Doctor Verified

நமக்கு ஏன் Goosebumps வருது தெரியுமா.? இதற்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன.? இங்கே மருத்துவர் கூறும் விளக்கம்...

நமக்கு அடிக்கடி வரும் Goosebumps-க்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? அது ஏன் வருது? எதுக்காக வருது? என்பதை மருத்துவர் விரிவாக விளக்குகிறார்.
  • SHARE
  • FOLLOW
நமக்கு ஏன் Goosebumps வருது தெரியுமா.? இதற்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன.? இங்கே மருத்துவர் கூறும் விளக்கம்...


நாம் அனைவருக்கும் அடிக்கடி ஏற்படும் ஒன்று தான் “Goosebumps”. பாடல் கேட்கும்போதோ, குளிரில் இருந்தாலோ, அல்லது பயப்படும்போதோ நம் உடலில் தோன்றும் இந்த சின்னச் சின்ன புடைப்புகளின் பின்னால் உண்மையில் பெரிய அறிவியல் உள்ளது என மருத்துவர் கூறுகிறார்.

Cardiologist நிபுணர் டாக்டர். அரவிந்த் துருவாசல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், Goosebumps குறித்து, ஒரு விரிவான விகத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் Goosebumps ஏற்படுவதற்கான காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார். அவை பின்வருமாறு..

Video: >

Goosebumps வருவதற்கான காரணங்கள்

இசை (Music)

ஒரு பாடலின் வரிகள் உங்கள் உணர்ச்சிகளோடு (feelings) ஒத்துப் போகும் நேரங்களில், மூளையில் Dopamine சுரந்து, மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சி மிகுதி ஏற்படுகிறது. அந்த நேரத்தில் Sympathetic Nervous System செயல்பட்டு, Erector pili என்ற சிறிய தசையை (tiny muscle) சுருங்கச் செய்யும். இதனால் முடி வெளியே தள்ளப்பட்டு, சிறிய புடைப்புகள் தோலில் தெரியும். இதுவே Goosebumps.

artical  - 2025-08-22T185121.720

குளிர்ச்சி (Cold Temperature)

நீங்கள் ஏர்-கண்டிஷன் (AC) வைத்து தூங்கும்போது அல்லது கடுமையான குளிர்ச்சியில் இருந்தாலோ, தோல் மிகவும் குளிராக உணரப்படும். அந்த நேரத்தில், உடல் வெப்பம் வெளியேறாமல் இருக்க மூளை, Erector pili muscle ஐ contract செய்யும். இதனால் முடி சற்று நிமிர்ந்து, உடல் வெப்பத்தை உள்ளே பாதுகாக்க முயற்சி செய்யும். ஆனால் மனிதர்களின் முடி மிக மெல்லியதாக இருப்பதால் இது முழுமையாக வேலை செய்யாது. எனினும் புடைப்புகள் தோன்றும்.

இந்த பதிவும் உதவலாம்: இதய பிரச்சனையை ரிவர்ஸ் செய்யணுமா? உங்க டயட்ல இந்த மாற்றங்களை மட்டும் கொண்டு வாருங்க

பயம் (Fear)

நாம் பயப்படும்போது, உடல் Fight or Flight mode க்கு செல்கிறது. அந்த நேரத்தில் Adrenaline hormone சுரந்து, Sympathetic Nervous System செயல்படும். இதனால் முடி அருகிலுள்ள Arrector pili muscle சுருங்கி, முடி நிமிர்ந்து புடைப்புகள் தோன்றும். இந்த விளைவு விலங்குகளிடம் மிகத் தெளிவாகக் காணப்படுகிறது.

இறுதியாக..

அதாவது, இசை, குளிர்ச்சி, பயம் – இந்த மூன்று காரணங்களால் தான் நமக்கு Goosebumps ஏற்படுகிறது. இது ஒரு சாதாரண உயிரியல் (Biological) செயற்பாடு மட்டுமே என்று மருத்துவர் கூறுகிறார்.

Read Next

உறக்கம் தான் ஆரோக்கியத்தின் ரகசியம்! எந்த வயதில் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்? மருத்துவர் விளக்கம்..

Disclaimer

குறிச்சொற்கள்