Doctor Verified

முடி உதிர்வதைத் தடுத்து அடர்த்தியான கூந்தலைப் பெற உதவும் டாப் 7 யோகாசனங்கள்.. மருத்துவர் விளக்கம்

முடி உதிர்வைத் தடுத்து நிறுத்தவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உணவுமுறைகளுடன் சில யோகாசனங்களை மேற்கொள்வது நன்மை பாக்கும். இதில் முடி உதிர்வைத் நிறுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் சில யோகாசனங்கள் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
முடி உதிர்வதைத் தடுத்து அடர்த்தியான கூந்தலைப் பெற உதவும் டாப் 7 யோகாசனங்கள்.. மருத்துவர் விளக்கம்


இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் முடி தொடர்பான பிரச்சனைகளும் அடங்குகிறது. அவ்வாறு ஆண்களும், பெண்களும் சந்திக்கக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக முடி உதிர்தல் பிரச்சனை உள்ளது. அதிலும் எல்லா வயதினருக்கும் பொதுவான பிரச்சனையாகும். இது பெரும்பாலும் மரபணு காரணிகளால் ஏற்படுகிறது. இது தவிர, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றின் காரணமாகவும் ஏற்படலாம்.

இந்நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் முடி உதிர்தலைத் தடுக்கவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முடியும். அவ்வாறு முடி ஆரோக்கியத்திற்கு ஒரு ஆரோக்கியமான பழக்கம் யோகா செய்வது ஆகும். இவை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இவை மன அழுத்தத்தைக் குறைத்து ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. இதில் முடி உதிர்தலைத் தடுக்க உதவும் ஏழு யோகாசனங்கள் குறித்து மருத்துவர் ஹன்சாஜி அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இப்போது காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: International Yoga Day 2024: சருமம், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகாவின் நன்மைகள் இதோ

முடி உதிர்தலைத் தடுக்க செய்ய வேண்டிய யோகாசனங்கள்

உத்தனாசனம் (Hastapadasana)

இது முன்னோக்கி குனிந்து வளைதல் (Standing Forward Bend) ஆசனமாகும். இந்த ஆசனத்தில் முதலில் நின்று முன்னோக்கி வளைந்து, காலின் பின்புறத்தை பிடிப்பதாகும். இதில் கால்களை இடுப்பு அகலமாகத் தள்ளி நின்று மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பின் கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தலாம். பின்னர், மூச்சை வெளியே இழுத்து முன்னோக்கி குனிந்து, கைகளைத் தரைக்கு அல்லது உங்கள் பாதத்திற்கு கொண்டு வர வேண்டும். சில இடைவெளிகளுக்குப் பின்னர், அந்நிலையிலிருந்து மெதுவாக மீண்டும் மேலே எழ மூச்சை உள்ளிழுக்கிறது. இந்த ஆசனம் செய்வது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம், முடி வேர்களை வலுப்படுத்த உதவுகிறது.

சக்ராசனம் (Chakrasana)

முடி உதிர்வை நிறுத்த, இரண்டாவதாக சக்ராசனம் அமைகிறது. இது உடலை சக்கரம் போல வளைத்துக் காட்டும் யோகாசனமாகும். இந்த ஆசனம் செய்ய, கால்களை விரித்து நிற்க வேண்டும். பின்னால், மூச்சை இழுத்து, கைகளையும் தலையையும் கீழே கொண்டு வந்து, கைகளை முதுகுக்குப் பின்னால் கொண்டு வந்து, தலையை உங்கள் முழங்காலை நோக்கி நகர்த்தும்போது விரல்களைப் பிடித்துக் கொள்ளலாம். இதில் முழு வட்டத்தை உருவாக்க வேண்டும். பின், மூச்சை இழுத்து, விரல்களை விடுவித்து, மெதுவாக மேலே எழலாம். இதில் தலைப்பகுதிக்கு இரத்த ஓட்டம் மேம்படுத்தப்பட்டு, முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உஷ்ட்ராசனம் அல்லது ஒட்டக போஸ் (Ustrasana)

உஸ்த்ராசனம் பயிற்சி செய்ய, தரையில் மண்டியிட்டு முழங்கால்களை இடுப்பு அகலமாகத் தள்ளி வைக்க வேண்டும். பின், கைகளை கீழ் முதுகில் வைத்து மூச்சை உள்ளிழுத்து மார்பை மேலே உயர்த்தலாம். பின்னர் மூச்சை இழுத்து பின்னால் சாய்ந்து கைகளை உங்கள் குதிகால் வரை கொண்டு வர வேண்டும். இந்த நிலையில் சில சுவாசங்களுக்கு பிடித்து பின்னர் பழைய நிலைக்குத் திரும்பலாம்.

