Mind Relaxation Yoga: மனதை ரிலாக்ஸாக வைக்க இந்த 3 யோகாசனங்களை செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
Mind Relaxation Yoga: மனதை ரிலாக்ஸாக வைக்க இந்த 3 யோகாசனங்களை செய்யுங்க

எனவே மனதை தளர்வாக வைத்திருப்பதன் மூலம் மட்டுமே உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதுடன், அன்றாட வாழ்க்கையும் சுலபமாக இருக்கும். மேலும் மனம் அமைதியில்லாமல் இருப்பது சில சமயங்களில் சோர்வாகவும், பலவீனமாகவும் உணர வைக்கும். இதற்கு சிறந்த தீர்வாக யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஏனெனில், யோகா செய்வது மனதை ரிலாக்ஸாக வைப்பதுடன், மன அழுத்தத்தை சமாளிக்கவும் உதவுகிறது. இதில் மனதை நிம்மதியாக வைக்க உதவும் சில யோகா பயிற்சிகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Exercise For Nose Shape: மூக்கு ஷார்ப்பா சூப்பரான வடிவத்தைப் பெற இந்த உடற்பயிற்சி எல்லாம் செய்யுங்க

மனதை அமைதியாக வைக்க உதவும் யோகாசனங்கள்

அனுலோம் - விலோம்

இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த யோகாசனம் ஆகும். இந்த ஆசனத்தில் ஒரு நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, மற்றொன்றின் வழியாக மூச்சை வெளியேற்றப்படுகிறது. இதனால், இரத்த ஓட்டம் அதிகரித்து மனதை நிம்மதியாக வைக்கவும் உதவுகிறது.

மேலும், இந்த யோகாசனம் மன அழுத்தத்தைக் குறைக்கவும், செறிவை அதிகரிக்கவும் உதவுகிறது. பகலில் எந்த நேரத்திலும் இந்த யோகாவை செய்யலாம். அதன் படி, 15 முதல் 20 நிமிடங்கள் வழக்கமான பயிற்சி மேற்கொள்வது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கவனமாக சுவாசிப்பது

மைன்ட்ஃபுல் ப்ரீத்திங் மனதை அமைதியாக வைக்க உதவும் சிறந்த வழி ஆகும். இதில் மூச்சு விடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதாவது மூச்சை உள்ளிழுக்கும் அல்லது வெளிவிடும் போதும் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இந்த யோகாசனம் மன அழுத்தம் மற்றும் பதற்றத்திலிருந்து நிவாரணத்தைத் தருகிறது. மேலும், வேலையில் அதிக கவனம் செலுத்த உதவுகிறது. இந்த யோகாசனம் செய்வது கார்டிசோலைக் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் மற்றும் வலியைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Yoga for asthma: நீங்க ஆஸ்துமா நோயாளியா? அப்போ தினமும் இந்த ஆசனத்தை செய்யுங்க!

ஓம்கார் சாதனா

இது பழங்காலத்தில் பின்பற்றப்படும் சிறந்த ஆசனம் ஆகும். இது பழங்காலத்தில் முனிவர்களால் பின்பற்றப்பட்டது. இதில் ஒரு நபர் ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து விடுவர். இது மனதில் அமைதியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துவதற்காக செய்யப்படுகிறது. இந்த யோகா முறையில், ஓம் என்ற ஒலி உச்சரிக்கப்படுகிறது.

அதாவது, இந்த யோகாசனத்திற்கு ஆசனத்தில் அமர்ந்து, ஓம் என்ற எழுத்தை ஜபிக்க வேண்டும். இரண்டாவது முறை மனதில் மந்திரத்தை உச்சரித்து, பிறகு மூன்றாவது முறை மீண்டும் ஒலியை உணர வேண்டும். இந்த ஆசனம் மன அமைதிக்கு சிறந்த ஆசனமாகக் கருதப்படுகிறது.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

மனதை அமைதியாக வைக்க, இந்த விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்கு கடினமாக இருப்பின், எண்ணங்களை நெருக்கமான ஒருவருடன் பகிர்ந்து கொள்ளலாம். வெளிப்படையாக பேசுவதன் மூலம் மன அமைதி பெறலாம்.
  • பகலில் சிறிது நேரம் ஒதுக்கி மனதை ரிலாக்ஸாக வைத்திருக்கும் முயற்சியை செய்யலாம். அதாவது இந்த நேரங்களில் உங்களுக்குப் பிடித்த பணிகளுக்கு நேரம் கொடுக்கலாம்.

இந்த முறைகளின் மூலம் மனதை அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். எனினும், இதன் மூலம் நிவாரணம் கிடைக்கவில்லையெனில் மனநல நிபுணரைக் கலந்தாலோசிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga For Body Heat: உடல் சூட்டைத் தணிக்க நீங்க செய்ய வேண்டிய யோகாசனங்கள்!

Image Source: Freepik

Read Next

Exercise For Nose Shape: மூக்கு ஷார்ப்பா சூப்பரான வடிவத்தைப் பெற இந்த உடற்பயிற்சி எல்லாம் செய்யுங்க

Disclaimer

குறிச்சொற்கள்