Sat Sep 12, 2026 | 12:59 AM IST

Doctor Verified

வீட்டிலேயே மென்மையான, பட்டு போன்ற முடியைப் பெற இந்த எளிய சமையலறை பொருள்கள் போதும்..

மென்மையான மற்றும் பளபளப்பான கூந்தலைப் பெற பலரும் விரும்புகின்றனர். ஆனால் மாசுபாடு, ரசாயன ஷாம்புகள், நேராக்குதல் மற்றும் வெப்பமூட்டும் கருவிகள் போன்றவை முடியின் இயற்கையான ஈரப்பதத்தை நீக்குகின்றன. இந்நிலையில், பட்டுப் போன்ற கூந்தலுக்கான சில வீட்டு வைத்தியங்கள் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்குகிறது. உண்மையில், முடி உதிர்தல், முடியின் முனைகள் பிளவுபடுதல், வறட்சி மற்றும் பளபளப்பு இல்லாமை போன்ற கூந்தல் பிரச்சனைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதற்கு மோசமான உணவு முறை, மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் அடிக்கடி ஹேர் ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்துதல் போன்றவை மிகப்பெரிய காரணங்களாக அமைகிறது.

ஹேர் ட்ரையர்கள், ஸ்ட்ரைட்டனர்கள் மற்றும் வண்ணமயமாக்கல் பொருட்கள் போன்றவை முடியின் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி, மந்தமாகவும் உடையக்கூடியதாகவும் ஆக்குகின்றன. எனவே, தலைமுடி மீண்டும் இயற்கையாகவே பளபளப்பாகவும், மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் மாற விரும்பினால், விலையுயர்ந்த சலூன் சிகிச்சைகள் தேவையில்லை. மாறாக சமையலறையிலிருந்து சில இயற்கை பொருட்கள் தேவைப்படுகிறது.

இதில் ஜெய்ப்பூரில் உள்ள பாபு நகரில் உள்ள இயற்கை மருத்துவ மருத்துவமனையின் மேவார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் மூத்த மருத்துவரும் ஊட்டச்சத்து மற்றும் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் கிரண் குப்தா அவர்கள் தலைமுடியை பளபளப்பாக மாற்ற எந்த சமையலறை பொருட்களைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: முடி உதிர்வை நிறுத்த வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை வைத்தியங்கள் – நிபுணர் டிம்பிள் ஜங்கடா பரிந்துரை

வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டு முடியை பட்டுப் போல மாற்றுவதற்கான குறிப்புகள் 

தயிர்

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் உச்சந்தலையில் அழுக்கு, வறட்சியை நீக்கி குறைக்க உதவுகிறது. இந்த தீர்வை முயற்சிக்க, அரை கப் தயிருடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு போன்றவற்றைச் சேர்ந்து, தலைமுடியின் வேர்கள் முதல் நுனிகள் வரை தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு துவைக்கலாம். தயிரைக் கூந்தலை ஆழமாக பராமரித்து, பட்டுப் போலவும் மென்மையாகவும் மாற்ற உதவுகிறது.

முட்டை

முட்டையில் புரதம் மற்றும் பயோட்டின் போன்றவை நிறைந்துள்ளது. இது முடியை உள்ளிருந்து வலுப்படுத்தி, முடி உடைதல் மற்றும் முடி உதிர்தலைக் குறைக்க உதவுகிறது. இதைப் பயன்படுத்துவதற்கு, ஒரு முட்டையை அடித்து, அதில் இரண்டு தேக்கரண்டி தயிர் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இந்தக் கலவையைத் தலைமுடியில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த வழியில் முட்டைகளைப் பயன்படுத்துவது தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பை அளிக்கிறது. இது பட்டுப் போலவும் மென்மையாகவும் இருக்கும்.

கற்றாழை

முடியை பளபளப்பாகவும் வலுவாகவும் கற்றாழை ஜெல் மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள நொதிகள், உச்சந்தலையை வளர்த்து வறட்சியைக் குறைக்க உதவுகின்றன. இதற்கு, புதிய கற்றாழை ஜெல்லை நேரடியாக முடியில் தடவலாம் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தாம். இது முடிக்கு மென்மையான அமைப்பை அளித்து பொடுகைக் குறைக்கிறது.

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஆனது உச்சந்தலையை நச்சு நீக்கி, முடி வேர்களை வலுப்படுத்த உதவுகிறது. இதைப் பயன்படுத்துவதற்கு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் கலந்து, உச்சந்தலையில் 10 நிமிடங்கள் தடவலாம். இது முடிக்கு பளபளப்பை அளித்து, பொடுகை நீக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: பொசுபொசுனு முடி ஸ்ட்ராங்கா வளர வீட்டிலேயே நீங்க பின்பற்ற வேண்டியவை..

தேன்

தேன் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டியாகக் கருதப்படுகிறது. இது முடியில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது. மேலும் இது உச்சந்தலையை ஈரப்பதமாக்குகிறது. இது முடியை மென்மையாக்கி இயற்கையான பளபளப்பை சேர்க்கிறது. இதைப் பயன்படுத்துவதற்கு, 2 டீஸ்பூன் தேனை 3 டீஸ்பூன் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து தலைமுடியில் தடவலாம். இதை 30 நிமிடங்களுக்குப் பிறகு, புதிய தண்ணீரில் கழுவலாம். இது முடி வறட்சியை நீக்கவும், முடி மென்மையாக மாற்ற உதவுகிறது.

முடிவுரை

ஆரோக்கியமான மற்றும் மென்மையான கூந்தலைப் பெற விலையுயர்ந்த ரசாயனப் பொருட்கள் எதும் தேவையில்லை. மாற்றாக, இயற்கை சமையலறைப் பொருட்களை சரியாகக் கண்டறிந்து தொடர்ந்து பயன்படுத்துவது நன்மை பயக்கும். கற்றாழை, தயிர், தேன் மற்றும் எலுமிச்சை போன்ற எளிய வீட்டு வைத்தியங்கள் தலைமுடியை உள்ளிருந்து வளர்த்து, மென்மையாகவும், பளபளப்பாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: முடி உதிர்வை தடுக்க செம்பருத்தி ஹேர் பேக் – மருத்துவர் மைதிலி கூறும் எளிய முறை!

Image Source: Freepik

Read Next

ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையால் அவதியா? காலையில் இந்த 7 பானங்களை குடிங்க..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 16, 2025 21:13 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content