Sat Sep 12, 2026 | 12:06 AM IST

Doctor Verified

Immunity-யை ராக்கெட் வேகத்தில் உயர்த்தும் காடை முட்டை! குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏன் சாப்பிட சொல்லுறாங்கனு தெரியுமா?

கோழி முட்டையை விட 6 மடங்கு சத்து அதிகம் கொண்ட காடை முட்டையின் ஆரோக்கிய நன்மைகளை டாக்டர் சிவராமன் விளக்குகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏன் இந்த முட்டையை உணவில் சேர்க்க வேண்டும்? முழு விவரம் இங்கே.

உடல் ஆரோக்கியத்தை காக்க சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மிக அவசியமான ஒன்று. குறிப்பாக, வெளியிலிருந்து வாங்கப்படும் ஃபாஸ்ட் புட் உணவுகளைப் போல் அல்லாமல் வீட்டில் தயாரிக்கும் சத்தான உணவு உடலுக்கு மிகுந்த பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் தரும் என்பதை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில், மனிதனின் அன்றாட உணவில் முக்கிய பங்கை வகிப்பது முட்டை. புரதம், வைட்டமின், இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச் சத்துகள் நிறைந்த கோழி முட்டை ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதே கருத்தை ஏற்றுக்கொள்ளும் மருத்துவர் சிவராமன், முட்டையை விட ஆறு மடங்கு சத்து அதிகம் கொண்ட ஒரு உணவைப் பற்றி தனது தமிழ் ஸ்பீச் யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

artical  - 2025-12-05T232604.898

குழந்தைகளுக்கு முட்டை ஏன் அவசியம்?

காலை பள்ளிக்குச் செல்லும் வளர்ப்புக் குழந்தைகளுக்கு, வாரத்தில் நான்கு நாட்கள் குறைந்தபட்சம் முட்டை கொடுக்க வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார். ஆனால், பச்சை முட்டை குடிப்பது மிகவும் அபாயகரமானது என்றும் எச்சரிக்கிறார். முட்டையில் இருக்கும் நோய் கிருமிகள் பச்சையாக எடுத்துக்கொள்ளும்போது நேரடியாக உடலுக்குள் செல்லும் அபாயம் அதிகம்.

Video Link:  https://youtu.be/67CJYQcRCD0

வெந்த முட்டையின் சத்துகள் அதிகரிக்கும்

முட்டையை வேகவைத்து சாப்பிடும்போது வைட்டமின் மற்றும் மினரல்கள் உடலால் விரைவாக உறிஞ்சப்படும். மேலும், மஞ்சள் கருவில் இருக்கும் கொழுப்பு ‘கெட்ட கொழுப்பு’ அல்ல; உடலுக்குத் தேவையான நன்மை தரும் கொழுப்பு என்பதும் மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் தினமும் முட்டை சாப்பிடலாமா.? நிபுணர்கள் கூறும் சரியான அளவு மற்றும் ஆரோக்கிய நன்மைகள்..

காட்டை முட்டை – சத்துக்கு அரசன்

கோழி முட்டையை விட 6 மடங்கு சத்து அதிகம் கொண்டுள்ளது காடை முட்டை என்று டாக்டர் சிவராமன் விளக்குகிறார். புரதச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு சக்தி உயர்த்தும் இயற்கை மூலப்பொருட்கள் ஆகியவை இதிலே மிக அதிகமாய் இருக்கின்றன.

இந்தியாவில் பெரிதாகப் பயன்படுத்தப்படாத போதிலும், வெளிநாடுகளில் காடை மற்றும் காடை முட்டைக்கு அதிக வரவேற்பு உள்ளது. உடல் பலவீனம், ரத்தசோகை, குழந்தைகளின் வளர்ச்சி போன்றவற்றுக்கு காடை முட்டை சிறப்பாக பயன் தருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

artical  - 2025-12-05T232655.572

இறுதியாக..

கோழி முட்டை ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், அதைவிட சத்து மிகுந்தது காடை முட்டை என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். தினசரி உணவில் காடை முட்டையைச் சேர்ப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பலனளிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி, வளர்ச்சி, இரத்த சத்து, உடல் உற்சாகம் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கப் பெறலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் நிபுணர்கள் வழங்கிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. ஏதேனும் உணவுப் பழக்கங்களை மாற்றும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது தனிப்பட்ட உடல்நல நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

Read Next

குளிர்கால நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய காய்கறிகள்.. நிபுணர் பரிந்துரை..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 05, 2025 23:33 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content