Best yoga asanas to reduce tennis elbow: உடலைக் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியமாகும். ஆனால் பல்வேறு சூழ்நிலைகளால் உடலில் சில உறுப்புகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறே டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல், முன்கை தசைகளை அதிகம் பயன்படுத்தக்கூடிய நபர்கள் டென்னிஸ் எல்போ பிரச்சனையைச் சந்திக்கின்றனர். இந்த டென்னிஸ் எல்போ என்பது முழங்கை தசைகளில் ஏற்படும் வலியைக் குறிக்கிறது. இந்நிலை மிகவும் வலிமிகுந்ததாகவும், வெறுப்பூட்டும் நிலையாகவும் இருக்கும்.
இந்த வலியிலிருந்து விடுபட ஓய்வு மற்றும் குளிர் அழுத்தம் சில பாதுகாப்பான மீட்பு விருப்பமாக இருப்பினும் டென்னிஸ் எல்போவுக்கு சில யோகாசனங்களை முயற்சிக்கலாம். ஆம். மென்மையாக, இலக்கு வைக்கப்பட்ட யோகாசனங்களை செய்வது முன்கை தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வழக்கமான பயிற்சி மேற்கொள்வது மேம்பட்ட நிலைத்தன்மை மற்றும் அதிகளவிலான இயக்கத்திற்கும் வலியைக் கணிசமாகக் குறைக்கவும் வழிவகுக்கிறது. இதில் டென்னிஸ் எல்போ வலியிலிருந்து விடுபட உதவும் சில யோகாசனங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: World spine day 2024: வலுவான, ஆரோக்கியமான முதுகெலும்புக்கு சிறந்த யோகாசனங்கள்
டென்னிஸ் எல்போ என்றால் என்ன?
டென்னிஸ் எல்போ நிலையானது பக்கவாட்டு எபிகொண்டைலிடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது முழங்கையின் வெளிப்புறப் பகுதியைப் பாதிக்கும் ஒரு வலிமிகுந்த நிலையைக் குறிப்பதாகும். முன்கையின் தசைகள் மற்றும் தசைநாண்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஆய்வில் இந்நிலையானது பொதுவாக டென்னிஸுடன் தொடர்புடையதாக இருப்பினும் தட்டச்சு செய்வது, தோட்டக்கலை, ஓவியம் வரைவது உள்ளிட்ட செயல்பாடுகளும் திசு வீக்கத்திற்குக் காரணமாகலாம். இதன் வழக்கமான அறிகுறிகளாக முழங்கையின் வெளிப்புறத்தில் வலி, தொடும்போது வலி மற்றும் பிடியில் பலவீனம் போன்றவை ஏற்படலாம்.
டென்னிஸ் எல்போ வலியைக் குணமாக்க யோகாசனங்கள்
அதோ முக ஸ்வனாசனா (கீழ்நோக்கிய நாய்)
- இந்த ஆசனத்தை முதலில் கைகள் மற்றும் முழங்கால்களில் தொடங்க வேண்டும்.
- பிறகு மூச்சை வெளியே விட்டு, இடுப்பை மேலேயும் பின்னாலும் உயர்த்தி, உடலை தலைகீழ் V-வடிவத்தை உருவாக்கலாம்.
- கைகள் மற்றும் கால்களைத் தரையில் உறுதியாக அழுத்த வேண்டும்.
- இந்நிலையில் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை அப்படியே இருக்க வேண்டும். பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பலாம்.
மார்ஜர்யாசனம்-பிட்டிலாசனம் (பூனை-பசு ஆசனம்)
- இந்த ஆசனத்தை கைகள் மற்றும் முழங்கால்களில் தொடங்கலாம். இதில் தோள்களுக்குக் கீழே மணிக்கட்டுகள், மற்றும் இடுப்புக்குக் கீழே முழங்கால்கள் இருக்குமாறு வைக்க வேண்டும்.
- மூச்சை உள்ளிழுத்து, வயிற்றை தரையை நோக்கி தாழ்த்தி, மார்பை உயர்த்தி மேல்நோக்கிப் பார்க்கலாம் (பசு போஸ்)
- பிறகு மூச்சை வெளியே இழுத்து, முதுகெலும்பை மேல்நோக்கிச் சுற்றி, கன்னத்தை மார்பு பக்கத்தில் வருமாறு வைக்க வேண்டும் (பூனை போஸ்)
- மூச்சை இயக்கத்துடன் ஒருங்கிணைத்து, 5-10 முறை செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Joint Pain Yoga: மூட்டு வலி சீக்கிரம் குறையணுமா? இந்த 3 யோகாசனங்களை செய்யுங்க
கோமுகாசனம் (பசு முகம் காட்டி)
- இதில் கால்களைக் குறுக்காகக் கொண்டு தரையில் உட்கார வேண்டும்.
- பின் வலது கையை முழங்கையில் வளைத்து, கையை முதுகு நோக்கி கொண்டு செல்ல வேண்டும். உள்ளங்கை உள்நோக்கி இருக்க வேண்டும்.
- இடது கையை முழங்கையில் வளைத்து, கையை முதுகு நோக்கி கொண்டு சென்று உள்ளங்கை வெளிப்புறமாக எதிர்கொள்ள வேண்டும்.
- பிறகு, கைகளை ஒன்றாகப் பிடிக்க முயற்சி செய்யலாம்.
- இந்நிலையில் 30 வினாடிகள் அப்படியே வைத்து, பின்னர் பக்கங்களை மாற்றிக் கொள்ளலாம்.
கருடாசனம் (கழுகு போஸ்)
- இந்த ஆசனத்தில் நேராக நின்று, கால்கள் இடுப்பு அகலத்தைத் தவிர்த்து வைக்க வேண்டும்.
- பிறகு முழங்கால்களை லேசாக வளைத்து, வலது காலை இடது தொடையின் மீது கடக்கவும். முடிந்தால், வலது பாதத்தை இடது கன்றின் பின்னால் இணைக்கவும்.
- பின், வலது கையை இடது கையின் மீது குறுக்காகக் கட்டி முழங்கைகளை வளைத்து, உள்ளங்கைகளை ஒன்றாகக் கொண்டு வரலாம்.
- இந்நிலையில் 30 விநாடிகள் இருந்து, பிறகு பக்கங்களை மாற்றி செய்யலாம்.
திரிகோணாசனம் (முக்கோண போஸ்)
- இந்த ஆசனத்தில் கால்களை அகலமாக விரித்து, கைகளை பக்கவாட்டில் நீட்டி நிற்க வேண்டும்.
- முதுகை நீட்டி, இடுப்பை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- இதில் ஒரு கையை முன்னோக்கி நீட்டி, மறுகையை பின்னோக்கி நீட்டிக்க வேண்டும்.
- பிறகு கையை கீழே கொண்டு வந்து மூச்சை வெளிவிடலாம்.
- இந்த படிகளை மறுபக்கம் மீண்டும் செய்யலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Tadasana benefits: தினமும் தடாசனவை செய்து வந்தால் இந்த 5 நன்மைகளைப் பெறலாம்
Image Source: Freepik