Biryani Ilai Benefits: இந்த 5 நோய்களுக்கு அருமருந்து… பிரியாணி இலையின் மருத்துவ குணங்கள்!

  • SHARE
  • FOLLOW
Biryani Ilai Benefits: இந்த 5 நோய்களுக்கு அருமருந்து… பிரியாணி இலையின் மருத்துவ குணங்கள்!


இந்தியர்களின் அஞ்சறை பெட்டிகளில் இருக்கும் மசாலா பொருட்கள் வெறும் வாசனைக்காக மட்டுமல்ல, மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுத்துகின்றன. பண்டைய காலம் முதலே நாம் மரம், இலை, செடி, கொடிகளில் கிடைக்கக்கூடிய மருந்துகளையே நோய்களுக்கு பயன்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாகவே மூலிகைகளை மசாலா பொருட்களாக பயன்படுத்துகிறோம்.

இதையும் படிங்க: Cucumber For Weight Loss: கிடுகிடுவென உடல் எடை குறைய... தினமும் 2 துண்டு வெள்ளரி போதும்!

தற்போது இந்தியாவின் பிரபலமான உணவான பிரியாணியில் பயன்படுத்தப்படும் பிரியாணி இலையில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்…

அழற்சி எதிர்ப்பு:

பிரியாணி இலைகளில் லெனோலோல் உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை வீக்கம், வலி, மூட்டு விறைப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன. இது நமது எலும்பு பிரச்சனைகளை நீக்குகிறது.

நோயெதிர்ப்பு சக்தி:

பிரியாணி இலையில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் நம் உடலில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன. உண்மையில் இது நோய் எதிர்ப்பு சக்தியை தங்கமாக மாற்றுகிறது.

செரிமானம்:

இந்த இலைகளை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். இந்த இலைகள் செரிமான சாறுகளை உற்பத்தி செய்வதில் வேலை செய்கின்றன. இதனால், உணவு விரைவாக ஜீரணமாகும். மலச்சிக்கல், அஜீரணம், குமட்டல், வாந்தி, வாயு, இரைப்பை பிரச்சனைகள் நீங்கி செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

இதையும் படிங்க: அரிசி, கோதுமை பற்றி வெளியான அதிர்ச்சி தகவல் - எச்சரிக்கை மணியடித்த ஐசிஏஆர்!

புற்றுந்நோய்:

பிரியாணி இலையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இதன் காரணமாக, அவை புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் சக்தியைப் பெற்றுள்ளன. ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் பைட்டோ கெமிக்கல்கள் இதில் நிறைந்துள்ளன. இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், கொடிய புற்றுநோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் அதை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.

சர்க்கரை நோய்:

இந்த இலைகளை உட்கொள்வது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை பவுடர் மற்றும் கேப்சூல் வடிவிலும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை உட்கொள்வதால் நம் உடலில் இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கிறது. கட்டுப்பாடற்ற சர்க்கரை மற்றும் இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.

Image Source: Freepik

Read Next

Hibiscus For Hair Growth: முடி கொட்டாம அடர்த்தியா வளர செம்பருத்தியை இப்படி பயன்படுத்துங்க போதும்

Disclaimer

குறிச்சொற்கள்