How to practice dhanurasana pose and its benefits: அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி, யோகாசனங்கள் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அவ்வாறு ஏராளமான யோகாசனங்கள் நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நல்ல தோரணையைத் தரவும் வழிவகுக்கின்றன. அவ்வாறு உடல் மற்றும் மனதிற்கு வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் உயிர்ச்சக்தியை வழங்கக்கூடிய ஒரு மாறும் முதுகு வளைவு ஆசனமே தனுராசனம் அல்லது வில் ஆசனம் ஆகும். இந்த ஆசனத்தைச் செய்வது மார்பைத் திறந்து, முழு முன் தளத்தையும் நீட்டுகிறது.
இவை உடலின் உள் உறுப்புகள் சரியாக செயல்பட வலிமையை வழங்குகின்றன. மேலும் இதன் வழக்கமான பயிற்சி ஆசனத்தை மேம்படுத்துவதுடன், வயிற்றைச் சுருக்கி ஆற்றலை அதிகரிக்கவும் செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இந்த அற்புதமான ஆசனம் முதுகுவலியை குறைக்கவும், முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. இவை அட்ரீனல் சுரப்பிகளைத் தூண்டி ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
பல நன்மைகளின் கலவையான இந்த ஆசனம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது குறித்து இந்தியன் ஸ்கூல் ஆஃப் யோகா பள்ளி யூடியூப் பக்கத்தில் Dr.A.S.அசோக்குமார் Ph.D.(Y.S.C). தலைமை யோகா சிகிச்சையாளர் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: PCOS பிரச்னையால் தொப்பை போடுதா.? இந்த யோகா ஆசனங்களை ட்ரை பண்ணுங்க..
தனுராசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
செரிமானத்தை மேம்படுத்த
தனுராசனம் செய்வது வயிற்றுத் தசைகளை நீட்டி, நமது உள் உறுப்புகளுக்கு மென்மையான மசாஜ் வழங்க வழிவகுக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது மலச்சிக்கல், வாய்வு மற்றும் மெதுவாக செரிமானம் போன்ற பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க
தனுராசனம் முதுகெலும்பு திசுக்களை நீட்டி பலப்படுத்த உதவுகிறது. இவை நெகிழ்வுத் தன்மையை இயக்க வரம்பையும் மேம்படுத்துகின்றன. இவை உட்கார்ந்த வாழ்க்கை முறையால் ஏற்படும் உடல் விறைப்பைக் குறைத்து ஒட்டுமொத்த தோரணையை மேம்படுத்த உதவுகின்றன.
மார்பு மற்றும் தோள்களைத் திறப்பதற்கு
இந்த வில்வ யோகாசனம் அல்லது தனுராசனம் பயிற்சி செய்வது நுரையீரல் மார்பு தசைகளைத் திறப்பதன் மூலம் ஆக்ஸிஜன் உட்கொள்ளும் திறனை அதிகரிப்பதை உறுதி செய்கிறது. இவை சுவாச செயல்பாட்டைத் தூண்டுகிறது மற்றும் மோசமான தோரணையின் விளைவுகளைக் குறைக்க உதவுகிறது.
முதுகு மற்றும் மைய தசைகளை வலுப்படுத்துவது
தனுராசனம் பயிற்சி செய்வது முதுகு வலியைப் போக்குவது மட்டுமல்லாமல் வயிற்று தசைகளையும் தூண்ட உதவுகிறது. இந்த ஆசனம் முதுகு மற்றும் மையப் பகுதியின் தசைகளுக்கு வலிமை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் சகிப்புத்தன்மையை வழங்குகிறது.
மன அழுத்தம் மற்றும் சோர்வைக் குறைக்க
வில்வ ஆசனத்தை உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் ஆசனம் என்று கூறலாம். ஏனெனில் இது அட்ரீனல் சுரப்பிகளை செயல்படுத்தி மன அழுத்த கார்டிசோல் ஹார்மோன்களைக் குறைத்து மன மற்றும் உணர்ச்சி ரீதியான மீள்தன்மையை வழங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Yoga for belly fat: தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்க இந்த ஒரு யோகாவை செய்தால் போதும்!!
தனுராசனம் எப்படி செய்வது?
- தனுராசனம் செய்வதற்கு முதலில் வயிறு பாயைத் தொடும் வகையில், வயிற்றில் படுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் கைகளை பக்கவாட்டில் வைத்து, உங்கள் கால்களை இடுப்பு அகலத்திற்கு வசதியாக விரித்து வைக்கலாம்.
- கன்னம் மற்றும் நெற்றியை விரிப்பில் வைக்க வேண்டும்.
- கைகளால் உங்கள் குதிகால்களை முடிந்தவரை தரைக்கு அருகில் இழுக்க வேண்டும்.
- கால்களை இடுப்புக்கு மேலே நேராக வைத்திருக்கலாம்.
- பின்னர் உடலை பின்னால் நீட்டி, கணுக்கால்களை கைகளால் பிடித்துக் கொள்ளலாம்.
- மூச்சை உள்ளிழுத்து, மார்பை தரையிலிருந்து தூக்க வேண்டும்.
- இதை செய்யும்போது, முன்னோக்கிப் பார்க்க வேண்டும். பின்னர், கால்களைத் தூக்கி, தொடைகள் மற்றும் மேல் உடலை நீட்டலாம்.
- இந்த ஆசனத்தை 15-30 வினாடிகள் ஆழமாக சுவாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்
- அதன் பிறகு, மார்பு மற்றும் கால்களை மெதுவாகக் கீழே இறக்கியபடி மூச்சை வெளியே விடலாம்.
- இதை விடுவித்த பிறகு, மகராசனத்தில் (முதலை போஸ்) ஓய்வெடுக்கலாம்.
நல்ல தோரணை ஏன் முக்கியம் தெரியுமா?
நல்ல தோரணை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மோசமான தோரணை காரணமாக சோர்வு, முதுகுவலி, செரிமான பிரச்சனைகள் மற்றும் தன்னம்பிக்கை குறைதல் போன்ற பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். தனுராசனம் செய்வது நிலையான தோரணையை மீண்டும் பெற உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உடல் இயக்கத்தையும் ஆதரிக்கிறது. இது ஆழ்ந்த சுவாசத்தை ஊக்குவிப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
தனுராசனம் செய்வது இது போன்ற பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனினும் இது சிலருக்கு உகந்ததல்ல. குறிப்பாக, முதுகு, கணுக்கால், முழங்கால் அல்லது கழுத்தில் காயம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும். மேலும், கர்ப்பிணிப் பெண்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் இன்னும் வேறு சில பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் இதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் இந்த யோகாசனத்தை கட்டாயம் செய்யணும்! ஏன் தெரியுமா? நிபுணர் தரும் டிப்ஸ் இதோ
Image Source: Freepik