சம்மரில் அசிடிட்டி பிரச்சனையா? விரைவில் விடுபட நிபுணர் சொன்ன இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க

Foods that fight acidity in the body: கோடைக்காலம் என்றாலே பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் அசிடிட்டி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். கோடை வெப்பத்தில் ஏற்படும் அசிடிட்டியிலிருந்து விடுபட நிபுணர் பரிந்துரைத்த உணவுகளை உட்கொள்ளலாம்.
  • SHARE
  • FOLLOW
சம்மரில் அசிடிட்டி பிரச்சனையா? விரைவில் விடுபட நிபுணர் சொன்ன இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க

How do you stop acidity in the summer: தொடர்ந்து அதிகரித்து வரும் கோடை வெப்பத்தில் மக்கள் பலரும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் அமிலத்தன்மை அதிகரிப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. அதாவது, வயிறு அதிகமாக அமிலத்தை உற்பத்தி செய்யும் போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் தொண்டை அல்லது மார்பில் கூர்மையான எரிச்சல் ஏற்படலாம். இது நெஞ்செரிச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் வயிற்று அமிலம் உணவுக்குழாய்க்குள் பாய்ந்து, புறணியை எரிச்சலூட்டுகிறது.

இந்நிலையில், மக்கள் அமிலத்தன்மை ஏற்படும் போது, உடனடி நிவாரணத்தைப் பெற விரும்பி குளிர் பானங்கள் குடிக்க விரும்புவர். ஆனால், இவை நிலைமையை மேலும் மோசமாக்கி, வீக்கம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனினும், கவலைப்பட வேண்டாம். வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. இதில் ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா அவர்கள் சில பயனுள்ள குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: சாப்பிட்ட பிறகு வயிற்றில் சூடு ஏற்படுகிறதா.? இந்த வீட்டு வைத்தியங்கள் மூலம் நிவாரணம் பெறுங்கள்..

நிபுணரின் கருத்து

ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா அவர்கள், தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், அமிலத்தன்மையைத் தடுக்க உதவும் நான்கு குளிர்ச்சியான உணவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “வெப்பத்தில் அமிலத்தன்மையுடன் போராடுகிறீர்களா? இந்த உணவுகளை நாளில் சேர்த்து, இந்த கோடையில் எரியும் உணர்வை வெல்லலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதில் அசிடிட்டியைத் தவிர்க்க நிபுணர் பரிந்துரைத்த உணவுகள் குறித்து காணலாம்.

கோடைக்காலத்தில் அசிடிட்டியை வெல்ல சாப்பிட வேண்டிய உணவுகள்

ப்ரோக்கோலி முளைகள்

ப்ரோக்கோலி முளைகள் வைட்டமின் சி மற்றும் கே ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் வளமான மூலங்கள் நிறைந்ததாகும். இது உடலை நச்சு நீக்கம் செய்யவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நச்சுகளை வெளியேற்றவும், நல்ல குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன. லவ்னீத் பத்ரா இந்த உணவுகளைச் சாப்பிட பரிந்துரைக்கிறார். இதை மதிய உணவு அல்லது இரவு உணவு கிண்ணங்களில் சேர்த்து சாப்பிடலாம். ஆனால், வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

புதினா தேநீர்

லோவ்னீத் பத்ரா அவர்களின் கூற்றுப்படி, புதினா புத்துணர்ச்சியூட்டும் மற்றும் குளிர்ச்சியூட்டும் பண்புகளைக் கொண்டதாகும். அது மட்டுமல்லாமல், புதினாவில் உள்ள மெந்தோல் ஆனது குடல் தசைகளை தளர்த்தி, செரிமான செயல்முறையை எளிதாக்கி, அமிலத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. உணவுக்குப் பிறகு, குறிப்பாக மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு புதினா தேநீர் அருந்துவது உடலுக்கு சிறந்த நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: நீண்ட கால அமிலத்தன்மை புற்றுநோயை உண்டாக்குமா.?  மருத்துவரிடம் இருந்து தெரிந்து கொள்வோம்..

கற்றாழை

இந்த இயற்கை அமில நிவாரணியானது வயிற்றுப் புறணியை மெதுவாக பூசி குணப்படுத்த உதவுகிறது. புதிய கற்றாழை ஜெல்லை நன்கு கழுவி, அதை உணவுக்கு 15-20 நிமிடங்களுக்கு முன்பாக, சர்க்கரை சேர்க்காத கற்றாழை சாற்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடலுக்குப் பல அதிசய நன்மைகளைத் தருகிறது. எனவே கோடையில் அசிடிட்டியிலிருந்து விடுபட விரும்புபவர்கள் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளலாம்.

பேல் சாறு

வூட் ஆப்பிள் என்றழைக்கப்படும் விளாம்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் சாறு வயிற்றை ஆற்றுவதுடன், அமிலத்தன்மைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. விளாம்பழம் இதற்கு சிகிச்சையளிக்கக்கூடிய நச்சு நீக்கும் கூறுகளைக் கொண்டுள்ளது. இதை அன்றாட உணவில் சேர்த்து உட்கொள்வது நன்மை பயக்கும். நீர்த்த தண்ணீரில் 30 மில்லி பேலை பிழிந்து, காலை உணவுக்கு முன் அதிகாலையில் இந்த பேல் சாற்றை பருகலாம்.

கோடைக்காலத்தில் அமிலத்தன்மையிலிருந்து விடுபட விரும்புபவர்கள் நிபுணர் பரிந்துரைத்த இந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த இரண்டு பொருட்களை மென்று தின்றால் இவ்வளவு நல்லதா?

Image Source: Freepik

Read Next

ஒரே மாசம்.. 5 கிலோ குறையும்.. இந்த டயட் மட்டும் ஃபாளோ பண்ணுங்க..

Disclaimer

குறிச்சொற்கள்