Obesity and Infertility: பெற்றோராக மாறுவது என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக அழகான தருணங்களில் ஒன்றாகும். ஆனால் மாறிவரும் வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் பெண்கள் கருவுறுதலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பெண்கள் கருவுறாமை பிரச்சனையை சந்திக்க முக்கிய காரணமாக அவர்களின் உடல் எடை இருக்கிறது. அதிக எடையும் கருவுறாமை பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும். ராஜ் ஹோமியோபதி கிளினிக்கின் ஹார்மோன் மற்றும் கருவுறுதல் நிபுணர் டாக்டர் ஜைனப் இதுகுறித்து கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.
உடல் எடையும் கருவுறுதல் பிரச்சனையும்
பிஎம்ஐ அளவு 35 உள்ள பெண்ணுக்கு, ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு 26% வரை குறைவாக இருக்கும், அதேசமயம் பிஎம்ஐ அளவு 40 உள்ள பெண்களுக்கு 21 மற்றும் 29க்கு இடையில் பிஎம்ஐ உள்ள பெண்களுடன் ஒப்பிடும்போது 43% வரை கருவுறுதல் வாயப்பு குறைவானதாக இருக்கிறது. அதிக எடை கருவுறுதலில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
உடல் பருமன் கருவுறுதலை எவ்வாறு பாதிக்கிறது?

ஹார்மோன் சமநிலையின்மை
அதிக எடையுடன் இருப்பது ஹார்மோன் சமநிலையில் இடையூறுகளை ஏற்படுத்தும். இது ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும், இது மாதவிடாய் சுழற்சி, பெண்களின் கருவுறுதலை பாதிக்கும்.
PCOS பிரச்சனை
அதிகரித்த எடை ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும், இது ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கருவுறுதல் பிரச்சனையை அதிகரிக்கும்.
கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு
பெண்களில் உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் இருப்பது என்பது பெரும்பாலும் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பாக இருக்கிறது. ஏனெனில் உடல் பருமன் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் உடலில் உள்ள பிற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், இது கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.
கருத்தரிக்க அதிக நேரம்
அதிக எடை மற்றும் பருமனான பெண்களை ஆரோக்கியமான எடை கொண்ட பெண்களை ஒப்பிடுகையில் அவர்களுக்கு கருவுறுதலுக்கு அதிக நேரம் எடுக்கலாம், இது கருவுறுதலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உடல் பருமன் பெண்களின் கருவுறுதலை மோசமாக பாதிக்கிறது, எனவே பெண்கள் ஆரோக்கியமான எடையை பராமரிக்க முயற்சிப்பது மிக அவசியம். சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிக முக்கியம். இதை பின்பற்றுங்கள். உடல் எடையை குறைப்பது எப்படி என்பதை அறிய இதை கிளிக் செய்யவும்.
Pic Courtesy: FreePik