What vitamin deficiency causes burning sensation: உடலை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வதில் போதுமான அளவு வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். ஏனெனில் சில வைட்டமின்கள் குறைபாட்டின் காரணமாக உடலில் பல பிரச்சனைகள் மற்றும் நோய்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஆம். உண்மையில் தொற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்கவும், நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் போதுமான அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தொடர்ந்து உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல்வேறு வைட்டமின்கள் தேவைப்படுகிறது.
உடலில் எரிச்சலூட்டும் உணர்வு ஏற்படுவது பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக அமைகிறது. இந்த எரிச்சலுக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், இது வைட்டமின்களின் குறைபாட்டின் காரணமாகவும் வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உடலில் எரிச்சல் ஏற்படுவது வைட்டமின் குறைபாட்டின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. சில வைட்டமின்கள் நம் உடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால், போதுமான அளவு வைட்டமின்கள் கொண்ட உணவுகள் உணவில் சேர்க்க வேண்டும். இதில் எந்த வைட்டமின் குறைபாடு உடலில் எரியும் உணர்வை ஏற்படுத்துகிறது என்பது குறித்தும், இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதையும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin B12 Foods: அட நீங்க நீங்க முட்டையும் இறைச்சியும் சாப்பிடமாட்டீங்களா? வைட்டமின் B12 நிறைந்த சைவ உணவுகள்!
உடலில் எரியும் உணர்வு எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
உடலில் வைட்டமின்களின் குறைபாட்டின் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. ஆராய்ச்சி ஒன்றில், உடலில் வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக எரிச்சல் பிரச்சனை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், வைட்டமின் பி12 குறைபாட்டின் காரணமாக உடலின் மேல் பகுதியில் எரிச்சல் பிரச்சனை பெரும்பாலும் காணப்படுகிறது. எனினும், இந்த நிலை மிகவும் அரிதானதாகும். குறிப்பாக, இது வயதானவர்களிடம் பெரும்பாலும் காணப்படுகிறது.
இது தவிர, வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக, எரிச்சலை உணரலாம் அல்லது எரிச்சல் பிரச்சனை நடக்கலாம். இதற்கு முக்கிய காரணம், வைட்டமின் பி12 உடலில் ஹோமோசிஸ்டீன் என்ற வேதிப்பொருளை வெளியிடுவதே ஆகும். இதன் காரணமாகவே எரிச்சல் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே உடலின் மேல் பகுதியில் எரியும் உணர்வு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஏனெனில், இது வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான காரணங்கள் என்ன?
உடலில் வைட்டமின் பி12 குறைபாடு என்பது பெரியவர்கள் மற்றும் வயதானவர்களின் மத்தியில் காணப்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாக அமைகிறது. உணவில் போதுமான அளவு வைட்டமின் பி12 உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாத போது ஒருவர் இதன் குறைபாட்டிற்கு ஆளாகிறார். மேலும், வைட்டமின் பி12-ஐ உடலில் இயற்கையாகவே உற்பத்தி செய்ய முடியாது.
இதன் குறைபாட்டை உணவின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்வது சரியானதாகக் கருதப்படுகிறது. மேலும், உணவுமுறையைத் தவிர, உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட வேறு சில காரணிகளும் உள்ளன. உடலில் வைட்டமின் பி12 குறைபாட்டின் காரணமாக செரிமான அமைப்பு தொடர்பான நோய்களும் ஏற்படுகிறது. இது தவிர, இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: வைட்டமின் பி12 குறைபாட்டை அதிகரிப்பதில் சிரமமா? இந்த மூலிகை, மசாலா பொருள்களைச் சேர்த்துக்கோங்க
வைட்டமின் பி12 குறைபாட்டைப் போக்குவது எப்படி?
வைட்டமின் பி12 குறைபாட்டிலிருந்து விடுபட விரும்புபவர்கள் வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுமுறைகளைக் கையாள்வது முக்கியமாகும். அதன் படி, வைட்டமின் பி12 குறைபாட்டைப் பூர்த்தி செய்ய, முட்டை, பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற உணவுகளை மக்கள் தங்கள் அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். இது தவிர நட்ஸ், உலர் பழங்கள், சிவப்பு இறைச்சி, மீன், பீன்ஸ் போன்றவற்றில் போதுமான அளவிலான வைட்டமின் பி12 நிறைந்துள்ளது.
இந்த வகை உணவுகளை நம் அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம், உடலில் வைட்டமின் பி12 குறைபாட்டை பூர்த்தி செய்யலாம். உடலில் வைட்டமின் பி12 குறைபாடு கடுமையாக இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியமாகும். மேலும் கடுமையான சந்தர்ப்பங்களில் மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் வைட்டமின் பி12 சப்ளிமெண்ட்களைப் பயன்படுத்தலாம்.
அதே சமயம், எந்தவொரு ஊட்டச்சத்துக்களையும் அதிகமாக உட்கொள்வது பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, வைட்டமின்கள் அல்லது பிற ஊட்டச்சத்துக்களை சீரான அளவில் எடுத்துக் கொள்வது அவசியமாகும். 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 2.4 MCG வைட்டமின் B12 உட்கொள்வது பாதுகாப்பானதாகக் கூறப்படுகிறது. வைட்டமின் B12 சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகக் கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: இயற்கையாகவே வைட்டமின் பி12 ஐ அதிகரிக்கும் சைவ உணவுகள் இங்கே..
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version