Constipation Home Remedy: மலச்சிக்கல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் வீட்டு வைத்தியம்!

  • SHARE
  • FOLLOW
Constipation Home Remedy: மலச்சிக்கல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் வீட்டு வைத்தியம்!


How to get relieve constipation : மலச்சிக்கல் என்பது அன்றாட வாழ்வில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை. தினமும் வயிறு சரியாக சுத்தம் ஆகாத நிலையில் இது ஏற்படலாம். மலச்சிக்கல் பிரச்சனையால் நீங்கள் தொடர்ந்து சிரமப்படுகிறீர்கள் என்றால், உங்கள் செரிமான அமைப்பு சரியாக வேலை செய்யவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உணவில் சரியான அளவு நார்ச்சத்து இல்லாதது, பச்சைக் காய்கறிகளை குறைவாக உண்பது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது போன்றவை மலச்சிக்கலை உண்டாக்கும் காரணங்கள். அதே போல, தூக்கம் மற்றும் மன அழுத்தம் கூட மலச்சிக்கல் பின்னால் இருக்கலாம். மலச்சிக்கலை சமாளிக்க, முதலில் உங்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். சரியான உணவு விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம் : மலச்சிக்கல் இத்தனை பாதிப்பை ஏற்படுத்துமா?

மேலும், சில வீட்டு வைத்தியங்களும் உங்கள் மலச்சிக்கலைப் போக்க உதவும். மலச்சிக்கலை நீக்க, உலர்ந்த பிளம்ஸில் செய்யப்பட்ட இந்த பானத்தை நீங்கள் குடித்தால், நிவாரணம் கிடைக்கும். அந்த பானத்தை எப்படி செய்வது அதன் நன்மைகள் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

பிளம்ஸின் நன்மைகள்

உலர்ந்த பிளம்ஸ் பொதுவாக கொடிமுந்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும், நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு பல தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. மலத்தை மென்மையாக்கவும் இது உதவுகிறது. இதில் சில ஃபீனாலிக் கலவைகள் உள்ளன, இது செரிமான அமைப்பை விரைவுபடுத்துகிறது மற்றும் வயிற்றை எளிதாக சுத்தம் செய்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Fruits Help Constipation: மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும் பழங்கள் என்னென்ன தெரியுமா?

பாலின் நன்மைகள்

உங்கள் வயிறு சரியாக சுத்தம் செய்யப்படவில்லை என்றால், இதற்காக நீங்கள் பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்ளலாம். மலச்சிக்கலை நீக்கி வயிற்றை சுத்தப்படுத்த பால் உதவுகிறது. காலையில் வயிறு சரியாக சுத்தமாக இல்லாதவர்கள், இரவில் தூங்கும் போது இளஞ்சூடான பாலை அருந்த வேண்டும். இதனுடன் 1 ஸ்பூன் நெய்யும் சேர்க்கலாம். பாலில் லாக்டோஸ் உள்ளது. குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படும் லேசான மலமிளக்கிகள் இதில் உள்ளன.

மலச்சிக்கலை போக்கும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்:

உலர்ந்த பிளம்ஸ் - 2 (இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்தது)
பால் - 1 கப்.

செய்முறை :

முதலில் பாலை நன்கு காய்ச்சி எடுக்கவும்.
இப்போது ஊறவைத்த பிளம்ஸ் பலத்தை பாலில் போட்டு நன்கு அரைக்கவும்.
இதோ, மலச்சிக்கலை போக்கும் மந்திர பானம் தயார்.
இதை, ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கவும்.
குழ்நதைகளுக்கும் இதை கொடுக்கலாம்.

Image Credit: freepik

Read Next

Good Sleep Remedy: இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

Disclaimer