Goosebumps Feel: நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும் போதும், உங்களை மெய்சிலிர்க்கும் வைக்கும் விஷயங்கள் நடக்கும் போதும் உங்களையே அறியாமல் உடலுக்குள் சில மாற்றங்கள் நடக்கும். ஒரு படம் பார்க்கும் போது உங்களை மெய் மறக்க வைத்து உற்சாக மிகுதியை காண வைக்கும் காட்சி வந்தாலோ அல்லது திகில் காட்சி வந்தாலோ திடீரென உங்கள் உடலில் புல்லரிக்கும், முடிகள் அப்படியே சில விநாடி எழுந்திருத்து நிற்கும்.
இந்த சமயத்தில் பலரும் புல்லரிக்கிறது என சிந்தித்துக் கொள்வார்கள். சிலர் மட்டுமே இது எப்படி நடக்கிறது என சிந்திப்பார்கள். உடலில் இருக்கும் முடிகள் எப்படி அதுவாக எழுந்திருக்கும், நரம்பு, எலும்பு உள்ளிட்டவைகள் இருந்தால் அந்த பகுதிகளை நாம் தூக்கலாம். ஆனால் முடி எப்படி எழுந்திருக்கும் என்பதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.
அதிகம் படித்தவை: வெயில் காலத்தில் உடல் சூட்டையும் இரத்த சர்க்கரையையும் கட்டுப்படுத்த இந்த பானங்களை குடியுங்க!
புல்லரித்து முடிகள் எழுந்திருக்க காரணம் என்ன தெரியுமா?
நரம்பு புடைப்புகள் அல்லது முடி நிமிர்ந்து நிற்பது பொதுவாக பெரிய விஷயமல்ல. சில நேரங்களில் இது சில நோய்களாலும் ஏற்படலாம், இந்த நிலையில் உங்களுக்கு கண்டிப்பாக சிகிச்சை தேவைப்படலாம். இது நிகழ்வதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு முடியின் வேரையும் சுற்றி சிறிய அளவு தசை இருக்கும். இந்த தசை இறுக்கமடையும் போது முடி தானாக எழுந்திருக்கலாம். முடி எழுந்திருக்க இதுவே முக்கிய காரணமாகும்.
முடிகள் எழுந்து நிற்க காரணம் என்ன?
தசைகள் இறுக்கப்படும்போது, உங்கள் தோலில் உள்ள அனைத்து முடிகளும் எழுந்து நிற்கின்றன. இப்போது ஒரு கேள்வி வரும், தலையில் உள்ள முடி ஏன் எழுந்திருக்கவில்லை, கைகளில் உள்ள முடி மட்டும் எழுந்திருக்கிறது என்று. இதற்கு முக்கிய காரணம் தசைகள்தான். தலையில் தசைகள் இருப்பதில்லை, கைகளில் தான் அதிகம் இருக்கும் இதன்காரணமாகவே தசைகள் இறுக்கம் அடைந்து முடி எழுந்திருக்கிறது.
அட்ரினலின் என்றால் என்ன?
இதற்கான அறிவியல் காரணங்கள் என்று பார்த்தோம் என்றால் அறிவியலின் படி,
- அட்ரினலின் எனப்படும் மன அழுத்த ஹார்மோனின் ஆழ்மனதில் வெளியீடு காரணமாக இது நிகழ்கிறது.
- இந்த ஹார்மோன் சிறுநீரகங்களுக்கு மேலே உள்ள இரண்டு சிறிய தீங்கற்ற சுரப்பிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.
- இந்த ஹார்மோனின் வெளியீடு ஆனது தோல் தசைகள் சுருங்குவதை மட்டுமல்லாமல், மற்ற உடல் செயல்பாடுகளையும் பாதிக்கிறது.
- பொதுவாக மனிதர்கள் குளிர்ச்சியாகவோ, பயமாகவோ, உணர்ச்சிவசப்படும் போதோ, மனம் அழுத்தமாக இருக்கும் போதோ, மெய்சிலிர்க்கும் போதோ இந்த அட்ரினலின் ஆனது வெளியிடப்படுகிறது.

வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க காரணம் என்ன?
- அட்ரினலின் ஆனது உடலில் வெறும் முடியை எழுந்திருக்கச் செய்து புல்லரிக்க மட்டும் வைக்காது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
- அட்ரினலின் வெளியீடு ஆனது கண்களில் கண்ணீர், வியர்வை உள்ளங்கைகள், வேகமான இதயத் துடிப்பு, கைகள் நடுங்குதல், அதிகரித்த இரத்த அழுத்தம் மற்றும் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் படபடப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.
- குளிராக உணர்ந்தால், உங்கள் மூளை உங்கள் உடலை வெப்பமடையச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை சமிக்ஞை எழுப்பும்.
- உடல் படிப்படியாக குளிராக உணரால் உடனடியாக அதிக குளிரை உணரும் போது, இந்த சமிக்ஞை ஆனது உடனே எழும். இந்த நேரத்தில் புல்லரித்து முடிகள் எழுந்திருக்கக் கூடும்.
மேலும் படிக்க: பசும் பாலை விட பாதாம் பால் சிறந்ததா.? பாதாம் பாலின் நன்மைகள் இங்கே..
எப்போது எல்லாம் முடி எழுந்திருக்கும், நரம்பு புடைக்கும்?
உணர்ச்சி வசமான விஷயம், மெய்சிலிர்க்க வைக்க விஷயம், பயம், பிரமிப்பு அல்லது பாலியல் ஆசை போன்றதீவிர உணர்வை உணரும்போது, உங்கள் உடல் உங்கள் தோலின் கீழ் உள்ள சிறிய தசைகளை இறுக்கி, உங்கள் முடியை நிமிர்ந்து நிற்க வைக்கும் ஹார்மோன்களை வெளியிடுகிறது. முடிகள் அதிகம் இல்லாத போது நரம்பு புடைப்பானது ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.
image source: freepik