Fri Sep 11, 2026 | 11:11 PM IST

Doctor Verified

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு என்ன ஆகும் தெரியுமா.? டாக்டர் சிவராமன் விளக்கம்..

முட்டையில் உள்ள கோலின், வைட்டமின் B12, ரிபோஃப்ளேவின், செலினியம் உள்ளிட்ட முக்கிய சத்துக்கள் பற்றி டாக்டர் சிவராமன் விளக்கம். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள், கொலஸ்ட்ரால் உண்மை, பாய்ல் எக் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

முட்டை என்பது பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் நம்பிக்கையுடன் உண்ணும் உயர்சத்துள்ள உணவுப் பொருள். நவீன மருத்துவமும் முட்டையை “விட்டமின் டானிக்” எனவே சிறப்பிக்கிறது. புரதம், கொழுப்பு, அத்தியாவசிய உயிர்ச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள் என அனைத்தும் ஒரே உணவில் அடங்கிய அரிய பொருள் இதுதான்.

Video Link: https://youtu.be/pIXouSNpb60

மூளைக்கு முக்கியமான கோலின் அதிகம்

தாவர உணவுகளில் குறைவாக காணப்படும் கோலின் (Choline) முட்டையில் மிக அதிகம் உள்ளது. இந்தச் சத்து மூளையின் செல்களின் சவ்வை பாதுகாப்பதோடு, நினைவாற்றலையும், ஒருமித்த சிந்தனையையும் அதிகரிக்க உதவுகிறது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் இது மிகவும் தேவையான சத்தாகும்.

வைட்டமின் B12, ரிபோஃப்ளேவின், இரும்புச்சத்து – ஒரு உணவில் மூன்றும்

முட்டையில் நீரில் கரையும் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின் மற்றும் B12 அதிகம் உள்ளது. அதோடு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்டான செலினியம் மற்றும் உடலில் எளிதில் உறிஞ்சப்படும் இரும்புச்சத்தும் இதில் நிறைந்துள்ளது. அதிக கலோரி என்ற அபோர்வ கற்பனையும் தவறு; ஒரு முட்டையில் வெறும் 80 கலோரிகள் மட்டுமே உள்ளன. ஒரு இட்லி அளவுக்கு கலோரி இருந்தாலும், சத்துக்கள் பல மடங்கு அதிகம்.

கொழுப்பு, கொலஸ்ட்ரால் பற்றிய உண்மை – டாக்டர் சிவராமன் விளக்கம்

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பும், கொலஸ்ட்ராலும் இருப்பது உண்மை. ஆனால் உடலுக்கு அவசியமான நல்ல கொலஸ்ட்ரால் (HDL) கிடைக்க முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆய்வுகள் பல, முட்டை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் உயராது என தெளிவுபடுத்தி உள்ளன. ஒரு நாளுக்கு ஒரு முட்டை பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியமான சியாவன்பிராஷ் ரெசிபியை வீட்டிலேயே செய்யலாம்.. அதிகபட்ச நன்மைக்கு சரியான வழியில் இப்படி சாப்பிடுங்க

வேகவைத்த முட்டைதான் சிறந்தது

முட்டையை வேகவைத்து (Boiled Egg) சாப்பிடுவது தான் மிகவும் ஆரோக்கியமான முறை என டாக்டர் சிவராமன் வலியுறுத்துகிறார். பச்சை முட்டையில் பேக்டீரியா தொற்று அபாயம் அதிகம்; ஜீரணக் கோளாறுகளும் ஏற்படலாம்.

நாட்டுக்கோழி முட்டை – சத்துக்கள் அதிகம்

மிகவும் முக்கியமான அறிவுரை பிராய்லர் முட்டை விட நாட்டுக்கோழி முட்டை மேல். அதிலும், காடை முட்டையில் நாட்டுக்கோழி முட்டையை விட ஆறு மடங்கு அதிக சத்துக்கள் உள்ளன. சிறுவர், இளம் வயதினர் ஆகியோருக்கு வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் முட்டை கொடுக்க டாக்டர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.

இறுதியாக..

முட்டை என்பது சத்துக்களால் நிரம்பிய மிகச் சிறந்த இயற்கை உணவுகளில் ஒன்று. கோலின், வைட்டமின் B12, இரும்பு, செலினியம் போன்ற பல அவசியமான சத்துக்கள் இதனுள் அடங்கியுள்ளன. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் நரம்பு செயல்பாடு, தசை வளர்ச்சி, இரத்த சத்துக்கள், உடல் சக்தி ஆகியவை மேம்படும். சரியான அளவில், சரியான முறையில் எடுத்துக்கொண்டால் முட்டை உடல்நலத்திற்கு ஒரு ஆற்றல் சக்தி.

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தளம் / நிபுணர்களிடம் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டவற்றை நீங்கள் பின்பற்றுவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.

Read Next

எந்தெந்த உடல்நலப் பிரச்சனைகளுக்கு எந்தெந்த தினை சிறந்தது? நிபுணர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 20, 2025 09:34 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content