Remedies For Eye Bags: கண் வீக்கத்தை போக்க இந்த வீட்டு வைத்தியங்கள ட்ரை பண்ணுங்க!

  • SHARE
  • FOLLOW
Remedies For Eye Bags: கண் வீக்கத்தை போக்க இந்த வீட்டு வைத்தியங்கள ட்ரை பண்ணுங்க!


கண்களுக்குக் கீழே ஏற்படக்கூடிய வீக்கத்தை அகற்ற பல வழிகள் உள்ளன.

கண்கள் ஆரோக்கியம் மற்றும் அழகுக்கான அடையாளம். கண்களின் அழகைக் கெடுக்கும் விஷயங்களில் ஐ பேக் அல்லது அண்டர் ஐ பேக்குகளும் ஒன்று. கண்களுக்குக் கீழே வீக்கத்திற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கு மதுப்பழக்கம் ஒரு காரணம். இது தவிர, தூக்கமின்மை மற்றும் அதிக நேரம் டிவி, செல்போன் அல்லது லேப்டாப் பார்ப்பது ஆகியவையும் முக்கிய காரணங்களாகும்.

கண்களைச் சுற்றி கருவளையம் அல்லது வீக்கமானது பெரும்பாலும் தூக்கமின்மை மற்றும் அதிக தூக்கம் ஆகியவற்றால் ஏற்படுகிறது. மன அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக பெரும்பாலும் கண்கள் சோர்வாகவும் வீங்கியதாகவும் தோன்றலாம். இந்த வகை கண் இமைகள் தடிமனாக மாறுவதற்கு சில வைத்தியங்கள் உள்ளன.

பால்:

கண்களை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க பால் எப்படி உதவுகிறது தெரியுமா? முழு கொழுப்புள்ள பாலில் உள்ள கொழுப்பு, கண் வீக்கத்தை சரி செய்ய உதவுகிறது. இதன் அமினோ அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

மேலும், பால் உங்கள் கண்களை மீண்டும் ஈரப்பதமாக்க உதவுகிறது. இரண்டு பருத்தி துணிகளை சிறிது குளிர்ந்த பாலில் ஊற வைக்கவும். பின்னர் அதை உங்கள் கண்களுக்கு மேல் வைக்கவும். சுமார் 20-30 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் கண்களை குளிர்ந்த நீரில் கழுவவும்.

முட்டை:

முட்டை ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகளுக்கு பெயர் பெற்றது. கண்களுக்குக் கீழே உள்ள வீக்கத்தைப் போக்க முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளைக்கரு, கண்களைச் சுற்றியுள்ள தோலை உறுதிப்படுத்த உதவுகிறது.

ஒன்று அல்லது இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து நன்றாக அடிக்கவும். பின்னர், ஒரு மேக்கப் பிரஸைப் பயன்படுத்தி உங்கள் கண்களுக்குக் கீழே மெதுவாகப் தடவவும். சுமார் 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

சூடான நீர் மற்றும் உப்பு:

வெந்நீரையும் உப்பையும் ஒன்றாகப் பயன்படுத்துவதன் மூலமாகவும் கண் வீக்கத்தை குறைக்க முடியும். ஒரு பாத்திரத்தில் சிறிது சூடான நீரில் அரை தேக்கரண்டி உப்பு சேர்க்கவும். தண்ணீர் மிகவும் சூடாக இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். இதில் இரண்டு பருத்தி பஞ்சு உருண்டைகளை ஊற வைத்து, கண்களுக்கு மேல் வைக்க வேண்டும்.

பஞ்சில் உள்ள சூடு குறைந்ததும், மீண்டும் அதனை தண்ணீரில் நனைத்து கண்கள் மீது வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு செய்ய வேண்டும். இதன் மூலமாக கண்களுக்குக் கீழே உள்ள வீக்கம் குறையும்.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கில் கேடகோலேஸ் உள்ளது, இது கண்களுக்குக் கீழே ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை உறுதியாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கை மெல்லிய துண்டுகளாக வெட்டி சுமார் 30 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். பின்னர், இந்த துண்டுகளை கண்களுக்கு கீழே வீங்கிய பகுதிகளில் வைக்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு சிறிது குளிர்ந்த நீரில் கண்களைக் கழுவவும். இதை தினமும் காலையில் செய்து வர, நாள் முழுவதும் கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

Image Source: Freepik

Read Next

Uric Acid Level Remedies: யூரிக் அமிலத்தால் இத்தனை பிரச்சனையா? தவிர்க்க என்ன செய்வது?

Disclaimer

குறிச்சொற்கள்