Health Benefits Of Nithyakalyani: எல்லா இடத்திலும் வளர்ந்து நிற்கும் நித்யகல்யாணி, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். இது புற்றுநோய் முதல் நீரிழிவு நோய் போன்ற தீர்க்க முடியாத நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது. நித்யகல்யாணி நன்மைகள் குறித்து இங்கே விரிவாக காண்போம்.
புற்றுநோய்க்கான அருமருந்து
நித்யகல்யாணி செடியை நன்கு காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதனை தினமும் தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிடவும். இது இரத்த புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றை குணமாக்கும்.
முக்கிய கட்டுரைகள்

காய்ச்சல் தீரும்
நித்யகல்யாணி காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது. நாள்பட்ட காய்ச்சலை தீர்க்க, நித்தியகல்யாணி இலை மற்றும் தண்டை நங்கு கொதிக்க வைத்து குடிக்கவும். தேவைப்பட்டால் இதில் தேன் கலந்துக்கொள்ளவும். இது காய்ச்சலை தீர்க்கிறது.
இதையும் படிங்க: சிறுகண்பீளை நன்மைகள் இங்கே!
மன ஆரோக்கியம் மேம்படும்
மன நோயை தடுக்கும் சிறந்த மூலிகையாக நித்யகல்யாணி திகழ்கிறது. இதற்காக இதன் பூக்களை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இதன் நறுமணம் மனதை அமைதியாக்கும். மேலும் இது மன அழுத்தம், கவலை மற்றும் பதட்டத்தை கட்டுப்படுத்துகிறது.
மாதவிடாய் சுழற்சி சீராகும்
இன்றைய காலத்தில் பெண்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்னை சீரற்ற மாதவிடாய். இது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இதனை சீராக்க நித்யகல்யாணி உதவுகிறது. இதற்கு நித்யகல்யாணி வேரை நன்கு கொதிக்க வைத்து தினமும் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
நீரிழிவு மேலாண்மை
சர்க்கரை நோயை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இதை கட்டுப்படுத்த சில வழிகள் உள்ளன. அதில் ஒன்று நித்யகல்யாணி. இந்த மூலிகையை தினமும் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும். இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
நித்யகல்யாணியின் வெளிப்புற பயன்பாடு எந்த பக்க விளைவுகளையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், சில அளவுகளில் இது மிகவும் நச்சுத்தன்மையுடையது என்பதால், மருத்துவ மேற்பார்வையின் கீழ் இதனை எடுத்துக்கொள்ளவும்.
Image Source: Freepik