Thu Oct 29, 2026 | 09:55 AM IST

Doctor Verified

குழந்தைகளுக்கு பேரிச்சம்பழம் கொடுத்தால் ஏன் அவசியம்.? நன்மைகள் இங்கே..

குழந்தைகளுக்கு பேரிச்சம்பழம் கொடுப்பதால் கிடைக்கும் 5 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் என்ன? எப்போது, எப்படி கொடுக்க வேண்டும்? குழந்தை நல மருத்துவர் விளக்கம் உடன் முழு விபரம். பெற்றோர் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை.
குழந்தைகளுக்கு பேரிச்சம்பழம் கொடுத்தால் ஏன் அவசியம்.? நன்மைகள் இங்கே..குழந்தைகளுக்கு பேரிச்சம்பழம் கொடுத்தால் ஏன் அவசியம்.? நன்மைகள் இங்கே..

பேரிச்சம்பழம் என்பது மருத்துவ ரீதியாக மிகச் சத்தான உலர் பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வைட்டமின்கள், தாதுக்கள், இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள இதை குறிப்பாக வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கொடுப்பது உடல் – மன வளர்ச்சிக்கு மிகுந்த பயன் அளிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

புனே பிம்ப்ரி DPU சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் டாக்டர் ஷ்ரத்தா சலுங்கே, “பேரிச்சம்பழம் குழந்தைகளின் உயரம், இரத்த சோகை, நோய் எதிர்ப்பு திறன், எலும்பு வளர்ச்சி, மூளை செயல்பாடு என பல துறைகளில் நேரடி பயன் தரும்” எனக் கூறுகிறார்.

is-it-good-to-eat-dates-in-winter-02is-it-good-to-eat-dates-in-winter-02

குழந்தைகளுக்கு பேரிச்சம்பழம் கொடுப்பதின் நன்மைகள்

1. உடனடி ஆற்றல் — குழந்தைகளுக்கு 100% எரிசக்தி

பேரிச்சம்பழத்தில் இயற்கையான குளுக்கோஸ், பிரக்டோஸ் மிகுதியாக உள்ளதால், குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் அவர்கள் விளையாட்டு ஆற்றல், கவனம், உடல் தகுதி எல்லாமே மேம்படும். குழந்தைகளுக்கு பேரிச்சம்பழம் இயற்கையான “எனர்ஜி பூஸ்டர்”.

2. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்

பொட்டாசியம், இரும்பு மிகுதியாக உள்ளதால், இது குழந்தைகளை சளி, இருமல், காய்ச்சல், பருவமாற்றத் தொற்று போன்றவற்றிலிருந்து காக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

3. எலும்புகளை வலுப்படுத்தும்

பேரிச்சம்பழத்தில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி, பற்கள் வலிமை, தசை வளர்ச்சி மேம்பட உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இரவில் பாலும் பேரிச்சம்பழமும் சேர்த்து குடிங்க.. தூக்கமின்மை தானாக மறையும்.!

4. இரத்தசோகையை குறைக்கும்

இரும்புச்சத்து மிகுந்த பேரிச்சம்பழம் ஹீமோகுளோபின் உயர்த்த, இரத்தசோகையை குறைக்க உதவும். தினமும் ஒரு பேரிச்சம்பழம் குழந்தைகளுக்கு நல்ல பலன் தரும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

5. மூளை வளர்ச்சிக்கு சிறந்த உணவு

பேரிச்சம்பழத்தில் உள்ள Vitamin B6 & Magnesium குழந்தைகளின் நினைவாற்றல், கவனம், சிந்தனை திறன் மேம்பட உதவுகிறது.

எந்த வயதில் பேரிச்சம்பழம் கொடுக்கலாம்?

குழந்தை 1 வயது ஆன பிறகு திட உணவைத் தொடங்கிய பின் அரை பேரிச்சம்பழத்திலிருந்து தொடங்கி, அளவை மெதுவாக உயர்த்தலாம்.

is-it-good-to-eat-dates-in-winter-03is-it-good-to-eat-dates-in-winter-03

குழந்தைகளுக்கு பேரிச்சம்பழம் எப்படி கொடுக்கலாம்?

  •  பாலில் பேரிச்சம்பழப் பொடி கலக்கி கொடுக்கலாம்.
  • வேக வைத்து பேஸ்டாக செய்து கஞ்சியில் கலந்து கொடுக்கலாம்
  • கிச்சடி, கஞ்சி, சூப்பில் சேர்த்து கொடுக்கலாம்.
  • பெரிய குழந்தைகளுக்கு முழுப் பேரிச்சம்பழம் கொடுக்கலாம்.

கோடை காலத்தில் பேரிச்சம்பழம் உடல் சூட்டை அதிகரிக்கக்கூடும். எனவே குறைந்த அளவு மட்டுமே கொடுக்கவும்.

இறுதி வரிகள்

பேரிச்சம்பழம் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் இயற்கையான சத்துணவு. சரியான வயதில், சரியான அளவில் கொடுத்தால் குழந்தைகளின் ஆற்றல், நோய் எதிர்ப்பு, எலும்பு மற்றும் மூளை வளர்ச்சி ஆகிய அனைத்தும் மேம்படும்.

Disclaimer: இந்தக் கட்டுரை சுகாதாரத் தகவல்களை மட்டுமே வழங்குகிறது. உங்கள் குழந்தைக்கு பேரிச்சம்பழம் சாப்பிட்ட பிறகு வயிற்று வலி, வாயுத் தொல்லை அல்லது மலச்சிக்கல் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.

Read Next

→ இரவில் பாலும் பேரிச்சம்பழமும் சேர்த்து குடிங்க.. தூக்கமின்மை தானாக மறையும்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 08, 2025 09:12 IST

    Published By : Ishvarya Gurumurthy