Sat Sep 12, 2026 | 01:49 AM IST

Doctor Verified

நீரிழிவு நோயில் சரியான நேரத்தில் சாப்பிடுவது ஏன் அவசியம்? – நிபுணர் விளக்கம்

நீரிழிவு நோயாளிகள் சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வது ஏன் முக்கியம்? இரத்த சர்க்கரை, இன்சுலின் உணர்திறன் மற்றும் HbA1c கட்டுப்பாட்டில் உணவு நேரத்தின் பங்கு குறித்து நிபுணர் விளக்கம்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், சர்க்கரை, கார்போஹைட்ரேட், கொழுப்பு ஆகியவற்றை மட்டும் கணக்கில் எடுத்தால் போதாது. “எப்போது சாப்பிடுகிறோம்?” என்பதும் அதே அளவு முக்கியம்.

இந்தியாவில் வாழ்க்கை முறை மாற்றம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், சரியான உணவு நேரம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளது.

இந்த விஷயத்தில் விளக்கம் அளிக்கிறார், ஹைதராபாத் யசோதா மருத்துவமனையின் மூத்த ஆலோசகர், மருத்துவ இயக்குநர், மருத்துவ இரைப்பை குடல் & கல்லீரல் நிபுணர், டாக்டர் நவீன் போலவரபு.

சரியான நேரத்தில் சாப்பிடுவது ஏன் அவசியம்?

நமது உடலில் சர்க்காடியன் ரிதம் (Circadian Rhythm) எனப்படும் உள் கடிகாரம் உள்ளது. இந்த இயற்கை தாளம் தான் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம், இன்சுலின் செயல்பாடு, ஹார்மோன் சமநிலை ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.

தினமும் ஒரே நேரத்தில் உணவு எடுத்துக்கொண்டால், இரத்த சர்க்கரையில் திடீர் ஏற்ற இறக்கம் தவிர்க்கப்படும், இன்சுலின் உணர்திறன் மேம்படும். மாறாக, காலை உணவைத் தவிர்ப்பது, இரவு நேர தாமத உணவு இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த உணவு நேர அட்டவணை

நிபுணர்கள் பரிந்துரைக்கும் நேரம்:

  • காலை உணவு – காலை 8 மணி
  • மதிய உணவு – மதியம் 1 மணி
  • இரவு உணவு – இரவு 7 மணி

இந்த நேரங்கள் உடலின் இயற்கையான இன்சுலின் தாளத்துடன் ஒத்துப்போகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: சுகர் லெவலைக் கன்ட்ரோலில் வைக்கும் புளிப்பு ரொட்டி.. நிபுணரின் விளக்கம்

காலை உணவை தவிர்க்கக் கூடாததன் காரணம்

காலை உணவைத் தவிர்த்தால் கார்டிசோல், குளூகோகன் எனும் ஹார்மோன்கள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக இரத்த சர்க்கரை உயர்வு, அதிக பசி, பின்னர் அதிகமாக சாப்பிடுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். காலை 8 மணிக்கு ஓட்ஸ், கொட்டைகள் போன்ற சமச்சீரான காலை உணவு. ஒவ்வொரு 3–4 மணி நேரத்திற்கும் சிறிய, சீரான உணவு. மருந்துகளின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.

படுக்கைக்கு முன் உணவு – ஏன் ஆபத்து?

இரவில் தாமதமாக சாப்பிடுவது மெலடோனின் சுரப்பை பாதிக்கும், தூக்கத்தை கெடுக்கும், குளுக்கோஸ் உறிஞ்சுதலை குறைக்கும். படுக்கைக்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பு உங்கள் கடைசி உணவை முடிக்க வேண்டும். இதனால் சர்க்கரை ஸ்பைக் குறையும். HbA1c அளவு மேம்படும். காலை சோர்வு குறையும்.

நிபுணர் அறிவுரை

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த - சரியான உணவு நேரம், பகுதி கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தொடர்ந்த சர்க்கரை கண்காணிப்பு - இவை அனைத்தையும் ஒன்றாகப் பின்பற்ற வேண்டும்.

இறுதியாக..

நீரிழிவு நோயில், உணவு நேரம் ஒரு சக்திவாய்ந்த மருந்து. மருந்துகளுடன் சேர்த்து, சரியான நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கினால், நீரிழிவு கட்டுப்பாடு எளிதாகும். இன்றே தொடங்குங்கள். உங்கள் உடலுக்கு ஒரு ஒழுங்கை கொடுங்கள். சர்க்கரைக்கும் கட்டுப்பாடு வரும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான உடல்நல விழிப்புணர்வுக்காக மட்டுமே. உங்கள் நீரிழிவு நிலை, மருந்துகள் மற்றும் உடல்நலத்தைப் பொருத்து உணவு நேரத்தை மாற்றுவதற்கு முன், மருத்துவர் அல்லது டயட்டீஷியனின் ஆலோசனையை கட்டாயம் பெறவும்.

Read Next

நீரிழிவு நோயாளிகள் மறந்தும் எடுத்துக் கொள்ளக்கூடாத 3 வைட்டமின்கள் இதோ.. மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 15, 2025 13:31 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content