புஜங்காசனம் செய்வதன் மூலம் மார்பக அளவை குறைக்க முடியுமா? நிபுணர் என்ன சொல்கிறார்

Is cobra pose effective for reducing breast size: உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஆசனங்களில் ஒன்று புஜங்காசனம் ஆகும். இது நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது. ஆனால், இது மார்பக அளவை பாதிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இதில் புஜங்காசனம் செய்வது மார்பக அளவை குறைக்க உதவுமா என்பது குறித்து காண்போம்.
  • SHARE
  • FOLLOW
புஜங்காசனம் செய்வதன் மூலம் மார்பக அளவை குறைக்க முடியுமா? நிபுணர் என்ன சொல்கிறார்


How bhujangasana affects breast size and chest muscles: நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் யோகாசனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. யோகாசனங்களைப் பொறுத்த வரை ஏராளமான ஆசனங்கள் உள்ளன. இந்த வரிசையில் புஜங்காசனம் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடிய மிகவும் எளிதான யோகாசனம் ஆகும். இது ஆங்கிலத்தில் கோப்ரா போஸ் என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஆசனம் ஆகும். இதை ஆண்கள், பெண்கள் இருவரும் செய்யலாம்.

இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் உங்கள் வயிற்றில் படுத்து, உங்கள் முதுகு தசைகளைப் பயன்படுத்தி மெதுவாக உங்கள் மார்பை வானத்தை நோக்கி, அதாவது மேல்நோக்கி உயர்த்த வேண்டும். அதாவது ஒரு நாகப்பாம்பு மேலே எழுவது போல அமைப்பு இருப்பதாகும். இந்த ஆசனம் செய்வது உடலுக்கு ஆற்றலை வழங்கவும், இதய ஆரோக்கியத்திற்கும் மற்றும் இன்னும் பல நன்மைகளைத் தருகிறது. இது மார்பக அளவைக் குறைப்பதிலும் உதவியாக இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர்.

இதில் புஜங்காசனம் செய்வது மார்பக அளவை குறைக்க உதவுமா என்பது குறித்து உலகளாவிய யோகா ஆசிரியரும் அகண்ட் யோகா நிறுவனத்தின் நிறுவனருமான டாக்டர் யோகிரிஷி விஷ்வ்கேது அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: மசாஜ் செய்வதால் மார்பக அளவு அதிகரிக்குமா?

மார்பக அளவைக் குறைக்க புஜங்காசனம் உதவுமா?

டாக்டர் யோகிரிஷி விஸ்வகேதுவின் கூற்றுப்படி, புஜங்காசனத்தின் மூலம் மார்பக அளவைக் குறைக்க முடியும் என்பது வெறும் கட்டுக்கதை. இது குறித்து விரிவாக, டாக்டர் யோகிரிஷி விஸ்வகேது கூறுகிறார். அவரின் கூற்றுப்படி, “மார்பகங்கள் தசைகள் அல்ல. இது கொழுப்பு திசுக்கள், சுரப்பிகள் மற்றும் தோலால் ஆனவையாகும். எனவே, ஒரு சில மார்புப் பயிற்சிகள் அல்லது புஜங்காசனத்தின் உதவியுடன் மார்பக அளவைக் குறைக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “மார்பக அளவு பெரும்பாலும் மரபியல், ஹார்மோன்கள் மற்றும் உடலில் உள்ள மொத்த கொழுப்பால் தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பிட்ட யோகா ஆசனங்களால் அல்ல. எந்தவொரு யோகாவின் உதவியுடனும், நம் உடலின் குறைபாடுகள் மற்றும் குறைபாடுகளை சிறந்த முறையில் புரிந்துகொள்கிறோம். ஆனால், உடலின் எந்தப் பகுதியின் அளவையும் இதன் மூலம் மாற்ற முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

புஜங்காசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

  • இது மார்பு, வயிற்று தசை மற்றும் தோள்களின் முன்பக்கத்தை பலப்படுத்த உதவுகிறது.
  • இந்த ஆசனம் பின்புற தசைகளை பலப்படுத்துகிறது. குறிப்பாக முதுகெலும்பு மற்றும் முதுகு தசைகள் மேம்படுத்துகிறது.
  • இது ஆழமான தசைகளில் ஒரு நீட்சியை உருவாக்குகிறது. உண்மையில், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதன் காரணமாக, ஆழமான தசைகளில் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. எனினும், புஜங்காசனம் செய்வதன் மூலம் இந்த பிரச்சனையை நீக்கலாம்.
  • இந்த ஆசனம் செய்வது திசுப்படலத்தையும் பாதிக்கிறது. திசுப்படலம் என்பது தசைகள் மற்றும் உறுப்புகளை உள்ளடக்கிய ஒரு மெல்லிய, பிசின் திசு என்று கூறுகிறோம்.
  • புஜங்காசனம் செய்வது மார்பு மற்றும் இடுப்புக்கு நன்மை பயக்கும் ஆசனமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga For Thyroid: தைராய்டு பிரச்சனையால் அவதியா? இந்த யோகாசனங்களை செய்யுங்க.

நிபுணர் கருத்து

மார்பக அளவை அதிகரிக்க அல்லது குறைக்க யோகாவை நாடுவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மாற்றாக, உடல் ஆரோக்கியமாக இருக்க யோகா செய்யலாம். இது உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நல்ல விளைவைத் தருகிறது. ஆனால் சில சூழ்நிலைகளில் புஜங்காசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

- கார்பல் டன்னல் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டிருப்பின் புஜங்காசனம் செய்யக்கூடாது.

- கழுத்து அல்லது தோள்பட்டை காயம் இருந்தால், புஜங்காசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

- சமீபத்தில் வயிற்று அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ அல்லது வயிறு தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ புஜங்காசனம் செய்யக்கூடாது.

- மணிக்கட்டு வலி அல்லது காயம் ஏற்பட்டால், இந்த ஆசனம் செய்வது மணிக்கட்டுக்கு தீங்கு விளைவிக்கலாம் மற்றும் வலியை அதிகரிக்கலாம்.

- இது தவிர, இதய நோய் அல்லது வேறு ஏதேனும் கடுமையான நோய் இருந்தால், புஜங்காசனம் செய்வது சரியாக இருக்காது.

இந்த பதிவும் உதவலாம்: Cobra Pose Benefits: புஜங்காசனம் செய்வது எப்படி? அதன் நன்மைகள் என்னென்ன?

Image Source: Freepik

Read Next

ஒன்றல்ல! இரண்டல்ல! பல மடங்கு நன்மைகளை அள்ளித் தரும் கணேச முத்ரா! இதை எப்படி செய்யணும்னு பாருங்க

Disclaimer