Neem Oil Benefits For Hair: கசப்பு நிறைந்த வேப்ப எண்ணெயில் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக வேப்ப எண்ணெய் கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது. இது முடி வளர்ச்சியில் சிறந்த பங்கு வகிக்கிறது.
நீங்கள் முடி பராமரிப்பில் வேப்ப எண்ணெயை இணைத்தால், உங்கள் முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் இருக்கும். இது பொடுகு பிரச்னையில் இருந்து உங்களை விடுவிக்கும். இது குறித்து விரிவாக காண்போம்.

கூந்தலுக்கு வேப்ப எண்ணெயின் பயன்கள் (Neem Oil For Hair)
முடி அடர்த்தியாகும்
வேப்ப எண்ணெயுடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்யுங்கள். இது முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும். மேலும் இதனுடன் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெயை கலக்கலாம்.
முடி வறட்சியை தடுக்கும்
கூந்தல் வெடிப்பு, வறட்சி போன்றவற்றில் இருந்து விடுபட தலையில் வேப்ப எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறையாவது முயற்சிக்கவும். அனால் வேப்ப எண்ணெயை அளவோடு தடவ வேண்டும்.
வேப்ப எண்ணெயை தயாரிக்கும் முறை (Neem Oil Recipe For Hair)

* வேப்பம் பழங்களை எடுத்து, அதில் உள்ள சதைகளை நீக்கி, அதன் விதைகளை எடுத்து காயவைக்கவும்.
* விதை நன்கு காய்ந்த பின், அதனை அரைத்தால் எண்ணெய் வெளிவரும்.
* இந்த எண்ணெயை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை உச்சந்தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும்.
* வேப்ப எண்ணெயை குறைந்தது ஒரு வருடம் வைத்துக்கொள்ள முடியும்.
பின்குறிப்பு
வேப்ப எண்ணெயில் எவ்வளவு நன்மைகள் இருந்தாலும், அதனை அளவோடு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது ஒவ்வாமையை உண்டாக்கும். நீங்கள் ஏதேனும் தோல் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டு வந்தால், வேப்ப எண்ணெயை பயன்படுத்தும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
Image Source: Freepik