Hair loss: காஃபியை இப்படி பயன்படுத்தினால் வழுக்கையில் கூட முடி மளமளவென வளரும்!

  • SHARE
  • FOLLOW
Hair loss: காஃபியை இப்படி பயன்படுத்தினால் வழுக்கையில் கூட முடி மளமளவென வளரும்!

முடி உதிர்வு பிரச்சனையை தடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல. என்னதான் முடி உதிர்வுக்கு சந்தைகளில் பல பொருட்கள் கிடைத்தாலும். அவை நமக்கு சாதகமான பலனையும் தருவதில்லை. ஆனால், இயற்கை பொருட்கள் உங்கள் பிரச்சினைக்கு நல்ல பலன் கொடுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உண்மைதான். காபி ஹேர் மாஸ்க் போன்ற சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Hair loss: பயங்கரமா முடி கொட்டுதா? முடி உதிர்வின் போது செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!

காபியில் உள்ள ஃபிளாவனாய்டுகள் முடி வறட்சியைத் தடுக்கவும், உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். சர்வதேச விளையாட்டு உணவியல் நிபுணர் ஸ்வாதி பத்வால், ஆண்களுக்கு முடி உதிர்வதைத் தடுக்க காபியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முடி உதிர்தல் பிரச்சனையை தடுக்க காபியை எப்படி பயன்படுத்துவது?

தேவையான பொருட்கள்:

காபி தூள் - 2 டீஸ்பூன்.
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்.

ஹேர் மாஸ்க் செய்முறை:

  • ஒரு சிறிய கிண்ணத்தில் காபி பொடியை போட்டு அதில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
  • இந்தக் கலவையை நன்றாகக் கலந்த பிறகு, உங்கள் உச்சந்தலையில் தடவவும்.
  • 10 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் தலையை விரல்களால் மெதுவாக மசாஜ் செய்யவும்.
  • ஹேர் மாஸ்கை உச்சந்தலையில் தடவி சுமார் 20-30 நிமிடங்கள் அப்படியே விடவும்.
  • அரை மணி நேரம் கழித்து தலைமுடியை வெறும் தண்ணீரில் கழுவவும். ஷாம்பூ உபயோகிக்க வேண்டாம்.

இந்த பதிவும் உதவலாம் : Hair Growth Tips: உங்க தலைமுடி எலி வால் மாதரி ஒல்லியா இருக்கா? இந்த 3 ஹேர் மாஸ்கை பயன்படுத்துங்க!

முடி உதிர்வுக்கு காபி எப்படி உதவும்?

இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும்

காஃபியில் உள்ள காஃபின் உச்சந்தலையில் பயன்படுத்தும் போது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது மயிர்க்கால்களுக்கு ஊட்டச்சத்துக்களை சிறப்பாக வழங்க உதவுகிறது.

DHT விளைவை குறைக்கும்

டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT), ஒரு ஆண் பாலின ஹார்மோன், மயிர்க்கால்களில் உள்ள ஏற்பிகளுடன் பிணைப்பதன் மூலம் முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. காஃபின் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோனின் விளைவுகளைத் தடுக்க உதவுகிறது, இதன் மூலம் ஆண்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனையைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : கரு கரு கூந்தலைப் பெற ஆம்லா உடன் இந்த ஒரு பொருளைச் சேர்த்து பயன்படுத்துங்க.

ஆக்ஸிஜனேற்ற பண்புகள்

காஃபியில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன, இது முடியை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

உச்சந்தலை ஆரோக்கியம்

கிரவுண்ட் காஃபி உங்கள் உச்சந்தலையில் லேசான எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படும். இது உச்சந்தலையில் இருந்து இறந்த சரும செல்களை அகற்றுவதன் மூலம் ஆரோக்கியமான உச்சந்தலையை ஊக்குவிக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Hair Detox: இந்த இரண்டே டீடாக்ஸ் பொருட்கள் போதும்… கூந்தல் பட்டு போல் மிருதுவா பளபளக்கும்!

உச்சந்தலை ஈரப்பதம்

தேங்காய் எண்ணெயை காபியில் கலந்து தலையில் தடவினால், உச்சந்தலையின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். இதனால், ஸ்கால்ப் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Hair Coloring Side Effects: முடிக்கு அடிக்கடி கலரிங் செய்வதில் இத்தனை பிரச்சனை இருக்கா?

Disclaimer