Ashna Zaveri: சக்கராசனம் செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள்!

  • SHARE
  • FOLLOW
Ashna Zaveri: சக்கராசனம் செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள்!


உடல் மற்றும் மன வலிமைக்கு யோகா மற்றும் உடற்பயிற்சி முக்கிய பங்காற்றுகிறது. நடிகை ஆஷ்னா ஜவேரி தனது உடலை பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவ்வாறு அவர் செய்த யோகா ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த யோகாவின் பெயர் சக்கராசனம் அல்லது உர்த்வா தனுராசனம். இந்த பயிற்சி செய்வதன் மூலமாக பல்வேறு உடல் நன்மைகளைப் பெறலாம். இதில், சக்கராசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளையும், எவ்வாறு செய்வது என்பது குறித்தும் காணலாம்.

சக்கராசனம் அல்லது உர்த்வா தனுராசனம்

உர்த்வா தனுராசனம் என்பது சக்கர வடிவலான அமைப்பு அல்லது மேல்நோக்கிய வில் அமைப்பு வடிவிலான யோகாசனம் ஆகும். உர்த்வா தனுராசனம் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும். இதில் உர்த்வா என்றால் மேல்நோக்கி, தனுர் என்றால் வில் என்பது பொருள். எனவே இதற்கு மேல்நோக்கிய வில் ஆசனம் என அழைக்கப்படுகிறது. இதுவே சக்கராசனம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் செய்ய வேண்டிய 5 யோகாசனங்கள்

சக்கராசனம் செய்வது எப்படி?

உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரக்கூடிய உர்த்வா தனுராசனம் செய்வது எப்படி என்பதை இதில் காணலாம். இந்த வகை யோகாசனம் செய்யக்கூடிய சிறந்த நேரம் பிரம்ம முகூர்த்த நேரம் ஆகும். அதாவது, சூரிய உதயத்திற்கு இரண்டு மணி முன்பு இந்த ஆசனம் செய்வதால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். இதில், சக்கராசனம் அல்லது உர்த்வா தனுராசனம் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

  • முதலில் யோகாசம் செய்வதற்கான பாய் அல்லது யோகா மேட்டின் மீது படுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் மெதுவாக முழங்கைகளை மேல்நோக்கி மடக்கி, தோள்களின் கீழ் வைக்க வேண்டும். இதில், விரல்கள் கால்களை நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.
  • பிறகு, முழங்கால்களை வளைத்து உயர்த்த வேண்டும். இப்போது கால்கள் இடுப்பைத் தொடும் வரை பாதங்களை அருகில் கொண்டு வர வேண்டும்.
  • அடுத்து, தலையை மெதுவாக உயர்த்தி அதன் உச்சியை தரையில் வைக்க வேண்டும். இப்போது உடற்பகுதியை மெதுவாக உயர்த்தவும். பிறகு மீண்டும் தலையை உயர்த்தவும்.
  • இதில், ஒட்டு மொத்த உடல் எடையையும் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்கள் தாங்கி இருக்கும். முழங்கைகள் நேராக இருக்குமாறு கைகளை நீட்ட வேண்டும்.
  • பின், குதிகால்களையும் தரையில் இருந்து உயர்த்த வேண்டும்.
  • இந்நிலையில் சாதாரண சுவாச நிலைகளுடன் 30 முதல் 60 விநாடிகள் வைத்திருந்து பிறகு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி உடலைத் தளர்த்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: பிராணயாமாவின் நன்மைகளைப் பெற 6 உதவிக்குறிப்புகள் இங்கே…

சக்கராசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

உர்த்வா தனுராசனம் அல்லது சக்கராசனத்தின், உடல் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.

  • பொதுவாக யோகாசனங்கள் செய்யும் போது மன அழுத்தம் நீங்கி விடும் எனக் கூறுவர். அதே போல, சக்கராசனம் செய்யும் போது மனக்கவலை மற்றும் மனச்சோர்வு நீங்கி உற்சாகத்தைத் தரும்.
  • இந்த ஆசனத்தின் மூலம் உடலின் மையப்பகுதி அதாவது தோள்கள், தொடைப்பகுதி, இடுப்பு, வயிறு போன்றவை நீட்ட உதவும்.
  • இந்த ஆசனமானது எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
  • நுரையீரலின் செயல்திறனை அதிகரித்து, ஆஸ்துமாவை குணப்படுத்த உதவுகிறது.
  • செரிமான செயல்முறைக்கு சக்கராசனம் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த சக்கராசனத்தை தகுதி வாய்ந்த பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் தோள்பட்டையில் காயம் உள்ளவர்கள், முதுகெலும்பு அறுவை சிகிச்சை உட்பட்டவர்கள், உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் கொண்டவர்கள், முதுகு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டியவர்களாவர்.

இந்த பதிவும் உதவலாம்: Surya Namaskar For Weight Loss: எடை குறைப்புக்கு சூர்ய நமஸ்காரம்.! எத்தனை முறை செய்யலாம்.?

Image Source: Freepik

Read Next

Surya Namaskar For Weight Loss: எடை குறைப்புக்கு சூர்ய நமஸ்காரம்.! எத்தனை முறை செய்யலாம்.?

Disclaimer

குறிச்சொற்கள்