காலை எழுந்ததும் வயிறு வீங்கிய உணர்வா? உடனே சரியாக டாக்டர் சொன்ன இந்த 3 ட்ரிங்ஸ் குடிங்க

How to prevent bloated stomach in the morning: காலை நேரத்தில் வயிறு உப்புசம் ஏற்படுவது இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதில் வயிற்று உப்புசத்தைத் தடுப்பதற்கு முக்கியமாக அதன் காரணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். எனினும், சில வாழ்க்கை முறை மாற்றங்களைத் தேர்வு செய்யலாம். இதில் காலை எழுந்ததும் உப்புசத்தைக் குறைக்க உதவும் பானங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
காலை எழுந்ததும் வயிறு வீங்கிய உணர்வா? உடனே சரியாக டாக்டர் சொன்ன இந்த 3 ட்ரிங்ஸ் குடிங்க


Morning drink to prevent bloating: அன்றாட வாழ்வில் பலரும் பல்வேறு உடல்நல அசௌகரியங்களைச் சந்திக்கின்றனர். குறிப்பாக மோசமான உணவுமுறை, போதிய உடல் செயல்பாடு இல்லாதது மற்றும் இன்னும் சில அன்றாட நடவடிக்கைகள் நம் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதில் வீக்கம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் அடங்குகிறது. பொதுவாக நாளின் எந்த நேரத்திலும் வீக்கம் ஏற்படலாம் மற்றும் பெரும்பாலும் வலி, அதிகப்படியான வாயு, அடிக்கடி ஏப்பம் மற்றும் வயிற்றில் சத்தம் போன்றவை ஏற்படக்கூடும். அதிலும் குறிப்பாக, காலை எழுந்ததும் வயிறு வீங்கிய உணர்வைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம்.

இவ்வாறு காலையில் சந்திக்கக்கூடிய வயிறு உப்புசம் பிரச்சனைக்கு பெரும்பாலும் முக்கிய காரணமாக இருப்பது இரவில் நாம் சாப்பிடக்கூடிய உணவாக இருக்கலாம். சில நேரங்களில் இரவில் தாமதமாக உணவு உட்கொள்வதும் நன்கு செரிமானம் அடையாமல் வயிறு உப்புசத்தை உண்டாக்கலாம். மேலும் போதுமான அளவு நீரேற்றம் இல்லாதது, உணவுக்குப் பிறகு அசைவு இல்லாமை, உப்பு மற்றும் சர்க்கரை அதிகமாக உட்கொள்வது மற்றும் வாயுவை உண்டாக்கும் உணவுகளை சாப்பிடுவது போன்ற பல்வேறு காரணிகள் வீக்கத்திற்கு பங்களிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: வயிற்று உப்புசத்துடன் அவதியா? செரிமானத்தை சீராக்கும் நிபுணர் சொன்ன இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க

வீக்கத்தைக் குறைக்க என்ன செய்வது?

வீக்கத்தைத் தடுப்பதற்கான முக்கிய திறவுகோலாக, அதன் காரணங்களைப் புரிந்து கொள்வது ஆகும். மேலும், அன்றாட உணவு மற்றும் வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். வீக்கத்திற்கு ஒரு பயனுள்ள தீர்வாக, செரிமானத்தை ஊக்குவிக்கும் ஆரோக்கியமான பானங்களுடன் நாளைத் தொடங்க வேண்டும்.

இது குறித்து "குடல் மருத்துவர்" என்று பிரபலமாக அறியப்படும் டாக்டர் சௌரப் சேத்தி எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் அவர்கள் வீக்கத்தை விரைவாக அகற்றுவதற்கு காலை நேரத்தில் மூன்று சிறந்த பானங்களைப் பகிர்ந்துள்ளார். அது குறித்து இதில் விரிவாகக் காண்போம்.

வீக்கத்தை விரைவாக அகற்ற இரைப்பை குடல் நிபுணரால் அங்கீகரிக்கப்பட்ட காலை உணவு பானங்கள்

சாதாரண கெஃபிர்

கெஃபிர் என்பது பாலில் தயாரிக்கப்படக்கூய்ய ஒரு புளிக்க வைக்கப்பட்ட பானமாகும். இவை குடல் ஆரோக்கியத்தைத் திறம்பட அதிகரிக்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த புரோபயாடிக் ஆகும். இது குறித்து டாக்டர் சேதி அவர்கள், “சாதாரண கேஃபிர் புரோபயாடிக் நிறைந்தது மற்றும் செரிமானத்தை மென்மையாக்குகிறது” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கெஃபிரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் குறைவான அளவிலான லாக்டோஸ் உள்ளது.

சூடான இஞ்சி தேநீர்

டாக்டர் சேதி அவர்களின் கூற்றுப்படி, இஞ்சி டீ உட்கொள்வது செரிமானத்தைத் தணிக்கவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. பொதுவாக, இஞ்சி டீ ஆனது குமட்டல், இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் வழிவகுக்கிறது. இதன் மூலம் உடலில் ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை ஊக்குவிக்கலாம். காலையில் இஞ்சி டீ குடிப்பது வீக்கத்தை விரைவாக அகற்ற உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: வீக்கம், வயிறு உப்புசத்தைக் குறைக்க ஆப்பிள் சைடர் வினிகரை எப்படி எடுத்துக்கணும் தெரியுமா? நிபுணர் தரும் டிப்ஸ் இதோ

தேன் மற்றும் இலவங்கப்பட்டையுடன் சூடான நீர்

தேன் மற்றும் இலவங்கப்பட்டை நிறைந்த சூடான நீரைக் குடிப்பது குடலை அமைதிப்படுத்த உதவுகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்தி, குடலில் உள்ள பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராட வழிவகுக்கிறது.

தேன் மற்றும் இலவங்கப்பட்டையில் நிறைந்துள்ள ஆரோக்கியமான பண்புகள் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. இவை சக்திவாய்ந்த இரட்டையர் நீரிழிவு நோயை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. மேலும் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், காயம் குணப்படுத்துவதை ஆதரிக்கவும் உதவுகிறது.

டாக்டர் சேதி அவர்களின் கூற்றுப்படி, இந்த எளிய காலை பானங்களின் உதவியுடன் காலையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கலாம். எனினும், தொடர்ந்து கடுமையான வீக்கம் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுவது நல்லது. எந்தவொரு அடிப்படை மருத்துவ நிலைமைகளையும் நிராகரிக்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: காலை நேரத்தில் வீங்கிய உணர்வா? உடனே சரியாக நிபுணர் சொன்ன இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

காதுல பட்ஸ் யூஸ் பண்ணி மெழுகை சுத்தம் செய்றீங்களா? நிபுணர் சொன்ன இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

Disclaimer