Pregnancy Weight Gain: கர்ப்ப காலத்தில் பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த காலக்கட்டத்தில், ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக பெண்கள் அதிக எடை பிரச்சனையுடன் போராட வேண்டியிருக்கும்.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தி லான்செட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பு மாரடைப்பு மற்றும் சில சந்தர்ப்பங்களில் மரணம் கூட ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கர்ப்ப காலம் குறித்து ஆய்வு சொல்லும் உண்மை

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கர்ப்ப காலத்தில் உடலில் கொழுப்பு அதிகரிப்பதால், இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது, மேலும் இது பிற்காலத்தில் நீரிழிவு அபாயத்தையும் அதிகரிக்கிறது.
ஆய்வில் பங்கேற்ற சில பெண்கள் ஆரம்பத்தில் அதிக எடையுடன் இருந்துள்ளனர், தொடர்ந்து அவர்களின் எடை அதிகரித்த வண்ணமாகவே இருந்துள்ளது. இதன் காரணமாக, இதயம் தொடர்பான பிரச்சனைகளால் அவர்கள் இறக்கும் அபாயம் 84 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரித்தால் பல பிரச்சனைகள் வரலாம்
- கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பது பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- அத்தகைய சூழ்நிலையில், அதிக தூக்கம் அல்லது மிகக் குறைந்த தூக்கம் போன்ற பிரச்சனை இருக்கலாம்.
- இந்த சூழ்நிலையில், குறட்டையுடன், மார்பில் எரியும் உணர்வும் இருக்கலாம்.
- கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பதால் சோர்வு மற்றும் அதிக வியர்வை போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
- எடை அதிகரிப்பதால் உங்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் கூட அதிகரிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி?

- கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க யோகா, பிராணாயாமம், நடைபயிற்சி போன்றவற்றை செய்யலாம்.
- கர்ப்ப காலத்தில் உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றலாம்.
- இதற்காக, குறைந்த தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளையும் செய்யலாம்.
- இதற்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும், இதனால் உடல் எடை எளிதில் குறையும்.
Image Source: FreePik