஏற்படலாம். மேலும்  வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக கூச்ச உணர்வு, மறதி மற்றும் மெதுவாகச் சிந்திப்பது போன்றவை ஏற்படலாம்.

வைட்டமின் பி 12, ஃபோலிக் அமிலம் குறைபாட்டை எப்படி சரிசெய்வது?

ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி12 குறைபாட்டைச் சரி செய்வதற்கு உணவு ஆதாரங்களில் மாட்டிறைச்சி கல்லீரல், சால்மன், பால், தயிர் மற்றும் வலுவூட்டப்பட்ட காலை உணவு தானியங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

வைட்டமின் சி குறைபாடு

உணவிலிருந்து இரும்பை உறிஞ்சி முடி ஆரோக்கியத்தை ஊக்குவிக்க வைட்டமின் சி சத்துக்கள் உதவுகிறது. இந்த குறைபாட்டின் காரணமாக முடி ஆரோக்கியம் பாதிப்படைவதுடன் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படலாம்.

வைட்டமின் சி குறைபாட்டை அறிவது எப்படி?

இதன் அறிகுறிகள் அரிதானதாகும். முடி உதிர்தலுக்கு இது அடிக்கடி காரணம் அல்ல. எனினும், வரையறுக்கப்பட்ட உணவைப் பின்பற்றுபவர்கள் வைட்டமின் சி வழங்கும் தாவர உணவுகளை அகற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மேலும் சில புற்றுநோய்கள் உள்ளவர்களுக்கும் வைட்டமின் சி அளவு குறைவாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வைட்டமின் சி குறைபாட்டை எப்படி சரிசெய்வது?

பழங்கள், காய்கறிகள் குறிப்பாக ப்ரோக்கோலி , சிட்ரஸ் பழங்கள், கிவி, குடை மிளகாய், ஸ்ட்ராபெர்ரி போன்ற அனைத்தும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளாகும். இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் வைட்டமின் சி குறைபாட்டை சரி செய்ய முடியும்.

முடி உதிர்தலை ஏற்படுத்தும் இது போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்வதன் மூலம் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Black Seed Oil: கரு கரு முடிக்கு கருஞ்சீரக எண்ணெய்! எப்படி தயார் செய்யணும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Control Hair Fall: மழைக்காலத்தில் முடி உதிர்வை குறைக்க இந்த உணவு திட்டத்தை பின்பற்றுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்