$
Yoga Asanas That Can Help Hair Growth: பெரும்பாலான பெண்கள் நீண்ட முடியை பெற விரும்புகிறார்கள். அவற்றைக் கவனிப்பது கடினம் என்றாலும், நீண்ட கூந்தல் உங்கள் அழகை அதிகரிக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அடர்த்தியான மற்றும் நீண்ட கூந்தலுக்கு எண்ணெய் தடவுவது மிகவும் முக்கியம். இப்போதெல்லாம் பல பெண்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதை தவிர்க்கிறார்கள்.
ஆனால் உண்மையில், முடி வேர்களை வலுப்படுத்த, முடிக்கு எண்ணெய் வைப்பதும், உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேர்க்க வேண்டியது அவசியம். சரியான முடி பராமரிப்பு மற்றும் உணவு முறை தவிர, யோகாவும் முடி வளர்ச்சிக்கு உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த 2 யோகாசனங்களை தினமும் செய்வதன் மூலம், முடி வளர்ச்சியில் வித்தியாசத்தை காணலாம். இது குறித்து சர்வதேச யோகா ஆசிரியர் தில்ராஜ் ப்ரீத் கவுர் கூறிய தகவல் பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Hair Growth: நீளமான மற்றும் கருமையான கூந்தலுக்கு செம்பருத்தியை எப்படி பயன்படுத்துவது?
முடி வளர்ச்சிக்கு உதவும் ஸ்வனாசனா (Adho Mukha Svanasana)

- இதற்கு முதலில் இரண்டு கால்களுக்கும் நடுவில் இடைவெளி வைத்து நேராக நிற்கவும்.
- மூச்சை உள்ளிழுக்கும் போது, உங்கள் கைகளை மேலே உயர்த்தவும்.
- இப்போது மூச்சை வெளியேற்றும் போது, கைகளை வளைத்து, உடலை வளைத்து V போன்ற வடிவத்தை உருவாக்கி, தரையைத் தொடவும்.
- இப்போது, சாதாரணமாக சுவாசிக்கவும்.
- இந்த நிலையிலேயே சிறிது நேரம் இருக்கவும்.
- பின், மூச்சை வெளிவிட்டு இயல்பான நிலைக்கு வரவும்.
- இதை 3-4 முறை செய்யவும். இது மன அழுத்தத்தை நீக்குகிறது.
- இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது, முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர உதவும்.
- இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Hair Growth Oil: அடர்த்தியா, நீளமா முடி வளர இந்த எண்ணெய்களை முயற்சி செஞ்சி பாருங்க!
நீண்ட கூந்தலுக்கு சர்வாங்காசனம் (Sarvangasana)

- முதலில், தரையில் அல்லது பாயில் வசதியாக படுத்துக்க கொள்ளுங்கள்.
- இப்போது, மெதுவாக உங்கள் கால்களை மேலே உயர்த்தவும்.
- இதையடுத்து, இடுப்பை மேல்நோக்கி உயர்த்தி, கால்களை தலையின் திசைக்கு கொண்டு வரவும்.
- உங்கள் கால்கள், மார்பு மற்றும் வயிற்றை ஒரே வரியில் கொண்டு வந்து மேலே உயர்த்த முயற்சிக்கவும்.
- இடுப்பை ஆதரிக்க உள்ளங்கைகளைப் பயன்படுத்தவும். முடிந்தவரை இந்த நிலையில் 3 நிமிடங்கள் இருங்கள்.
- இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் முடி உதிர்வை குறைக்கிறது. சர்வாங்காசனம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் தலைவலியை சரி செய்கிறது.
Pic Courtesy: Freepic