Yoga for asthma: நீங்க ஆஸ்துமா நோயாளியா? அப்போ தினமும் இந்த ஆசனத்தை செய்யுங்க!

  • SHARE
  • FOLLOW
Yoga for asthma: நீங்க ஆஸ்துமா நோயாளியா? அப்போ தினமும் இந்த ஆசனத்தை செய்யுங்க!


Which yoga is best for asthma: ஆஸ்துமா என்பது உலகளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ள ஒரு நாள்பட்ட நோயாகும். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதில் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. நோய் தீவிரமடைந்தால், அது உயிருக்கே ஆபத்தாகலாம். ஆஸ்துமாவின் சிக்கல்களைக் குறைக்க நோயாளிகளுக்கு இன்ஹேலர்கள் வழங்கப்படுகிறது.

அதே நேரத்தில், நோயாளிகளுக்கு மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகிறது. இவை ஆஸ்துமாவின் சிக்கல்களைக் குறைக்கவும், நுரையீரலை வலுப்படுத்தவும் உதவுகிறது. மருந்து மாத்திரைகளை விட யோகாவும் ஆஸ்துமாவின் அபாயத்தை குறைக்க உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நீங்கள் சரியாகாத்தான் படித்தீர்கள். ஆஸ்துமா நோயாளிகள் சுவாசக் கோளாறுகள் நீங்க உதவும் யோகாக்கள் பற்றி பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Childhood Asthma: குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட காரணம் என்ன? சரிசெய்வது எப்படி?

ஆஸ்துமாவின் அறிகுறிகள்

  • இரவில் மோசமாகும் இருமல்.
  • மூச்சுத்திணறல்.
  • மார்பு பகுதியில் இருந்து விசில் சத்தம்.
  • சுவாசிப்பதில் சிரமம்.
  • மார்பில் இறுக்கமான உணர்வு.
  • தடுக்கப்பட்ட மற்றும் அடைத்த மூக்கு.
  • அரிப்பு உணர்வு, நீர் நிறைந்த கண்கள்
  • அடிக்கடி தும்மல்.
  • தோல் அலெர்ஜி.

சுவாசப் பிரச்சினையை குறைக்கும் யோகாக்கள்

புஜங்காசனம் (Bhujangasana)

புஜங்காசனம் சுவாசப் பிரச்சினையை நீக்குவதில் பெரும் பங்கு வகுக்கிறது. இதை செய்வதற்கு முதலில், நீங்கள் யோகா மட்டில் குப்புற படுக்கவும். உங்கள் கால்களை நேராக நீட்டவும். பின்னர், உங்கள் தலையை மேல்நோக்கி தூக்கவும். உங்கள் இடுப்பு பகுதி வரை நன்றாக உயர்த்தவும். உங்கள் கைகளில் முன்னாள் ஊன்றி உங்கள் உடலுக்கு சப்போர்ட் கொடுக்கவும்.

மகராசனம் (Makarasana)

மகராசனம் பயிற்சி செய்யும் போது, ​​ஆழ்ந்த சுவாசம் மற்றும் மூச்சை வெளியேற்றும் செயல்முறை ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது நுரையீரல் திறனை அதிகரிக்கிறது. இதை செய்ய முதலில், யோகா பாயில் குப்புற படுக்கவும்.

இப்போது தலை மற்றும் தோள்களை உயர்த்தவும். உங்கள் உள்ளங்கைகளை உங்கள் கன்னத்திலும் முழங்கைகளை தரையில் வைக்கவும். கண்களை மூடி, மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக வெளிவிடவும். தினமும் 10 நிமிடம் இந்த ஆசனம் செய்வதால் நுரையீரல் திறன் அதிகரிக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Child Asthma Treatment: குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவை நிர்வகிப்பது எப்படி?

தண்டசனா (Dandasana)

தண்டசனா செய்ய முதலில் யோகா பாயில், உங்கள் கால்களை நீட்டி அமரவும். இப்போது, உங்கள் முத்துவை நேராக வைத்து கைகளை இருப்புக்கு அருகில் தரையில் வைக்கவும். உங்கள் மார்பு பகுதியை உயர்த்தி தலையை நேராக வைத்து மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக வெளிவிடவும். இதை தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் செய்யவும். இதனால், சுவாச பிரச்சினை வெகுவாக குறையும்.

கபால்பதி (Kapalabhati)

கபால்பதி பிராணயாமா ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மிகவும் எளிமையான யோகாசனம். நுரையீரலில் ஆக்ஸிஜனின் ஓட்டம் மிக வேகமாக அதிகரிக்கிறது. இந்த ஆசனத்தை தினமும் 15 நிமிடங்கள் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Allergic Asthma: அலெற்சியால் வரும் ஆஸ்துமாவின் அறிகுறிகளும், கட்டுப்படுத்தும் முறைகளும்

கபால்பதி ஆசனம் செய்ய, நீங்கள் வஜ்ராசனம் அல்லது பத்மாசன தோரணையில் அமர வேண்டும். பின், உங்கள் இரு கைகளாலும் சித்த முத்திரையை உருவாக்கவும். உங்கள் இரு முழங்கால்களிலும் அதை ஓய்வெடுக்கவும். இப்போது, மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக வெளிவிடவும். மூச்சை இழுக்கும்போது, ​​வயிற்றை உள்நோக்கி இழுக்கவும். இதை குறைந்தது 30 முதல் 50 முறை செய்யவும். துவக்கத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் செய்தால் போதுமானது.

Pic Courtesy: Freepik

Read Next

Chakras Meditation: சக்ரா தியானம் செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? எப்படி செய்வது

Disclaimer