Indoor Yoga Exercises For Monsoon: மழைக்காலத்தில் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகும். ஏனெனில், இந்த காலகட்டத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாகவே இருக்கும். எனவே சிறிய நோய்த்தொற்றுக்களும் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இதிலிருந்து விடுபட உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.
உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை மேம்படுத்தவும் ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வதுடன், உடற்பயிற்சி செய்வதும் மிகவும் முக்கியமாகும். மழை மற்றும் நீரினால் பரவக்கூடிய நோய்களைத் தவிர்க்க வெளியில் செல்வதைத் தடுக்கலாம். இதனால் யோகா மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வெளியில் செல்ல முடியாமல் போகலாம். எனவே யோகாவை வீட்டிற்குள்ளேயே செய்வது நல்லது. இந்த பருவமழையில் வீட்டிலேயே செய்யக் கூடிய யோகாசனங்களைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Monsoon Yoga Poses: மழைக்காலத்தில் உடல் ஆரோக்கியமா இருக்க இந்த யோகாசனங்களை செய்யுங்க
மழைக்காலத்தில் உட்புற யோகா செய்வது எப்பது?
மழைக்காலத்தில் வீட்டிற்குள்ளேயே செய்யக் கூடிய யோகாசனங்களைக் காணலாம்.
சூரிய நமஸ்காரம்
மழைக்காலம் மட்டுமல்லாமல் எல்லா பருவ காலங்களிலும் சூரிய நமஸ்காரம் செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உடலுக்குத் தேவையான வலிமையைத் தருவதுடன், சகிப்புத் தன்மையை மேம்படுத்த உதவுகிறது. சூரிய நமஸ்காரத்தில் செய்யக் கூடிய யோகாசனங்கள் வியர்வையை உருவாக்குகிறது. இந்த போஸ்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சேது பந்தனாசனா
சேது பந்தனாசனா யோகாசனம் ஆனது பாலம் போஸ் எனப்படுகிறது. இது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், உடல் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை உருவாக்கவும் உதவுகிறது. இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் முதுகில் படுத்து, முழங்கால்களை மடித்து, கால்களை தரையில் வைக்க வேண்டும். பின் மார்பில் கன்னத்தை அழுத்தும் போது வயிற்றைத் தரையிலிருந்து மெதுவாக உயர்த்த வேண்டும். இவ்வாறு ப்ரிட்ஜ் போஸை ஏற்படுத்தி, இந்த போஸில் 10 விநாடிகள் வைத்திருக்கலாம். பிறகு, மெதுவாக முதுகில் இறங்கி ஓய்வெடுக்கலாம்.
புஜங்காசனம்
இது கோப்ரா போஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் வீட்டிலேயே செய்யக் கூடிய எளிதான பயிற்சியாக அமைகிறது. இந்த ஆசனம் செய்ய முதலில் தரையில் வயிறு இருப்பது போல படுத்துக் கொண்டு, மார்புக்கு அருகில் உள்ளங்கைகளை வைக்க வேண்டும். பின் முழங்கைகளை உடலை நோக்கி இழுக்கப்பட்டு மேல்நோக்கிச் சுட்டிக்காட்டப்படுகிறது. மூச்சை உள்ளிழுத்து, தொப்புளைத் தரையில் தள்ளி, தலை மற்றும் மார்பை தரையிலிருந்து உயர்த்த வேண்டும். இந்த போஸில் இருக்கும் போது எளிதாக மற்றும் நிதானமாக சுவாசிக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் செய்ய வேண்டிய 5 யோகாசனங்கள்
அதோ முக சவனாசனம்
இது கீழ் நோக்கி எதிர்கொள்ளும் நாய் போன்ற அமைப்பைக் கொண்ட யோகாசனம் ஆகும். இந்த ஆசனத்தில் உடலின் நான்கு பக்கங்களிலிருந்தும், இடுப்பை மேலே இழுத்து, கீழ்நோக்கி எதிர்கொள்ளும் நாய் போஸில் கால் தசைகளை நீட்ட வேண்டும். இதில் கால் மற்றும் உள்ளங்கைகளால் தரையில் உறுதியாகப் பிடித்து முழு உடலையும் நீட்ட வேண்டும். இந்த ஆசனம் செய்வது முதுகு தசை வலிமை, தொடை எலும்புகள் நீட்சி மற்றும் மையத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆசனம் வீட்டிலேயே செய்யக் கூடிய யோகாசனம் ஆகும்.
கேட்-கௌ போஸ்
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் நான்கு கால்களில் தவழும் குழந்தைகளைப் போன்று இருக்க வேண்டும். இப்போது மணிக்கட்டுகள் தோள்களின் கீழும் முழங்காலானது இடுப்பின் கீழும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது கால் விரல்கள் பின்னோக்கி இருப்பதை உறுதி செய்யலாம். பின் முதுகு மற்றும் கழுத்தை நேராக வைத்துக்கொண்டு கீழே பார்க்க வேண்டும். இந்நிலையில் எடையானது நான்கு புள்ளிகளில் சமமாக இருக்க வேண்டும். இப்போது மூச்சை நன்றாக உள்ளிழுத்து பின் மேலே பார்க்க வேண்டும். இந்நிலையில் வயிற்றை கீழ்நோக்கி செலுத்த வேண்டும். இதில் முதுகுத்தண்டு குறுகி வயிறு பகுதி கீழே இருக்கும். மூச்சை வெளியே விட்டுத் தலையை கீழ் நோக்கி இறக்க வேண்டும். இந்நிலையில், முதுகுத்தண்டு விரிவடைந்து வயிறு பகுதியானது மேல் நோக்கி இருக்கும்.
இந்த ஆசனங்கள் அனைத்தும் மழைக்காலத்தில் வீட்டினுள்ளேயே செய்யக்கூடிய யோகாசனம் ஆகும். இது போன்ற யோகாசனங்களை மேற்கொள்வது உடலில் நோயெதிப்புச் சக்தியை மேம்படுத்தவும், உடலை வலிமையாக வைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Monsoon Yoga Asanas: இந்த குளிர்காலத்தில் உடலை சூடாக வைக்க நீங்க செய்ய வேண்டிய யோகாசனங்கள்
Image Source: Freepik