$
Is It Okay To Comb Wet Hair After Washing: குளிர்காலம் தொடங்கிவிட்டது, சருமத்தின் மீது மட்டும் அல்ல தலை முடி மீதும் தனி கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், குளிர் காலத்தில் தலைமுடி வறண்டு, உதிர துவங்கும். இது தவிர, அரிப்பு மற்றும் பொடுகு பிரச்சனையும் அதிகம் ஏற்படும்.
இயல்பாகவே குளிர்காலத்தில் முடி உலர நிறைய நேரம் எடுக்கும். எனவே பலர் நேரம் இன்மையால், தலைமுடி ஈரமாக இருக்கும்போதே சீப்பு வைத்து சீவுவார்கள். ஆனால் அப்படி செய்வது முடி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்திய தோல் மற்றும் முடி நிபுணரும் தோல் மருத்துவருமான டாக்டர் சித்ரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், ஈரமான முடியில் சீப்பு பயன்படுத்துவது நல்லதா? என்பது பற்றி விளக்கியுள்ளார். அதை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : அடர்த்தியான முடியை கட்டுப்படுத்த சில வழிகள்!
ஈரமான தலை முடியில் சீப்பு பயன்படுத்துவது நல்லதா?
நிபுணர்களின் கூற்றுப்படி, ஈரமான முடியை சீவுவது நல்லதல்ல. ஏனெனில், இப்படி செய்வதால் முடி அதன் இயல்பான நீளத்தை விட 30% வரை இழுக்கத் தொடங்குகிறது. மேலும், முடியை சீவும்போது, முடியின் வேர்கள் பாதிக்கப்படுவதால், அதிகப்படியான முடி உடையும். எனவே, நீங்கள் ஈரமான முடியில் உள்ள சிக்கை அகற்ற உங்கள் விரல்களைப் பயன்படுத்தவும். இல்லையெனில், பெரிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தலாம்.
ஈரமான முடியில் சீப்பு பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

ஈரமான முடியை சீவினால் என்ன நடக்கும்?
முடி ஈரமாக இருக்கும் போது முடியின் வேர்கள் மென்மையாக மாறும். இந்நிலையில், சீப்பு பயன்படுத்தும் போது முடி அதிகமாக உடைந்துவிடும். மேலும், முடி உலர அதிக நேரம் எடுக்கும். இதனால், தலையில் அரிப்பு ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம் : ஆரோக்கியமான கூந்தலுக்கு பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத குறிப்புகள்
முடியை சீவுவதற்கான சரியான வழி

முதலில் முடியை இரண்டு பகுதிகளாக பிரிக்க வேண்டும். பெரிய பற்கள் கொண்ட ஒரு பரந்த சீப்பின் உதவியுடன் மெதுவாக முடியை பிரிக்க தொடங்குங்கள். உங்கள் தலைமுடி மிகவும் ஈரமாக இருந்தால், ஹேர் ட்ரையரின் உதவியுடன் சிறிது உலர வைக்கவும். இதனால் முடி உடைவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம்.
நீங்கள் ஈரமான கூந்தலுடன் வெளியே செல்கிறீர்கள் என்றால், உங்கள் முடி அதிக ஈரமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சுற்றுச்சூழலில் உள்ள ஈரப்பதம் வேர்களை வலுவிழக்கச் செய்யும். ஈரமான முடியை சீப்புவது முடியை வலுவிழக்கச் செய்வது மட்டுமின்றி, முடி உதிர்வு பிரச்சனையையும் அதிகரிக்கும்.
Pic Courtesy: Freepik