$
Kerala Style Palada Pradhaman Recipe: பாலடை பிரதமன் என்ற பெயரை கேட்டவுடன், நாக்கில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். அப்படி ஒரு ருசியான ஸ்வீட் அது. இது கேரள மாநிலத்தை சேர்ந்தது. பாலடை பிரதமனை உட்கொள்ளும் போது நாம் சொர்கத்தை அடைந்ததை போல் உணர்வோம். அப்படி ஒரு ருசி மிகுந்த இனிப்பு உணவு அது.
பாலடை பிரதமனில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. ருசி மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் இது சிறந்து திகழ்கிறது. இத்தகைய பாலடை பிரதமனை எப்படி செய்வது? இதன் நன்மைகள் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக காண்போம்.

பாலடை பிரதமன் ரெசிபி (Palada Pradhaman Recipe)
தேவையான பொருள்கள்
பாலடை - 200 கிராம்
வெல்லம் - 350 கிராம்
தண்ணீர் - 4 க்
நெய் - 3 டீஸ்பூன்
சர்க்கரை - அரை கப்
தேங்காய் பால் - 2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
சுக்கு தூள் - 1 டீஸ்பூன்
நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் - தேவையான அளவு
இதையும் படிங்க: CWC Irfan Recipe: இர்ஃபான் செய்து அசத்திய கோழி மிளகு வறுவல் ரெசிபி.!
செய்முறை
முதலில் பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இதில் வெல்லத்தை சேர்த்து வெல்ல பாகு தயார் செய்யவும். பின்னர் இதனை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.
தற்போது பாலடையை நன்கு கழுவி, கால் கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
இது ஒருபுறம் இருக்க, வேறு ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
தற்போது ஊற வைத்த பாலடையை தண்ணீரில் வேக வைக்கவும்.
வேறு பாத்திரத்தில் தேங்காயை நெய்யில் வருத்து எடுக்கவும்.
இதையடுத்து, அதே பாத்திரத்தில் நெய் ஊற்றி நட்ஸ் மற்றும் உலர் பழங்களை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, வெல்லப் பாகு, வேக வைத்த பாலாடை, நெய், சுக்குப் பொடி சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
இதில் வறுத்த தேங்காய் துருவல், நட்ஸ் மற்றும் உலர் பழங்களை கலந்து அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவு தான், கேரளா ஸ்டைல் பாலடை பிரதமன் ரெடி.
சுட சுட இதனை ஒரு கப்பில் பரிமாறவும்.

பாலடை பிரதமன் நன்மைகள் (Palada Pradhaman Benefits)
பாலடை பிரதமனின் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. வெல்லம், பாலடை, தேங்காய் பால், சுக்குப் பொடி, நெய் போன்றவற்றில் பல நன்மைகள் உள்ளன. இவை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாலடை பிரதமன் சாப்பிடுவதால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். இது எளிதில் ஜீரணிக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், ஃப்ரீ ராடிகளால் ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆஸ்துமா பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.
இதில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதோ, அதே அளவுக்கு கலோரிகள் அதிகமாக உள்ளது. ஆகையால் அளவு கட்டுப்பாடு அவசியம். இல்லையெனில் எடை அதிகரிக்க இது காரணமாகிவிடும்.
Image Source: Freepik