$
Ugadi Pachadi Recipe: இந்தியாவில் புத்தாண்டின் தொடக்கமாக தெலுங்கானா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கோவாவில் யுகாதி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. உகாதி என்ற வார்த்தையில் யுகா என்பது வயது மற்றும் ஆதி என்பது ஆரம்பம் என்பதைக் குறிக்கிறது. இந்த சிறப்பு தினத்தில் மிக முக்கியமாக உகாதி பச்சடி தயார் செய்யப்படுகிறது.
உகாதி பச்சடி
உகாதி தினத்தில் செய்யப்படும் உகாதி பச்சடி அறுசுவைகளை வைத்து தயார் செய்யப்படும் ஒரு உணவாகும். அறுசுவை உணவுப் பொருள்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த உகாதி பச்சடி செய்ய தேவையான பொருள்கள் மற்றும் அதன் செய்முறை குறித்து காணலாம்.
உகாதி பச்சடி செய்ய தேவையானவை
- புளி - 50 கிராம்
- வேப்பம் பூ - அரை கப்
- மாங்காய் - 1
- வெல்லம் - 100 கிராம்
- இஞ்சி - 1 துண்டு
- பச்சை மிளகாய் - 3
- உப்பு - சிறிதளவு
இந்த பதிவும் உதவலாம்: Traditional Tea Recipes: குடி பட்வாவிற்கான பாரம்பரிய டீ ரெசிபி…
உகாதி பச்சடி செய்வது எப்படி?
- உகாதி பச்சடி செய்ய முதலில் வெல்லத்தை நன்கு தூளாக்கிக் கொள்ள வேண்டும். புளியைத் தனியே ஊறவைத்து ஒரு டம்ளர் அளவிலான கெட்டியான கரைசலை எடுத்துக் கொள்ளலாம்.
- பின், மாங்காயின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளலாம்.
- அதன் பிறகு வெல்லம், மாங்காய் துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், புளிக்கரைசல், மற்றும் உப்பு போன்றவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- இப்போது சுவையான உகாதி பச்சடி தயாரானது.
உகாதி பச்சடி தயார் செய்ய சேர்க்கப்படும் பொருள்கள் அனைத்தும் ஒவ்வொரு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த அறுசுவைகளும் கலந்தாற்போல, நம் வாழ்க்கையின் தருணங்களும் அமையும். இவை அனைத்தையும் தாண்டி நம் வாழ்க்கையை நல்ல படியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Tamil New Year 2024: மசால் வடை, பாயசம் முதல் ரசம் வரை எச்சில் ஊற வைக்கும் உணவுகள் இங்கே…
உகாதி பச்சடி மருத்துவ குணங்கள்
உகாதி பச்சடி தயாரிப்பில் வேப்பம்பூ தவிர்க்கவே கூடாத பொருளாகும். இது பல்வேறு தனித்துவமான நற்பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பச்சடியில் வேப்பம்பூ உடன் பச்சை மாங்காய் மற்றும் புளிக்கரைசலைச் சேர்த்து சாப்பிடுவது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும் குடல் புழுக்களை அழிக்க உதவுகிறது.
பச்சை மாங்காயை எடுத்துக் கொள்வது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றைத் தவிர்க்க உதவுகிறது. இதனுடன் பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டதாக அமைகிறது.
புளி சேர்ப்பது செரிமான ஆற்றலை மேம்படுத்துவதுடன் வயிறு மற்றும் குடலில் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இதனுடன் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக கோடை காலத்தில் உடலுக்குப் போதுமான குளிர்ச்சியைத் தருவதாகவும், உடலின் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
காரத்திற்காக சேர்க்கப்படும் பச்சை மிளகாய் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, உடலில் ஏற்படும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் சருமம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
இனிப்பு பொருளான வெல்லத்தில் ஜிங்க், மக்னீசியம் நிறைந்ததாகும். இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், தொற்றுநோய்கள் வராமல் தடுக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும் உதவுகிறது.
இஞ்சியில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், தாதுக்கள், வைட்டமின்கள் போன்றவை வலுவான நோயெதிர்ப்புச் சக்திக்கு உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துவதாகவும் அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Ugadi 2024: உகாதி முக்கியத்துவம், பாரம்பரிய மற்றும் சிறப்பு உணவுகள்…
Image Source: Freepik