Basil Tea Benefits In Winter: பொதுவாக, குளிர்காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். எனவே இந்த காலகட்டத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த வேண்டும். இல்லையெனில், இந்த காலகட்டத்தில் பருவகால நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குளிர்காலத்தில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த பல்வேறு ஆரோக்கியமான பொருள்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவை உடலுக்கு சக்தியை வலுப்படுத்துவதுடன், எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாதவாறு அமைய வேண்டும்.
இந்த சூழ்நிலையில் துளசி டீயை குளிர்காலத்தில் உட்கொள்ளலாம். துளசியில் ஆன்டிவைரல், ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. இவை பருவகால நோய்த்தொற்றுக்களான சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்றவற்றிலிருந்து நிவாரணம் தருகிறது. குளிர்காலத்தில் துளசி டீ அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஃபிட் கிளினிக்கின் டயட்டீஷியன் சுமன் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Peanuts Benefits: நீரிழிவு முதல் மூளை செயல்பாடு வரை.. வேர்க்கடலை தரும் அற்புத நன்மைகள்!
குளிர்காலத்தில் துளசி டீ அருந்துவதன் நன்மைகள்
உடல் எடை இழக்க
குளிர்காலத்தில் துளசி டீ அருந்துவது, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. துளசியில் உள்ள பல்வேறு பண்புகள், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி கொழுப்பை எரிக்கிறது. துளசி டீயைக் குடிப்பதன் மூலம் தொப்பையைக் குறைக்கலாம். மேலும், இது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
நோயெதிர்ப்புச் சக்தி வலுவாக
குளிர்காலத்தில் பருவகால நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்க, நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக வைத்திருப்பது அவசியமாகும். இதற்கு துளசி டீயை அருந்தலாம். துளசி டீயில் நிறைந்துள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை பருவகால நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
மன அழுத்தத்தைக் குறைக்க
குளிர்காலத்தில் பொதுவாக, அடிக்கடி மன அழுத்தம் மற்றும் பதட்டம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம். இந்த சூழ்நிலையில் பல்வேறு பண்புகள் நிறைந்த துளசி டீ அருந்துவது மனதை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. மேலும், பதட்டத்திற்கான அறிகுறிகளைக் குறைக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் மன அழுத்த எதிர்ப்புப் பண்புகள் இயற்கையாகவே துளசி டீயில் காணப்படுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Kadalai Mittai Benefits: குளிர்காலத்தில் வேர்க்கடலை பர்பி சாப்பிடுவதன் நன்மைகள்!
சளி, இருமல் பிரச்சனைக்கு
குளிர்கால சூழ்நிலையில் சளி, இருமல், தொண்டை வலி போன்றவை அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகள் ஆகும். இந்த சூழ்நிலையில் துளசி டீயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் தொண்டை நோய்த்தொற்றைக் குறைத்து உடலை சூடாக வைக்க உதவுகிறது. இவை சளி மற்றும் இருமல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது. மேலும், துளசி டீ அருந்துவது குளிர்கால தலைவலியை நீக்கும்.
முழங்கால் வலிக்கு
துளசி டீ அருந்துவது முழங்கால் வலியிலிருந்து நிவாரணத்தைத் தருகிறது. ஏனெனில் குளிர்காலத்தில் மூட்டு வலி பிரச்சனையை பலரும் அடிக்கடி சந்திப்பர். இந்த சூழ்நிலையில் துளசி டீ அருந்துவது, அதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் முழங்கால் வலியைப் போக்க உதவுகிறது.
துளசி டீ தயாரிக்கும் முறை
- துளசி டீ தயாரிக்க முதலில் 1 கப் நீரை சூடாக்க வேண்டும்.
- தண்ணீர் சூடான பிறகு 5 முதல் 6 துளசி இலைகள் மற்றும் 1 அங்குல துண்டு இஞ்சி சேர்க்கவும்.
- பின் இந்த தேநீர் கொதித்ததும், வடிகட்டி, வெதுவெதுப்பாக்கி பிறகு குடிக்கலாம்.
இவ்வாறு துளசி டீ குளிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இருப்பினும், ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருப்பின், மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு துளசி டீயை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Raw Onion Benefits: இதய நோய் முதல் கேன்சர் வரை.. பச்சை வெங்காயம் தரும் அற்புத நன்மைகள்.!
Image Source: Freepik