சர்வாங்காசனம் (Sarvangasana)

இது தோள்பட்டை ஸ்டாண்ட் போஸ் (Shoulder Stand Pose) அதாவது ஒரு தலைகீழ் ஆகும். இது உச்சவரம்பு நோக்கி கைகளை உயர்த்தி முதுகில் படுத்து பயிற்சி செய்ய ஆசனமாகும். இந்த ஆசனம் செய்வதற்கு முதுகில் படுத்து, பக்கவாட்டில் கைகளை வைத்து கால்களை உச்சவரம்பு நோக்கி உயர்த்தி, மூச்சை இழுத்து, கால்களை தலையின் மேல் கொண்டு வர வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga for Hair Growth: ஒரே வாரத்தில் முடி உதிர்வு குறைந்து தாறுமாறாக முடி வளர இந்த 2 யோகாவை செய்யுங்க!

அதோ முக ஸ்வனாசனம் (Adho Mukha Svanasana)

இது கீழ்நோக்கிய நாய் போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் கைகள் மற்றும் முழங்கால்களில் தொடங்கி, மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேராகவும், முழங்கால்களை இடுப்புக்கு நேராகவும் வைத்திருக்க வேண்டும். பின் விரல்களை அகல விரித்து, கைகளைத் தரையில் அழுத்தி, முழங்கால்களைத் தரையில் இருந்து உயர்த்தி, கைகளை மேலே தூக்கி, தோள்களில் இருந்து இடுப்பை உயர்த்தி, ஒரு தலைகீழ் V வடிவததை உருவாக்க வேண்டும். இவை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைப்பது முடி வேர்களை வலுப்படுத்த உதவுகிறது.

ஹலாசனம் (Halasana)

முடி உதிர்தலைத் தடுப்பதற்கு இந்த ஆசனம் உதவுகிறது. இந்த ஆசனம் செய்வதற்கு, முதுகில் படுத்து கைகளை பக்கவாட்டில் வைத்து மூச்சை இழுத்து, கால்களை உச்சவரம்பு நோக்கி உயர்த்தி, மூச்சை இழுத்து, கால்களை உங்கள் தலையின் மேல் கொண்டு, கால்களை வைக்க வேண்டும். பின்னால், தரையில் சிறிது மூச்சைப் பிடித்து பின்னர் விடுவிக்கலாம்.

யோகா முத்திரை

இது அமர்ந்த நிலையில் இருக்கும் ஒரு யோகாசனமாகும். இது அதன் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. அதில் ஒன்றாக, ஆரோக்கியமான கூந்தல் அமைகிறது. இது பெரும்பாலும் தளர்வை ஊக்குவிக்கும் பயிற்சியாகும். இவை மன அழுத்தத்தைக் குறைத்து ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது. இதில் குறுக்கு கால் நிலையில் அமர்ந்து, மணிக்கட்டுகளை முதுகுக்குப் பின்னால் பிடித்துக் கொள்ளலாம். முதலில் முழுமையாக மூச்சை இழுத்து மூச்சை வெளியேற்றும்போது முன்னோக்கி குனிந்து, நெற்றியை தரையில் தொட வைக்கவும். பின்னர் மீண்டும் எழுந்து, மேல்நோக்கி வலது மற்றும் இடது பக்கமாக மூச்சை உள்ளிழுக்கலாம்.

இந்த யோகாசனங்களைத் தினசரி பயிற்சியில் செய்வது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமும், மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் முடி உதிர்தலைத் தடுக்க உதவுகிறது. இவற்றை அவரவர்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு ஆசனத்தையும் இரண்டு முதல் மூன்று சுற்றுகள் பயிற்சி செய்ய மருத்துவர் பரிந்துரைக்கிறார். ஒரு தகுதிவாய்ந்த ஆசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் யோகா பயிற்சி செய்ய நினைவில் கொள்ள வேண்டும்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Yoga for Hair: முடி உதிர்வைக் குறைத்து ஸ்ட்ராங்கான முடியைப் பெற இந்த யோகாசனம் செய்யுங்க!

Image Source: Freepik

Read Next

முகம் சுருக்கமில்லாமல் என்றும் இளமையான சருமத்தைப் பெற நீங்க செய்ய வேண்டிய யோகாசனங்கள்.. மருத்துவர் ஹன்சாஜி பரிந்துரை

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Oct 06, 2025 18:36 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

குறிச்சொற்கள்