Healthy Morning Breakfast Recipes: இன்று பெரும்பாலான வீடுகளில் காலை உணவு என்ன செய்யலாம் என்பது குறித்து பலரும் கவலை கொள்கின்றனர். உண்மையாக காலை உணவு மிகவும் முக்கியமான மற்றும் ஆரோக்கியமான ஒன்றாக அமைய வேண்டும். ஏனெனில், ஒரு நாள் ஒன்றில் காலை உணவை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ளும் போது, அது நாள் முழுவதும் மிகவும் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரக்கூடியதாக அமைய வேண்டும். எனவே தான் காலை உணவு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இரவு உணவுக்குப் பின் நீண்ட இடைவெளி இருப்பதால் காலை உணவை எடுத்துக் கொள்வதன் மூலமே அந்த நாளுக்கான மொத்த ஆற்றலையும் பெற முடியும்.
காலை உணவின் முக்கியத்துவம்
நாம் காலை உணவை முக்கியமாகக் கருதி உணவு உண்பதை அவசியமாக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம், அவை எண்ணெய் நிறைந்த உணவுகளாகவோ, கொழுப்பு நிறைந்ததாகவோ, அல்லது ஆரோக்கியமற்றதாகவோ இருப்பின், அது நாள் முழுவதும் புத்துணர்ச்சியைத் தருவதைக் காட்டிலும், உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக அமையலாம். எனவே நாள் முழுக்க புத்துணர்ச்சியாக இருக்கவும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் காலை உணவுகளை ஆரோக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Egg Chapati: இனி குழந்தைகளுக்கு சப்பாத்தியை இப்படி செய்து கொடுங்க… விரும்பி சாப்பிடுவாங்க!
சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை ரெசிபிகள்
காலை உணவில் சுவையான மற்றும் ஆரோக்கியமான ரெசிபியைச் செய்து சுவைக்கலாம்.
பிரட் உப்புமா
இந்த ரெசிபி செய்வதற்கு மிகக் குறைந்த பொருள்களே போதும். அதன் படி, இந்த ரெசிபி செய்ய தக்காளி, வெங்காயம் மற்றும் சிறிது குடை மிளகாய் போன்றவற்றைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பின் இதில் வழக்கமான மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு போன்றவற்றைச் சேர்த்து நன்கு வதக்கி, பிரட்களை துண்டுகளாக்கி சேர்க்க வேண்டும். இப்போது சுவையான மற்றும் சூப்பரான பிரட் உப்புமா தயாரானது. இது எளிமையான, சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாகக் கருதப்படுகிறது.
பன்னீர் ஸ்டிர் ஃப்ரை
இந்த சுவையான காலை உணவைத் தயார் செய்வதற்கு, பல்வேறு காய்கறிகளுடன் பன்னீரைச் சேர்த்து ரெசிபியைத் தயார் செய்யலாம். இது காலையில் சிறந்த வயிறு நிறைந்த உணவாகக் கருதப்படுகிறது. மேலும், இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இவை சிறந்த ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. இந்த உணவை காரமாக அல்லது மிதமான காரமாகவும் செய்து அருந்தலாம்.
வீட்டிலேயே செய்யப்படும் பாஸ்தா
வீட்டிலேயே எளிமையான முறையில் ப்ரோக்கோலி, கேரட், குடை மிளகாய் போன்றவற்றை வைத்து, இந்திய மசாலக்களை தூவி இந்த ரெசிபியைத் தயார் செய்யலாம். இவ்வாறு தயார் செய்யப்படும் பாஸ்தா ரெசிபி ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாகும். இதை நாம் கார்லிக் பிரட் மற்றும் சூப்புடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Kungumapoo Nanmaigal: செக்ஸ் வாழ்க்கை முதல் உடல் நலம் வரை.. குங்குமப்பூவின் பலே நன்மைகள் இங்கே..
ரவை ஊத்தப்பம்
ரவை கொண்டு தயார் செய்யப்படும் இந்த ரெசிபி மிகவும் எளிமையான ப்ரேக் ஃபாஸ்ட் ரெசிபியாகக் கருதப்படுகிறது. இதில் பழைய மாவில் ரவையை கலந்தோ அல்லது ரவை, மைதா, அரிசி மாவை கலந்தோ ஊறவைத்து மாவைத் தயார் செய்து ஊத்தப்பமாக செய்து அருந்தலாம். இந்த ரெசிபியை மேலும் சுவையாக்க ஊத்தப்பத்தின் மேலே வெங்காயம், கேரட் போன்றவற்றைத் தூவி, சட்னி மற்றும் சாம்பாருடன் சேர்த்து பரிமாறுவதன் மூலம் ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக் கொள்ளலாம்.
எலுமிச்சை சாதம்
எலுமிச்சை சாதம் தயார் செய்வதற்கு சாதத்தை வடிகட்டி, எலுமிச்சை பழத்தின் சாற்றைச் சேர்த்து கிளறி, ஒரு தாளிப்பை சேர்த்தால் நிமிடத்தில் எலுமிச்சைச் சாதத்தை தயார் செய்து விடலாம். இதை அரிசி மற்றும் அவல் இரண்டிலும் தயார் செய்யலாம். இதில் குறைவான மசாலாக்களே சேர்க்கப்படுகிறது. மேலும், இந்த அரிசி ம்ற்றும் எலுமிச்சையின் சுவை அதிகமாகவே இருக்கும்.
காய்கறி சான்விச்
பொதுவாக பிரட்களில் செய்யக் கூடிய சான்விச்சுகள் சுவையான மற்றும் ஆரோக்கியமான பிரேக் ஃபாஸ்ட் ரெசிபி ஆகும். இதற்கு முதலில் பன்னீர் ஸ்பிரட்டை தயாரித்துக் கொள்ள வேண்டும். மேலும் பன்னீர், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்த்து மிக்ஸி ஜாரில் ஐஸ்கட்டியுடன் அடித்துக்கொள்ள வேண்டும். இதை பிரட்டின் உள்புறத்தில் தடவி, அதில் நறுக்கிய கேரட் அல்லது பீட்ரூட், தக்காளி, வெங்காயம், வெள்ளரி மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு போன்ற விருப்பத்திற்கு ஏற்ற காய்கறிகளை வைத்து, சீஸ் தூவி சாப்பிடலாம்.
இவ்வாறு எளிமையான முறையில் இது போன்ற ஆரோக்கியமான காலை உணவு ரெசிபிகளைத் தயார் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Karamani Gravy: இந்த முறை காராமணியை இப்படி சமைத்து கொடுங்க… விரும்பி சாப்பிடுவாங்க!
Image Source: Freepik