Sat Sep 12, 2026 | 12:06 AM IST

Doctor Verified

யாராச்சும் கொட்டாவி விட்டா.. உங்களுக்கு உடவே வருதா.? இது தான் காரணம்.! மருத்துவர் விளக்கம்..

யாராவது கொட்டாவி விட்டால் நாமும் விடுறோமா? இதுக்குள்ள என்ன ரகசியம் இருக்கிறது தெரியுமா? மருத்துவர் கார்த்திகேயன் கூறும் கொட்டாவியின் அறிவியல் காரணம் மற்றும் எம்பதி இணைப்பை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

நம்மில் யாராவது ஒருவர் கொட்டாவி விடும் போது, அருகிலிருப்பவரும் தன்னிச்சையாக கொட்டாவி விடுவதை கவனித்திருப்போம். ஆனால் இதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா? இதை மருத்துவ ரீதியாக விளக்கியுள்ளார் மருத்துவர் கார்த்திகேயன். பலர் சலிப்பு அல்லது தூக்கம் வந்தால் கொட்டாவி விடுகிறோம் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞான காரணம் இதை விட ஆழமானது.

Video LinK: https://youtu.be/bV-XoJl4GDA

மூளை குளிர வைக்கும் ஒரு இயற்கை செயல்பாடு

மருத்துவர் கூறுவதப்படி, கொட்டாவி விடுவது என்பது நம் மூளை தன்னை குளிர்விக்க செய்யும் இயற்கையான செயல். குறிப்பாக, கோடைக்காலத்தில் கொட்டாவி அதிகம் வருகிறது. ஏனென்றால் அந்த நேரத்தில் மூளையின் வெப்பம் அதிகரிக்கிறது.

நாம் கொட்டாவி விடும்போது ஆக்சிஜன் அதிகமாக நுரையீரலுக்குள் செல்கிறது, இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் மூளையில் குளிர்ச்சி ஏற்பட்டு நம்மை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. அதனால் சலிப்பாக இருந்தாலும், சோர்வாக இருந்தாலும், கொட்டாவி நம்மை “refresh” செய்யும் ஒரு இயற்கை முயற்சி.

artical  - 2025-10-10T200722.800

சோர்வு மற்றும் மூளை ரீபூட் செய்யும் இயந்திரம்

ஒரு நாள் முழுக்க வேலை செய்து சோர்வாக இருந்தாலும், நம் உடல் தன்னைத்தானே ரீபூட் செய்ய முயற்சிக்கும். அப்போதே கொட்டாவி வருகிறது. மருத்துவர் விளக்குவதில், கொட்டாவி விடும்போது:

* நுரையீரல் விரிவடைகிறது

* இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது

* முக தசைகள் இளகுகின்றன

இதனால் உடல் சோர்வை குறைத்து, புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: கேன்சரை விரட்டியடிக்கும் திராட்சை.! மருத்துவர் கூறும் உண்மை..

அடுத்தவர் கொட்டாவி விட்டா நாமும் விடுறதுக்கு காரணம் என்ன?

அது ஒரு “சம்பவச்செயல்” அல்ல. இதற்கு எம்பதி (Empathy) தான் காரணம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எம்பதி என்றால் மற்றவரின் உணர்ச்சியை நம்மால் உணர்வது.

ஒருவர் கொட்டாவி விடும்போது, அவரின் நிலையை மனதில் பிரதிபலிக்கும் ஒருவர் (அதாவது எம்பதி உள்ளவர்) தானாகவே கொட்டாவி விடுவார்.
ஆனால், மற்றவரின் உணர்ச்சியை உணர முடியாதவர்கள் எம்பதி குறைவானவர்கள்  அடுத்தவர் கொட்டாவி விட்டாலும், அவர்களுக்கு அதேபோல் கொட்டாவி வராது.

மருத்துவர் கார்த்திகேயன் இதை விளக்கும்போது, “இது சைக்கோபாத் அடையாளமல்ல, மாறாக, மனிதர்களின் உணர்வியல் பிரதிபலிப்பு,” என்று கூறுகிறார்.

artical  - 2025-10-10T200906.488

மருத்துவர் கூறிய முக்கிய கருத்து

* கொட்டாவி விடுவது சலிப்போ தூக்கமோ அல்ல, மூளை குளிர்விக்க உடலின் இயற்கை செயல்.

* கோடை காலத்தில் இது அதிகம் வரும்.

* எம்பதி உள்ளவர்கள் மற்றவர் கொட்டாவி விடும் போது பாதிக்கப்படுவர்.

* இது மனநிலை குறைபாடு அல்ல, ஒரு மனித இயல்பு.

இறுதியாக..

அதனால் அடுத்த முறை யாராவது கொட்டாவி விட்டால், “சலிக்குது போல!” என்று சொல்லாமல், அது ஒரு மூளை சிக்னல் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நம் உடல் நம்மை பாதுகாக்கும் மிகச் சிறந்த இயந்திரம் தான்!

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுத் தகவல்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எந்த மருத்துவ முடிவும் எடுப்பதற்கு முன் உங்கள் குடும்ப மருத்துவரை அணுகவும்.

Read Next

மூக்கை சுத்தம் செய்ய உப்பு நீர் – நாசல் சேலைன் வாஷ் செய்வது எப்படி? மருத்துவர்கள் கூறும் பாதுகாப்பான வழிகள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 10, 2025 20:19 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content